சிந்தனை துளிகள் மூலம் உலகிற்கு உணர்த்தும் உண்மையும், அதன் இயல்பான தத்துவத்தையும் இப்பதிவில் சமர்ப்பித்து உள்ளேன்.
- “உழைத்தல்” என்பது இயல்பு தன்மையாக மாறினால் மட்டுமே, மண்ணை விண்ணாக மாற்றும் ஆற்றல் மனித இனத்திற்கு உருவாகும்.
- சோதனையே சாதனை தரும்.
- “புகழ்” என்றால் புன்னகை கொள்வதும், “இகழ்” என்றால் இழிவாக எண்ணுவதும், வாழ்க்கை வாழ வழி வகுக்காது.
- நடைமுறையில் தோன்றுவதே “நம்பிக்கை”
- உரிமையையும், உடைமைகளையும் வழங்குவதைவிட, தகுதியையும், திறமைகளையும் வழங்குவதே சாலச் சிறந்தது.
- சொல் எளிது! செயல் பெரிது!