பூவுலகத்தில் பூக்கும் புளிச்ச கீரை!

பூவுலகத்தில் பூக்கும் புளிச்ச கீரை!

புளிச்ச கீரை

புளிச்ச கீரை

“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்
யோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்
வெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்
புளிச்சிறு கீரையிணும் போது”

முகவுரை:

சித்த பாடல்களில் மூலம்  புளிச்சிறு கீரை மனித குலத்திற்கு மறுமலர்ச்சியாக திகழ்ந்து வருகிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதன்  மற்றொரு புனை பெயரான காச்ச கீரையென்றும் இதனை அழைப்பர்.

புளிச்சிறு கீரை:

சித்த  மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களின் அதிகப்படியான அறிவுரை காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுவது போன்று பல வகை கீரையையும் அடிக்கடி சாப்பிடுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.நமது பாரத நாட்டில் எத்தனையோ வகையான கீரைகள் இயற்கையாகவே இந்த பூமியில் முளைக்கின்றன,அதிலும்  அதிகம் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சில கீரை வகைகளே உள்ளன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஒன்று தான் புளிச்ச கீரை ஆகும். இந்த உணவில் சேர்த்துக்கொள்ளும்போது ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவ பயன்கள்: 
  • புற்றுநோய்: உடலில் செல்களிநால்  ஏற்படும் சில பல  மாற்றங்களால் புற்று நோய் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகயளவு இப்பொது நடைமுறையில் நிலவுகிறது. பல வகையான இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய நோய் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. இவ்வகையான வியாதிகளை பூரணமாக முறியடிக்க  புளிச்ச கீரையை அதிகளவில் உணவில் உட்கொள்ளபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை எளிதில் குறைக்கிறது.
  • வயிற்று புண்கள்: காலை வேளையில்  உணவு உண்ணும் பழக்கத்தை  தவிர்ப்பதாலும், காலை உணவை மதியம் சாப்பிடுவதாலும், அதிகமான  காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு உணவை செரிமாணம் செய்வதில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.குழம்பு, கூட்டுவகைகளில் சேர்த்து  புளிச்ச கீரையை உண்ணுவதால்  குடல் புண்களை ஆற்றி, மலச்சிக்கல் பிரச்சனைகளையும்  தீர்க்க  உதவுகிறது.
  • மாதவிடாய்: காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், மாதவிலக்கு தள்ளிப்போதால் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளால் இடுப்பு, அடிவயிறு வலி ஏற்பட்டு துன்புறுகின்றனர், இத்தகைய இயற்கை சூழலிலுருந்து விடுபட புளிச்ச கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீர்வை உண்டாக்கிறது.
  • தோல் வியாதிகள்: சிறந்த இயற்கை நிவாரணமாக இருக்கும் புளிச்ச கீரையை நன்றாக அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் தடவிவந்தால் விரைவில் தோல் வியாதிகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது. அத்துடன் இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடண்டுகள் தலைமுடி, தோல் போன்றவற்றின் நலத்தை மேம்படுத்தி பாதுகாக்கின்றது.
  • ரத்தசோகை: நமது உடலில் காணப்படும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியானது மிகவும்  குறைவால் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. வைட்டமின் சத்துக்கள் புளிச்ச கீரையில் அதிகளவு நிறைந்துள்ளதால் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, ரத்த சோகை குறைபாட்டை போக்க நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது. 
  • நுண்கிருமி: (உடலில், உணவில் வாழும்) நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினம் நிறைந்த அமிலங்கள் கொண்ட ஒரு உணவு பொருளாகும். இதில் காணப்படும் காரத்தன்மை மிகுந்த வேதிபொருள் அனைத்துவகையான கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. புளிச்ச கீரையை வாரம் இருமுறை  உணவில் உட்கொள்ளுபவர்களுக்கு அவர்களின் ரத்தம், செரிமான உறுப்புகள் போன்றவற்றில் தங்கியிருக்கும் தீமை விளைவிக்கும் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் (திட அல்லது திரவ வடிவில் இருக்கும்) மருந்தின் மூலம்  அழித்து அவர்களின் உடலை வியாதிகளின் தாக்கத்தில் இருந்து காக்கிறது.
முடிவுரை:

பழங்கால முன்னோர்களின் கூற்றுகளை பின்பற்றி இயற்க்கை வளங்களை பாதுகாத்து இயற்க்கையோடு ஒன்றி சமுதாயத்தை பேணிக்காக்க அனைவரும் ஒற்றுமையாக திகழ பாடுபடுவோம்.

குப்பைமேனி! குலத்தை காக்கும் ராணி

குப்பைமேனி! குலத்தை காக்கும் ராணி

குப்பைமேனி

குப்பைமேனி

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று"
 - திருக்குறள்

முகவுரை:

நாம் வாழும் பகுதிகளில் அனைத்து தெருவோரங்களிலும், சாலையோர பகுதிகளிலும், நிலங்களிலும் வளரும் செடி இந்த குப்பைமேனி.

குப்பை மற்றும் புதர்களின்  ஓரங்களில் வளருவதால் இதற்கு, குப்பைமேனி என்ற பெயர் சூட்டியுள்ளார்கள் .

இதன் முழுத்தாவரத்தில்  வேதிப்பொருட்கள், மற்றும் மருத்துவ குணங்களான அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பெருமளவில் காணப்படுகின்றன.

வளரியல்பு : 

பெரும்பாலும் இந்தியாவின் வெப்பம் மிகுந்த பகுதிகளில் ஒரு மீட்டர்  வரை வளரக்கூடிய ஒரு குருஞ் செடியானது இந்த குப்பைமேனி.

ஓராண்டுத் தாவரமான குப்பைமேனியின்  இலைக் காம்புகள் நீண்டு காணப்படும் தன்மையும் கொண்டது. மடல் விளிம்பானது முட்டை அல்லது சாய் சதுர முட்டை வடிவம்  கொண்டது.

தண்டின் அடிபகுதியில்  இலைகளின் காம்பு நீளமாகவும் மேலே செல்ல செல்ல  குறுகியும் காணப்படும்,

இலைகலையின் மேல்  மஞ்சரிகள் காணப்படும். ஒரே ஒரு விதை கொண்டவை. விதை முட்டை வடிவம்பெற்று நுனி நீண்டும் காணப்படும்.

மருத்துவ மூலிகைச் செடியான குப்பைமேனியின்  புனைபெயரான அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி என அழைக்கப்படுகிறது.

குப்பைமேனி :

சித்த மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான மூலிகைகளின்  பற்றிய குறிப்புக்கள் இருந்தாலும், அவற்றுள் பெரும்பாலானவை மனித சமூகம்  இல்லாத பகுதிகளில் வளரும் மூலிகைகள் தான் அதிகம்,  ஆனால் மனிதர்கள் வாழும் பல பகுதிகளில்  அவர்களுக்கு அருகாமையிலேயே பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகள் இயற்கையாகவே  இருக்கின்றன.

மருத்துவ பயன்கள்: 
  • எதிர்பாராத வீக்கம் உடலில் நமக்கு ஏற்படும்  சமயங்களில் குப்பைமேனி செடிகளின் இலைகளைசிறிதளவு  பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி  போன்றவை குறையும்.
  • குப்பைமேனி இலைச்சாற்றை  தினந்தோறும் காலை மாலை  குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும்.
  • சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளை அகற்ற மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.
  • இயற்க்கை வளம் மிகுந்துள்ள சுற்றுப்புற சூழலில் அதிகமான மரம், செடிகொடிகள், புள், பூண்டுகள் மற்றும் புதர்கள்  நிறைந்துள்ளதால்  அதிகமான விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளால் கடிபட்டவர்களுக்கு  குப்பைமேனி இலையை நன்றாக நீரில் கொதிக்க  வைத்து பருகினால் விஷம் உடலில் ஊடுருவதை தடுக்க  உதவுகிறது.
  • குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து நீண்ட நாட்களாக ஆறாத புண்களின் மீது பற்று போட்டு வந்தால்  உடனடியாக குணமடைய வழிவகை செய்யும், வயிற்று பகுதிகளில் ஏற்படும் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற பிரச்சனைகளை தீர்க்க தொண்டு புரிகிறது.
  • குப்பைமேனி இலைச்சாறு நீரிழிவு வியாதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை பெருமளவு குறைக்க உறுதுணையாக இருக்கிறது.
  • கொசுக்களால் பரவக்கூடிய மலேரியா போன்ற வியாதிகளை குணபடுத்த சிறந்த தீர்வை குப்பைமேனி  தருகிறது.
முடிவுரை: 

மருத்துவப் பயன்கள் கொண்ட குப்பைமேனியின் அணைத்து பாகங்களும் மருந்தாக பயன்பட்டு இயற்கையின் சிறப்பினை எடுத்துரைத்து மனித சமூகத்திற்கு பெரும் உதவிப்புரிந்து எலிக்கடி விஷம்,  யானைக்கால் சுரம், சுவாசக் கோளாறுகள்,பாதவெடிப்பு, மூட்டு வலி, மார்பு வலி, உடல் வலி, முடிநீக்கம், மலேரியா, சொறி, சிரங்கு நீங்க,  கோழைக்கட்டு, மலச்சிக்கல், பவுத்திரம், தோல் நோய் போன்ற எண்ணற்ற பலனை அள்ளித்தரும் குப்பை மேனி இலை! பாதுகாப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

இயற்கை வரமே! என்றும் கொய்யா மரமே!

இயற்கை வரமே! என்றும் கொய்யா மரமே!

கொய்யாமரம்

கொய்யா மரம்

"உண்டிமுதற்றே உணவின்பிண்டம்
 உணவெனப்படுவது நிலத்தொடு நீரே"
 - புறநானூறு

முகவுரை:

நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது உடலில் உள்ளிருக்கும் உயிரை பேணிக்காக்கும் அருமருந்தாகும். ஒவ்வொருவரும் காயத்திற்கு பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உணவை எடுத்துக்கொள்வதினால் பிணிகள் உற்பத்தியாகின்றன என்ற தத்துவத்தை இயற்கை வரமே! என்றும் கொய்யா மரமாக சங்க இலக்கிய புறநானூறு பாடல்களின் மூலம் தெளிவுபெறுகிறது.

இயற்கை உணவுகளை அதிகமாக உண்ணும் அனைத்து ஜீவராசிகளும் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

கொய்யாமரம்:

மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா தேசங்களில் தாயகமாக கொண்ட சிறு மரவகையை சேர்ந்தவையாகும்.

இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள காடுகளில் வளர்வதுண்டு. ஏறக்குறைய முப்பது அடி உயரம் வளரும் தன்மை கொண்டதாகவும், வெப்பமான பிரதேசங்கள், களிமண் மற்றும் மணல் போன்ற தட்பவெப்பம் நிறைந்த பூமியில் விருத்தியாகும்.

பூக்கள் பூத்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து (கொத்து கொத்தாக )காய்கள் விடக்கூடியது. காயானது பசுமை நிறமாகவும், பழமானது மஞ்சள் கலந்த செந்நிறமாக இருக்கும். மேலும் பழத்தினுள் வெண்ணிறமான சதைப்பற்றுடன் விதைகள் நிறைந்திருக்கும். அதிலும் ஒரு சில வகை கொய்யா பழத்தில் சதைப்பற்று இளம் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.

இனிய மணத்தை கொண்டிருக்கும் கொய்யாப்பழத்தில் சில வகைகள் உள்ளன. கீழ்ப்பகுதி பெருத்தும் அதன் நுனியானது கூம்பு வடிவிலும் மற்றொரு வகை கோள அல்லது குண்டு வடிவத்தில் இருக்கும்.

எதிர் எதிர் கோணத்தில் இலைகளையும் வெள்ளை நிறங்களையுடைய மலர்களையும், உராய்வு இல்லாமல் வழுக்குவதாக அமையும் தன்மையான பட்டையையும் உடைய மரமாகும்.

நன்மை தரும் பாகங்கள்:

  • இலை
  • பூ
  • காய்
  • பழம்
  • வேர்
கொய்யா மரம்

ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கலோரி, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், ஃபோலேட், பீட்டா கரோட்டீன் முதலியவை.

மருத்துவ பயன்கள்: 

  • நான்கு அல்லது ஐந்து கொய்யா இலையை அரிந்து ஒரு காய்ந்த மிளகாயுடன் இளம்சூட்டில் வதக்கி போதுமான அளவிற்கு நீரில் கொதிக்கவைத்து பிறகு வேறு எதுவும் கலந்திராத வண்ணம் உண்டுவர கக்கல், சோர்வு, வாய்ப்பொருமல், உடலை மெலியச்செய்யும் நோய், நீர்வேட்கை போன்ற வியாதிகளை தீர்க்கும்.
  • இலையை மெய்ம்மையில் போட்டு மென்று பின் பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான பற்சொத்தை மற்றும் துர்நாற்றம் நீங்கும்.
  • மேல்தோலில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை குணப்படுத்த கொய்யா இலைகளை அரைத்து காயம் ஏற்பட்ட பகுதியின் மேல் தடவினால் விரைவில் குணமடையும்.
  • கொய்யாமர வேர்ப்பட்டையானது உலர்ச்சியை போக்குவதுடன், குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை சரி செய்ய உதவுகிறது.
  • கொய்யாப்பழத்தை இரண்டாக வெட்டி உண்ணுவதை விட பழத்தை சுத்தமான நீரில் கழுவி பின்பு பற்களால் கடித்து நன்றாக மென்று உண்ணுவதால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலப்படும் ஆற்றலை உருவாக்குகிறது.
  • கொய்யா மரத்தின் மெல்லிய வேர்களை சிறு சிறு துண்டுகளாக தண்ணீர் நிரப்பப்பட்ட மண் பானையில் சேர்த்து விடியற் காலையில் அருந்திவந்தால் வயிற்றுப் போக்கு குணமடையும்.
  • தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப் பகுதிபலம் பெற கொய்யா பழம் உதவிபுரிகிறது.
  • செம்பு சத்து அளவிற்கு அதிகமாக கொய்யா பழத்தில் இருப்பதால் "தைரொய்ட்" தொண்டை புண்களை சீரான தன்மையை ஏர்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்கிறது.
  • இரத்த ஓட்டம் குறைவதால் சருமம் வெளிறிப்போதல், உடல் சில்லிடும் அளவுக்கு மிகுந்த பயம் ஏற்படுதல் இரத்தத்தின் நீர்ம தன்மையை தடுக்கும் சக்தி கொய்யா பழத்திற்கு உண்டு.
  • வைட்டமின் சி மிகுந்த அளவு கொய்யா பழத்தில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்குகிறது.
  • புற்று நோய்வியாதிகளுக்கு கொய்யா பழம் மிக சிறந்த தீர்வாகுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • நீரிழவு நோயாளிகளுக்கு கொய்யா பழம் உண்ணுவது மிகவும் நல்லது.
  • கொய்யா நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளித்து, செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
  • எல்.டி.எல் ஆக்ஸைடுஎன்னும் தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
  • ஊட்டச்சத்து, இரத்தச்சோகை, ஹார்மோன் குறைபாடுகளால் வரும் ( இளநரை ) முடி வளர்ச்சியையும், கரு நிறத்தைபராமரிக்கவும் கொய்யா இல்லை உதவிபுரிகிறது.
  • ஆன்டி ஆக்சிடன்ட்கள் மூளையின் உற்பத்தியான நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் அதிகரிக்க செய்து, நினைவின்மை ஏற்படாமல் தடுக்கிறது.
  • நாம் நாசின் மூலம் சுவாசிக்கும் போது மாசடைந்த காற்றால் உடலுக்குள் செல்லும் நச்சுத்தன்மையை வெளியேற பயனுள்ளதாய் அமைகிறது.
முடிவுரை: 

இயற்கை வரமே! என்றும் கொய்யா மரமாக நோய் எதிர்ப்பு சக்தியை மேன்மைப்படுத்த கொய்யா மரங்களை ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் வீட்டிலும் வளர்பது மிக முக்கியம்.

பயத்தங்காய்! பயறும்... பழங்கால பலமும்...

பயத்தங்காய்! பயறும்... பழங்கால பலமும்...

பயத்தங்காய்

பயத்தங்காய்

"அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே"

முகவுரை:

திருமூலர் கூறும் பாடல் வரிகளின் அண்டமும், பிண்டமுமாக இயற்கையில் காணப்படும் அனைத்தும் இவ்வுலகத்தில் முதன்மையானதாக திகழ்கிறது.
பயத்தங்காய்! பயறும்... பழங்கால பலமும்... சாகாமையைத் தரக் கூடிய தேவ உணவிற்கு சமமாக ஏழை எளியவர்களுக்கு பயன்படும் தாவர வகைகளாகும். இதனை தட்டைப்பயறு, தட்டாம்பயறு, பயற்றங்காய் என்றும் கூறுகிறோம்.

தோற்றம்:

புன்செய் நிலத்தில் ஊடுபயிராகப் பயிரிடப்படும்) கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்பை  ஆப்பிரிக்காவில் முதன் முதலில் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பயறு  பயன்படுத்தப்பட்டதாக கருத்து நிலவுகிறது. 200 முதல் 300 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காளங்களில் இந்திய நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் என வல்லுநர்கள் தன் பதிவை முன்மொழிந்துள்ளார்கள்.

தற்போது பல நாடுகளில் காராமணியை பயிரிடப்பட்டு தாவர வளற்சியை பெருக்கி இயற்கையான ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

வளரியல்பு:

உயரம் அதிகம் இல்லாமல் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் தாவரமாக வளரும் காராமணியானது வறண்ட நிலப்பரப்பு பகுதிகளிலும், செம் மண்ணிலும் செழித்து வளரும் தன்மையை கொண்டது.

இத்தாவரத்தின் வேர்களானது பாக்டீரியாக்கள் பூமி முதலிய கிரகங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்லைவரை அமைந்திருக்கும் காற்று வெளி நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை செழுமையாக்குகின்றன.

பூக்களானது தோற்றத்தில் மணி வடிவிலும் வெள்ளை, இளம்சிவப்பு, மஞ்சள், ஊதா மற்றும் கருஊதா நிறங்களில் காணப்படும். 

பயத்தங்காய் காய்களானது பூக்களிலிருந்து நீண்டு உருளைவடிவமாகவும், செடியின் வளர்ச்சி தன்மைக்கேற்றவாறு சுமாராக 5-20 விதைகளை உடையதாக காணப்படும். 

பயத்தங்காய் விதையானது ஐந்து ஆண்டு காலம் வரை முளைக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்

பயத்தங்காய் முதிர்ந்த தருணத்தில் தானாகவே வெடித்து சிதறும்  பபேசியே பூக்கும் தாவர வகையை சேர்ந்தவையாகும். பெரும்பயறின் அறிவியல் பெயர் விக்னா ஆகும். உங்குயிகுலாட்டா என்ற இன வகையை சேர்ந்த

காராமணி காய், விதைகளும் உணவூட்டமாக மனித சமூகத்திற்கும், கால்நடைகளுக்கும் பயன்பட்டு வருகின்றன.

பயத்தங்காய்
பயறு வகைகள்:

  • சிவப்பு காராமணி
  • வெள்ளை காராமணி 

ஊட்டச்சத்துக்கள்:

விட்டமின் பி1, தயாமின், பி9 ஃபோலேட்டுகள், பி5 பான்டாதெனிக் அமிலம், பி6 பைரிடாக்ஸின், அதிகளவும், பி3 நியாசின், பி2 ரிபோஃப்ளோவின், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், பயோசனின் என்ற பைட்டோ நியூட்ரியன், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமான அளவில் காணப்படுகிறது.

பண்புகள்:

  • சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்திருப்பதுமான தசையால் ஆன உள் உறுப்பு இதய செயலிழப்பை தடைசெய்து, இருதயம் மேம்படுத்த காராமணியில் காணப்படும் விட்டமின் பி1(தயாமின்) பெரிதும் உதவுகிறது.
  • நச்சுப் தன்மையை வெளியேற்ற காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் பெரிதும் உதவிபுரிகின்றன.
  • வளரும் சிறுபிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துக்களை ஏற்படுத்த மிகவு உகந்தது.
  • Anti-Oxidants மிகுதியாக நிறைந்துள்ளதால் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அழிக்க பெரிதும் உதவுகிறது.
  • மூளையில் இரத்தக் கசிவு அல்லது உறைவு காரணமாக உடலின் ஒரு பக்கத்தைச் செயல் இழக்கச்செய்யும் நோய் வகையான பக்கவாதம் (stroke)வியாதிகளுக்கு தீர்வு அளிக்கும்.
  • நோய் எதிர்க்கை சக்தியை அதிகப்படுத்தி செல்களில் ஏற்படும் பிறழ்சி தடுக்கப்பட்டு இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • உடல் அல்லது மனம் செயல்படச் சக்தியற்ற நிலையையும், (பெரும்பாலும் இரவில்) கண்களை மூடி இயற்கையாக புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலைகளையும் சீரான அளவை ஏற்படுத்த வழிவகை செய்கிறது.
  • பிராணவாயுவை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறம் கொண்ட உயிர் அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
  • ஆன்டிஆக்ஸிஜென்டுகள், விட்டமின் சி, புரதம் போன்றவை சரும பாதுகாப்பிற்கும் உதவுகின்றன.
  • குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்பு சரிசெய்வதோடு புதிய திசுக்கள் வளர்ச்சி பெற பெரிதும் உதவுகிறது.
  • பயத்தங்காய் உடலுக்கு குளிர்மையை தருவதோடு.உணவுவேட்கையை தூண்டும், நீரைப் பெருக்கும் தன்மையுடையது.
  • சர்க்கரை நோயாளிகள் காராமணியை உண்ணும்போது இன்சுலின் சுரப்பினை சீராக்குவதுடன்.
  • கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் ஆற்றல் பெறுவதற்கு உதவுகிறது.
  • காராமணி மூட்டு வலிக்கு சிறந்த தீர்வை அளித்து உடல் ஆரோக்கியமாக திகழ வழி செய்கிறது.
  • தொற்று வியாதிகளை எளிதில் விரட்ட தூண்டுகோலாய் அமைகிறது.
முடிவுரை: 

பயத்தங்காய்! பயறும்... பழங்கால பலம்...மூலம் குழம்பு, சுண்டல், அவையள், துவையல்தோசை முதலிய உணவுவைகளை உண்டு உடல் ஆரோக்கியமான வாழ்வை வாழ ஒரு அங்கமாய் விளங்குகிறது.

எங்கும் எள்! எதிலும் எள்... தமிழிலும் எள்! தரணிலும் எள்!

எங்கும் எள்! எதிலும் எள்... தமிழிலும் எள்! தரணிலும் எள்!
எள்

எங்கும் எள்! எதிலும் எள்...

“எள்கலின்றி இமையவர்கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்
உள்ளத்துள்கி உகந்து உமைநங்கை வழிபடச் சென்றுநின்றவாகண்டு
வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே”

தேவாரத்தில் "எள்ளை" பற்றி சுந்தரர் பாடலை "திருப்பாட்டு" என்று அழைக்கின்றனர்

முகவுரை:

"இகழ்தல் எண்டிசையோரும் எள்க" சீவக சிந்தாமணியிலும், "அஞ்சுதல் ஓர் பாலகன் வந்து என் மகளை எள்கி" நாலயிரதிவ்யப்பிரபந்தமும், "பழிவந்து மூடுமென்று எள்குதும்" திருச்சிற்றம்பலக்கோவையார் நூல்களிலும், "செங்களம் பற்றி நின்று எள்கு" திவ்யார்த்த தீபிகை பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

சங்க இலக்கியத்தில் “கௌவை அஞ்சிற் காம மெய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே, பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய சிதட்டுக்காய் எண்ணின் சில் பெயல் கடைநாள்”குறுந்தொகை பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

செந்தமிழ் மொழியான தொல்காப்பியம் முதலாகச் சங்க இலக்கியம் வரையிலான அனைத்துத் தமிழ் இலக்கியங்களிலும் எள் குறித்த செய்திகளைத் விளக்கம் அளித்திருப்பது தமிழின்பம் படைத்ததாகும். எள் உற்பத்தி அதன் பயன்பாடு, உணவுப் பொருளாக அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை அனைத்தையும் கோர்வையாக படிப்பவர்களுக்கு மிக்க பயனுடைய வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கும். 

எள்:

எள்' என்பது எண்ணெய் வித்துப் பயிர், இதனை எள்ளுச்செடி என்பர். செடியில் காய்க்கும் காய்களினுள் பல வித்துக்கள் இருக்கும். எள் தமிழ்நாட்டின் பழம்பெரும்பயிராகும். எண்ணெய் வித்துப் பயிர்கலிலே முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. ஒன்பது வகைக்கூலங்களில் எள் தலையானது.

எள்ளை இருள், புள், வள், மக்கள் என்னும்  என்னும் பெயர்க்குத் சொற்களுக்கு புணர்ச்சிவிதி கூறுபவர். எள்ளிர்க்கு  தொல்காப்பியர் “புணர்ச்சி விதி” கூறவில்லை.

எள் வகைகள்:

  1. கார் எள்
  2. சிவப்பு எள்
  3. வெள்ளை எள்
  4. காட்டு எள்
  5. மயில் என்
  6. பேய் எள்
  7. காட்டுமயில் என்
  8. முலை எள்
  9. சிறு எள்

என எள் ஒன்பது வகைப்படும்.

எள் என்பது அளவில் சிறுமையின் அடையாளமாக கருதப் பெற்றது. கடுகினும் எள் நுட்பமுடையது, கடுகில் பெருங் கடுகு உண்டு. எள்ளில் சிறியதே உண்டு. கடுகளவு என்பதினும் எள்ளளவு என்பது மேலும் சிறுமையைக் குறிக்கும். இம்மி, தேர்த்துகள் என்பன. எள்ளினும் சிறிய பரிமாணங்கள், "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தகுறள்" எனக் கடுகு சிற்றெல்லைக்குக் கூறப்பட்டது.

எங்கும் எள்! எதிலும் எள்...

"செந்தமிழ் என்பன சிறுமைக்குப் பேரெல்லை
கடல் என்பது பெருமைக்குப் பேரெல்லை"

எள் - எள்ளல், இகழ்தல், சிறியதெனக் கருதுதல் காள்ளல் - இகழ்ச்சி (தொழிற்பெயர்) எள்- எளிமை (பெருமையாகக் கருதாமை) எளியோர் - சிறியோர் திடப்பொருள்களில் மலை பெருமையை கூறுவார்கள். ஆனால் எள் எண்ணெய்வித்து பொருளாக இருந்தாலும் சிறுமையின் திரவப் (நீர்மை) பொருள்களாகும். 

தமிழ் பெயர்கள்:

  1. எள்ளின் பழம் பெயர் எண் ஆகும்
  2. எள் கார்ப் பருவப் பயிர்
  3. மழை மிகுதியாயின் எள்ளுக்காய் உள்ளீடு அற்றதாகும்.

வளரியல்பு:

நிலைத்திணை என்பதைத் தாவரம் என்பர். எள் தமிழக நன்செய்ப் பயிராகவும் கொல்லைப் பயிராகவும் அமைந்திருந்தது. எள்ளுச் செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.

எள்ளுச்செடி 40 முதல் 120 செ.மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகள் எதிரிடை அடுக்கில் அமைந்திருக்கும். தும்பை இலையை போன்று பெரிதாக இருக்கும்.மேலும் வெண்மை நிறமான பூக்களை பூக்கும் தாவரமாகவும், மகரந்தச் சேர்க்கையை பூக்களின் மூலமாகவே ஏற்படுத்திகொண்டு காயாக உருவாகும்.

காய்கள் ஆகாயத்தை பார்த்த வண்ணம் மேல் நோக்கி இருக்கும். ஒரு காயில் சுமார் 50 லிருந்து 150 விதைகள் செடியின் தன்மைக்கேற்ற வகையில் இருக்கும் . காய்கள் முற்றியவுடன் அறுவடை செய்து களத்தில் காய்கள் மேல் நோக்கி இருக்கும்படி வைத்து வெயிலில் உலரவைப்பார்கள். காய்கள் நன்கு காய்ந்துமேல் முனையிலிருந்து வெடிக்கத் தொடங்கும். அச்செடிகளைத் தலை கீழாக உலர்த்தி இலேசாகத் தட்டினால் எள் களத்தில் விழத் தொடங்கும் எள் மென்மையாகவும்  கருப்பாகவும்  இருக்கும்.

எள் ஒரு வெப்பமண்டலப் பயிர். இந்தியாவில் வெப்பமான பகுதிகளில் விளைகிறது. மற்ற அயல் தேசங்களிலும் எள் பயிரிடப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவும் சீனாவும், என் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முதலிடம் பெறுகின்றன.

தமிழில் எள், எள்கு என வழங்கப்பெறும் இத்தவசம், தெலுங்கில் நுவளுவு என்றும் மலையாளத்தில் கருத்தெள்ளு எனவும், சமற்கிருதத்தில் தில் எனவும் ஆங்கிலத்தில் (Gingeli Sesamum) என்றும் வழங்கப்பெறுகின்றது.

எள், எள்ள, எள்ளப்படு, எள்ளல், எள்ளலன், எள்ளலான், எள்ளார், எள்ளி, எள்ளிய எள்ளிலும், எள்ளுள், எள்ளு, எள்ளுக, எள்ளுதல் எள்நர், எள்ளுபு, எள்ளும், எள்ளுமார் எள்ளுவாய், எள்ளுற்று என்ற பல வினைச் சொற்களும் இதற்குண்டு...

தமிழ் மொழியில் சங்ககாலம் தொட்டே எள் பற்றிய குறிப்புகள் உண்டு, எள் குறித்த வினைச்சொற்கள் பெயர்ச்சொற்கள் பழமொழிகள் மொழியில் மிகுந்து காணப்படுகின்றன.

பழமொழி:

"நெல் இருக்க இருக்கப் பொன்னு
 எள் இருக்க இருக்க மண்ணு "

"ஏழைக்கேத்த எள்ளுருண்டை
 பணக்காரனுக்குக் கேத்த பருப்புருண்டை"

"இளைச்சவன் எள்ளைப்போடு
 வழுத்தவன் வாழையைப் போடு"

"எள்ளும் கொள்ளும் வெடித்தாற் போல
எள்விழ இடமில்லாக்கூட்டம் போல்"

"இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு
 கொழுத்தவனுக்குக் கொள்ளைக்கொடு"

"இளைத்தவன் எள்ளு விதைப்பான்
கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்"

மூலிகை தரும் எள்:

  • எள், இலை, பூ, காய், விதை, என அனைத்தும் தமிழர் வாழ்வியலில் எள் மூலிகையாகவும், உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • எள்ளினது நெய்யினால் இயற்கையுணர்வு தெளிவு, விழிக்குக் குளிர்ச்சி, மனமகிழ்ச்சி, தேகபுஷ்டி பலம், வாலிபத் தன்மை ஆகிய குணங்கள் உண்டாகும்.
  • உடல் நலம் பாதிப்பு ஏற்படுத்தும் நோய், கபால வெப்பம், காசம், இரணம், நீங்கும்.
  • தாவரங்களிலிருந்து  எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய் ( தைலம்) மூலிகையை இணைத்து எண்ணெயைச் சேர்ப்பதால், மூலிகையின் முழுப் பயனையும் தரும் ஆற்றல் உடையது.
  • தாமிரம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் இ, மக்னீசியம், இரும்புச்சத்து, துத்த நாகம், வைட்டமின் பி முதலிய ஆரோக்கியமான புரதம் நார்ப்பொருள் அமினோ அமிலங்களும் எள்ளில் அதிகமாகக் காணப் படுகின்றன.
  • எள்ளு இலைகளை நன்றாக அரைத்து (உடலில் தோன்றும்) கெட்டியான புடைப்பு ஏற்பட்ட இடத்தில்  மேல் தடவி  வந்தால் மறையும் ஆற்றலை உண்டாக்கும்.
  • இலை மற்றும் வேர் இரண்டையும் அரைத்துத் தலையில் மேல் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
  • கண், காதுகளில் நல்ல எண்ணெய் விடுவதின் தூய்மை செய்ய பெரிதும் பயன்படுகிறது.

  • எள்ளு பூவானது  கண்நோய்களை தீர்க்கும் வலிமை வாய்ந்தது.

முடிவுரை: 

எள்ளின் குணத்தையும் அதன் ஆற்றலையும் சங்க தமிழ் நூல்களில் பயன்படும் விதத்தையும் செந்தமிழ் மொழியின் மூலம் விளக்கி இயற்கை படைத்த உயிர்களுக்கு ஆற்றும் அளவில்லாத பயன்களே ஆகும்.

எலுமிச்சை! சுவையே இன்பமானது...

எலுமிச்சை! சுவையே இன்பமானது...

எலுமிச்சை

“பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம்”

முகவுரை:

அதிகமான மரணத்தை ஏற்படுத்தும் நஞ்சு உடையாதாயிருக்கும், பித்தனாகிய சிவன் திருமுடியில் சூட்டும் ,காற்றை உட்கொள்ளும், அதனால் உடல் உப்பியும் காணப்பட்டுதலை மேலாக தூக்கி அசைந்தாடும், கோபமுடைய அனுகூலத்தினை பெற்றிருக்கும் என காளமேகப் புலவர் பாடும் பாடல்களில் பாம்பின் இராஜசம் பற்றி தேம்பொழியும் சோலைத் திருமலைராயன்(அரசன்) வரையில் பாம்பு எழுமிச்சம் பழம்!! என்றும்...

பெரியவர்களிடம் சேர்ந்து இருக்கும், பித்தனின் (சித்த ப்ரம்மை பிடித்தவர்களின்) சிரத்தின் மேல் தேய்க்கப்படும், ஊறுகாய் தயார் செய்ய எழுமிச்ச பழத்தை குறுக்கே அரியப்பட்டு உப்பை மேலே தூவப்பட்டிருக்கும், பிழிந்து எடுக்கப்படும் சாறு மெல்லிய பகுதியான தோல் மீது சிந்தினால் எரிச்சல் கூடிய தன்மை கொண்டது என காளமேகப் புலவர் பாம்பிறக்கும், எழுமிச்சபழத்திற்கும் உள்ள ஒற்றுமையின் வேற்றுமையை தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில் பாம்பு எழுமிச்சம் பழம்!! என்று பாடல்வரிகளின் மூலம் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

எலுமிச்சை:

எலுமிச்சை வெளிர் மஞ்சள் நிறத்தில் புறத் தோலையும் புளிப்புச் சுவையையும் உடைய, உருண்டை வடிவப் பழத்தைத் தரும் தாவரமாகும்.ஆசியாவை இதன் அடைக்கலமாக கொண்டு பூக்கும் தாவர இனத்தின் தன்மையாக (Citrus limon) சிட்ரஸ் லிமன் என்னும் அறிவியல் நாமத்தை கொண்டிருக்கிறது.

வெப்ப மற்றும் மிதவெப்ப நாட்டுப்பகுதிகளில் வளரும் இயல்பை கொண்டு, சிறிய வகை தாவர செடியான   எலுமிச்சை இந்தியாவில்  அசாம் மாநிலம், வடக்கு பகுதிகளில் பல தேசங்களில் தோன்றியிருக்கலாம் என பல கருத்துக்கள் நிலவியிருந்தாலும், பண்டைய காலத்தில் புலவர்கள் பாடிய பாடல்களிளும், வேளாண்மை தொடர்பான நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

எலுமிச்சை மரம், காய், பழம், பூ, இலைபழத்தின் தோல்  அனைத்துமே உபயோகமாகவும், மருத்துவத்திற்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்து நம் இந்திய நாட்டின் தேசிய காயாக எலுமிச்சை திகழ்ந்த வண்ணமாய் உருமாறியிருக்கிறது.

சத்துக்களின் வகைகள்:

  • கொழுப்பு
  • சுண்ணாம்புச் சத்து
  • நார்ச்சத்து
  • நீர்ச்சத்து
  • பொட்டாசியம்  
  • புரதம்
  • மாவுப்பொருள்
  • தாதுப்பொருள்
  • இரும்புச் சத்து
  • கரோட்டின்
  • தையாமின்
  • நியாசின்
  • பாஸ்பரஸ்
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் பி
  • வைட்டமின் சி
  • ரிபோஃப்ளோவின்

இயற்கை குணங்கள்:

  • இரத்த வெண்மைபெற உதவுகிறது. வாந்திபேதி முதலிய ஊழிக்காய்ச்சலின் போது நோய் தொற்றின் தாக்கத்தை தீர்க்க உதவுகிறது.
  • பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடலில் இருக்கும் நச்சுகைகளையும் வெளியேற்றம் செய்ய பயன்படுகிறது.
  • உடலின் அகலம், கொழுப்பு, நீரிழிவு போன்ற  பெருவியாதிகளுக்கு எலுமிச்சைச்சாறு ஏற்றது.
  • இரத்தத்தின் சுத்தத் தன்மைக்குக் காரணமான உயிரணுக்களை உற்பத்திசெய்யும் மண்ணீரலின்  வீக்கத்திலிருந்து விடுபடலாம்.
  • உடல் சோர்வினை அகற்ற எலுமிச்சம் பழ ரசத்தில் சிறிதளவு தேனை கலந்து உண்டுவரவேண்டும்.
  • உப்பின் மூலம் உடல் பருமையாதலை சீரான நிலைபெற எலுமிச்சை சாறு உதவுகிறது.
  • வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு கல்லீரலை வலுவடைய சிறந்தது.
  • கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுக் கொழுப்பு பொருளை செரிக்க உதவும் திரவமான பித்தநீர் சுரத்தலை சீரான நிலையை உருவாக்குகிறது.
  • நீர் சேர்வதற்காக கல்லீரலோடு இணைந்து அமைந்திருக்கும் பித்தப்பையில் கற்களை கரையச்செய்ய உதவுகிறது.
  • சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்திருப்பதுமான தசையால் ஆன உள் உறுப்புக்களின் குறைபாடுகளை தீர்க்க உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தின் காரணமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம், தலைசுற்றி மயக்கம் வரும் உணர்வு, வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதிகளின் வியாதிகளை நீக்கும் தன்மை வாய்ந்தது.
  • விரகநோய், பெரும்பாலும் நீரின் மூலமாகப் பரவுவதும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான வயிற்றுப்போக்கையும் வாந்தியையும் ஏற்படுத்துவதுமான நோய், வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றை புரட்டல், கண் சம்மந்தப்பட்ட நோய், காது வன்மை முதலியவற்றை குணப்படுத்தும் இயல்புடையது.
  • நீரில் எலுமிச்சம்பழத்தின் விதைகளை கொண்டு நன்றாக கொதிக்கவைத்த அதில் இருந்து வரும் ஆவியை முகத்தில் சுவாசம் செய்ய நீர்பினிசம் தீரும்.
  • நகக்கண்ணில வரும் ஒரு புண்வகையை தீர்க்க எலுமிச்சை பழத்தை துளையிட்டு விரலை அதனுள் உட்செலுத்தி வைத்தால் சூள் குறையும்.
  • தேள்கடித்த இடத்தில் எலுமிச்சை பழத்தை பாதியாக அறிந்து நன்றாக தேய்த்தால் விஷமானது குறையும்.
  • முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் சுருக்கங்கள் மறைய பாலேட்டில் எலுமிச்சை சாற்றை கலந்து தடவிவந்தால் நிவாரணம் அளிக்கும்.

முடிவுரை: 

நேர்மறையான கருத்துகளைத் தூண்டக்கூடியதாகவும், ஐந்து சதவீதம்  எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் புளிப்புசுவையை உண்டாக்குகிறது.  மேலும் ஹைட்ரஜன் திறன் PH அளவானது 2 முதல் 3 வரை இயற்கையாகவே இயல்பு தன்மையை பெற்று மனிதன்,விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும் ஆதாரமாய் இருக்கும் ஜீவனை பாதுகாக்க சக்தியை பெற்றிருக்கிறது.

சோளம்! சுவைக்க மட்டுமல்ல... சுகாதாரத்திற்கும் கூட...

சோளம்! சுவைக்க மட்டுமல்ல... சுகாதாரத்திற்கும் கூட...
சோளம்
சோளம்

பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு! எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!          
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே!
 

முகவுரை:

தேனடைகள் தொங்க, பெரிய பழங்கள் குலைகுலையாய்ப் பழுக்க,மலையிலுள்ள வெண்மையான அருவி மாலை போல இறங்கிவர, பயிர்மணிகள் எல்லாம் நிலங்களில் விதைக்கப்பெற… 

இலக்கியம்

தமிழ் நூல்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், கூலம் பதினெட்டெனவும் நற்றினையில் ஆகமப்பிரமாணம் ( உரை ) செய்து  சிறு தானியங்களில் ஒன்றான சோளத்தின் சிறப்பை சமூக வாழ்வியளுக்கு மிகத் தெளிவாக தமிழ் இலக்கியங்களில் சோள தானியங்களை பற்றியும் அதன்  பயன்பாடுகளை வரையறுக்கப்பட்டுள்ளன. 

சோளம்

சிந்திக்கும் ஆற்றல் உடைய இனத்திற்கும், ஆடு, மாடு, இரு கால்களும் அலகும் உடைய, உடலின் இரு பக்கங்களிலும் பறப்பதற்கு ஏற்ற சிறகும் கொண்ட உயிரினம் (பறவைகள்) முதலியவற்றிற்கும்  உணவாக பூமியில் முளைத்து குறைந்த உயரமே வளரும் மெல்லிய, பச்சை நிற இலை கொண்ட தாவரமான சோளம் புல்வகையை சேர்ந்த தாவரமாகும் ஆகும்.

அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலையான தட்பவெப்பம் நிறைந்த பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையும், இலைகள் 3 முதல் 5மிமீ வரை சுற்றளவு கொண்டு விரிந்த நிலையில் காணப்படும். (நச்சு) சுகாதாரமற்ற மண்களிலும், மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ தேவையான அளவு நீர் இல்லாமல் போகும் நிலையிலும் (வறட்சி) விளையும் சூழலை கொண்டது.

சோளம் ஆடி மாததில் பயிரிடுவதற்கு தகுந்த காலமாகும். இந்தியாவில் பல மாநிலங்களில் சோளமானது அரிசி, கோதுமை போல் முக்கியமான வளத்தைப் கொடுள்ளது.நீரில் சோளத்தை முழுமையாகவோ வேகவைத்து அல்லது உணவாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட நெல்மணி போன்ற இயல்பையையும், ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும், மாவாக உணவுப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நீர் முதலியவற்றில் ஊறிப்போதல் ( நொதித்தல் தொழிற்சாலை ) எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதும் ஆவியாகக் கூடியதுமான திரவ நிலையில் உள்ள எரிபொருள் (எரிசாராயம்) கரைப்பனாக பயன்படுத்தப்படுகிறது.

இன்றளவிலும் அயல் தேசங்களான  தென் மேற்கு பசிபிக், ஆஸ்திரிலேயா, வடஅமெரிக்க, தென்அமெரிக்காவில்  அதிக அளவில் பயிரிடப்பட்டு உடல் ஆரோக்கியத்திற்கு உணவே மருந்தாக திகழ்ந்து வருகிறது.

இனம்

  • வெண்சாமரச் சோளம்
  • சிவப்பு சோளம்
  • வெள்ளை சோளம்
  • பழுப்புநிற சோளம்

ஊட்டச்சத்து 

மாவுச்சத்து, கலோரி, புரதம், நயசின் கொழுப்பு, கால்சியம், நார்சத்து, கார்போஹைட்டிரேட், இரும்புசத்து, பி-கரோட்டின், ரிபோப்ளோவின், தயமின் வைட்டமின், அஸ்கார்பிக் அமிலங்கள் மிகுதியாய்  காணப்படுகின்றன.  

    மேலும் இளம் பச்சை சோளத்தில் காணப்படும் கனிம சத்துக்களின் வகைகளான கால்சியம், மிகி இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் முதலியன.

      நன்மைகள்

      • சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்துள்ளதுமான தசையாலான உள் உறுப்பான இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளை சோளம் ஏற்றதாய் அமைகிறது.
      • நிணம் இல்லாமல் இரத்தம் தூய்மையாகவும்,  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒழுங்கில்லாத இதயத் துடிப்பையும் கடுமையான வலியையும் ஏற்படுத்தும் இதயத்தின் இரத்த ஓட்டத் தடை  (மாரடைப்பு) ஏற்படாமல் வெள்ளை சோளம் பாதுகாக்கின்றது.
      • வயது முதுமை காரணமாக உண்டாகும் எலும்பு தேய்மானத்தை குணமடைய செய்கிறது.
      • வெள்ளை சோளத்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் நீரழிவு வியாதிகளை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது.
      • (ஒவ்வாமை ) உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒன்று இருந்து அதனால் தும்மல், தோலரிப்பு போன்ற ஆரோக்கியக் குறைவான விளைவு ஏற்படும் நிலையை வெள்ளை சோளம் நீக்குகிறது.
      • உணவை விரைவாக செரித்தலுக்கு உட்புகுத்தி ஆரோக்கியத்திற்கும்  உடல் பருமனை சீராகவைத்துருக்கவும் சோள முக்கிய பங்கு வகிக்கின்றது.
      • வயிறுகுத்துதல், (உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலை போன்றவைகளை ஏற்படாமல் பாதுகாத்து ஆற்றலை அதிகரிக்கின்றது.

      பின்விளைவு

      • சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்துள்ளதுமான தசையாலான உள் உறுப்பான இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளை சோளம் ஏற்றதாய் அமைகிறது.
      • ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை சம்மந்தமான வியாதிகளை உடையவர்கள் சோளத்தைத் தவிர்க்க வேண்டும்.
      • சிசுவிற்கு ( குழந்தை ) பால் தரும் பெண்கள் முறையாக மருத்துவம் பயின்று சிகிச்சை அளிப்பதற்குத் தகுதி பெற்றவரிடம் கலந்து ஆலோசித்த பிறகு சோளத்தை உட்கொள்ளலாம்.

      முடிவுரை: 

      இயற்க்கை தாணியவகைகளான சோளம்! சுவைக்க மட்டுமல்ல... சுகாதாரத்திற்கும் கூட... என்ற தன்மையை இக்கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்டுகிறது.


      அற்புதத்தை அள்ளித்தரும்...அரிவாள்மனை பூண்டு!

      அற்புதத்தை அள்ளித்தரும்...அரிவாள்மனை பூண்டு!

      அரிவாள்மனை பூண்டு


       “வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
      துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
      பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
      மரிவாள் மூக்குப் பச்சிலை”

      முகவுரை:

      வியப்பைத் தரும் வகையில் சிறப்பை பெற்றிருக்கும் அரிவாள்மனை பூண்டு! அல்லது அரிவாள் மூக்கு பச்சையிலை  (சித்தா) பூக்கும் தாவர வகையான மால்வேசியே இனத்தை சேர்ந்தவையாகும். 

      பூமியில் முளைத்து நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்ந்து எல்லா சூழல்களிலும் வாழக்கூடிய சிறு வகை ( சிடாஅக்யூட்டா ) தாவரமாக இருந்தாலும் அணைத்து பகுதிகளிலும்  பயிருடன் வளரும் புல் பூண்டுகளாகவும் வளர்ந்து விவசாயம் செய்ய  (பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படும் )ஊட்டச்சத்து (உடல்) வலிமை, பலம் பெறவும் அறிவியலின் விதிகளால் விளக்கப்பட முடியாத நிகழ்ச்சி ஏற்படுத்தி உழவனுக்கு ஊக்கத்தை தந்து பயிர்கள் இயற்க்கை வளம்பெற்று வளர ஊன்றுகோலாய் திகழும் வண்ணமாய் இன்றளவும் உள்ளது. 

      தோற்றம்:

      அனைத்து விதமான மண் வகைகளிலும் செழித்து வளரும் ஆற்றல் உடையது. அதிலும் செம்மன் நிலங்களில் உடனடியாக தன் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆற்றலை பெற்றது. கூரிய வடிவில் இலைகளை உடையதாகவும், மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர் காலத்தில் காடுகள், மலைகள், நிலங்கள், சாலையோரங்களிலும் இயற்கையாகவே முளைக்கும் சிறு செடி இனத்தை சேர்ந்தவையாகும்.

      அரிவாள்மனைப் பூண்டு விதைகள் மூலமாகவே தன் இனத்தின் பெருக்கத்தை அபிவிருத்தி செய்துகொள்ளும் திறனை உடையது.

      இந்தியா, இலங்கை மற்றும் பிற தேச பகுதிகளிலும் புல் பூண்டுகளாக முளைத்து 30 செ.மீ. வரை வளரும் தன்மை கொண்டது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மிகுதியாக இருந்தாலும் ஆண்டு முழுவதும் ஈரப்பதம் இருக்கும் இடங்களில் காணப்பட்டு வருகின்றன.

      சிறுகாஞ்சொறிச்செடி என்று அழைக்கப்படும் அரிவாள்மனைப் பூண்டு  மஞ்சள் நிறப் பூக்களுடன் கூறிய சிறு சிறு இலைகளைக் கொண்டும், தண்டும் இதன் வேர்பகுதியும் மிக உறுதி தன்மை வாய்ந்ததாக உள்ளது.

      பயன்பாடு:

      பல தலைமுறைகளாக  மருத்துவ துறைகளிலும் அரிவாள் மூக்கு பச்சையிலை தாவரத்தின் இலை, தண்டுகள், வேர்கள்   இந்தியாவிலும், ஆப்ரிக்காவிலும் மிக முக்கிய பங்கு ஆற்றிவருகிறது. 

      நைஜீரியாவின் தொன்மை மரபு வைத்தியத்தில் மலேரியா, (கர்ப்பப்பையில் அல்லது முட்டையில் வளர்ச்சியின்) ஆரம்ப நிலையில் இருக்கும் உயிர் (கருக்கலைதல்) குறைகளைத் தீர்க்கிற இயற்கை மருந்தாக உதவி செய்கிறது.

      மேலாண்மை செய்யும் மாவட்டங்கள்:

      தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மருந்துக்காக பயன்படுத்தப்படும் அரிவாள்மனைப் பூண்டு  செடிகள், இலைகள்,வேர், தண்டு இவைகளை பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம் நிலங்களிலும், விவசாய நிலங்களிலிருந்தும் ஒன்றுசேர்த்து இலைகளை உலரவைத்து பலவிடத்திருந்து ஓரிடத்தில் கொள்ளல் விற்றற்கு கூடுமிடத்தில் ( அங்காடி ) வியாபாரிகளிடம் விற்பனை செய்யது வருகின்றனர்.

      அற்புதத்தை அள்ளித்தரும்... அரிவாள்மனை பூண்டை தமிழ்நாடு மாவட்டங்களான வேலூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும், மேலும் ஆந்திரா மாவட்டமான அனந்தப்பூரிலும் மிகுதியான அளவில் சேகரிக்கப்பட்டு (நோய், காயம் முதலியவற்றை) குணப்படுத்தும் மருந்துபொருள்களுக்கு பயன்படுகிறது.

      மூலிகை பயன்கள்:

      • அரிவாள்மனைப் பூண்டின் வேர் பொடி (கட்டுப்பாடு இல்லாமல் உடல் உறுப்புகள் ஆடுகிற வகையில்) நரம்பில் ஏற்படும் உறுதிக் குலைவு தீர்க்க வல்லது.
      • (பொடி) நினைவிற் கொள்ளும் ( ஞாபகம் ) சக்தியை அதிகரிக்க நன்மை வாய்ந்தது.
      • உடலிலிருந்து ஆண்,பெண் இருபாலருக்கும் பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேறும் உப்புநீர் தூய்மை படுத்த ஆற்றலை அதிகரிக்கிறது.
      • முறையற்ற உடல் உறுகையால் விளைவிக்கும் பாதிப்புக்களை குணப்படுத்த( அரிவாள்மனைப் இலை பொடி ) உதவிபுரிகிறது.
      • செயல்படுவதற்குத் தேவையான வலு இல்லாத நிலை ( பலவீனம்  ) சரிசெய்ய சிறிதளவு பொடியை தினந்தோறும் உணவிற்கு பிறகு உண்ணுவந்தால் சீரான நிலையடைய வழியை பிறப்பிக்கும்.
      • குரல்வளையில் ஏற்படும்  நாவரட்ச்சி, குரலடைப்பு ( கம்மல் ) போன்ற பாதிப்புக்களை சரிசெய்ய  தேனுடன் அரிவாள்மனைப் பூண்டின் தூளை கலந்து பருகிவந்தால் இயற்கையான நிலையடையும்.    
      • வேர், விதைகளை மென்மையாக அரைத்து நாட்டு சர்கரையுடன் கலைந்து  தினந்தோறும் காலை, மாலை, இரவு வேலைகளிலும் உண்டுவந்தால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு ( எரிச்சல் )குணமாகும்.
      • வேலம்பட்டை, சர்க்கரை, படிகாரம் முதலியவற்றைப் போட்டுத் தயாரிக்கும் நாட்டுச் சாராயதின் மூலம் ஏற்படும் தொண்டை எரிச்சலை குணப்படுத்த அரிவாள்மனைப் பூண்டின் வேரை சிறு துண்டுகளாக வெட்டி தேவையான அளவு நீரில் கொதிக்க வைத்து வற்றிய தருவாயில் நீரை முழுமையாக வடிகட்டி  அருந்தினால் குணமடையும்.
      • பொழுது விடியும் நேரத்தில் குடித்து வர சுவாசிப்பதற்கும் வாசனையை அறிவதற்கும் பயன்படுகிற உடல் உறுப்பு (மூக்கு), வாய் மற்றும் உடலில் சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவத்தைக் கட்டுப் படுத்தும் பணியை செய்ய உதவிபுரிகிறது.
      • இரத்தப் பெருக்கு தடுக்க அரிவாள்மனைப் பூண்டின் இலையை வெட்டுக் காயத்தின் மீது கசக்கிப்பிழிந்தால் உடனடியாக தடுக்கும் ஆற்றலை பெற்றது.
      • இரும்பு, கல், மரத்தால் ஆன கருவிகளால் ஏற்படுகின்ற பெருங்காயத்தை குணப்படுத்த அரிவாள் மூக்குப் பச்சிலை வலிமை வாய்ந்தது.

      • கடுமையான மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருளான (நஞ்சு) தலை வலியை தீர்க்க  அரிவாள் மூக்குப் பச்சிலை, குப்பை மேனி இலை சிறிது மிளகு பூண்டு சேர்த்து மைய அரைத்து (மருந்துக்காகவோ உடல்நிலையைப் பொறுத்தோ எதை விலக்க வேண்டும், எதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற) உணவுக் கட்டுப்பாடு அல்லது விதிமுறைகளை (பத்தியம்) மேற்கொண்டால் உடனடியான தீர்வை உண்டாக்கும்.

      முடிவுரை: 

      "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற பழமொழியின் தத்துவத்திற்கேற்ப அணைத்து இடங்களில் வளரும் அற்பமானதாக நாம் நினைக்கும் எண்ணத்தை முறியடித்து தக்க தருணத்தில் அணைத்து உயிரினங்களுக்கும்  உதவும் ஆற்றல் பெற்றதை பேணிகாக்க இயற்கை வழியை பின்பற்றி சுற்றுப்புற சூழலையும் பாதுகாப்போம்.