குப்பைமேனி! குலத்தை காக்கும் ராணி

குப்பைமேனி

குப்பைமேனி

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று"
 - திருக்குறள்

முகவுரை:

நாம் வாழும் பகுதிகளில் அனைத்து தெருவோரங்களிலும், சாலையோர பகுதிகளிலும், நிலங்களிலும் வளரும் செடி இந்த குப்பைமேனி.

குப்பை மற்றும் புதர்களின்  ஓரங்களில் வளருவதால் இதற்கு, குப்பைமேனி என்ற பெயர் சூட்டியுள்ளார்கள் .

இதன் முழுத்தாவரத்தில்  வேதிப்பொருட்கள், மற்றும் மருத்துவ குணங்களான அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பெருமளவில் காணப்படுகின்றன.

வளரியல்பு : 

பெரும்பாலும் இந்தியாவின் வெப்பம் மிகுந்த பகுதிகளில் ஒரு மீட்டர்  வரை வளரக்கூடிய ஒரு குருஞ் செடியானது இந்த குப்பைமேனி.

ஓராண்டுத் தாவரமான குப்பைமேனியின்  இலைக் காம்புகள் நீண்டு காணப்படும் தன்மையும் கொண்டது. மடல் விளிம்பானது முட்டை அல்லது சாய் சதுர முட்டை வடிவம்  கொண்டது.

தண்டின் அடிபகுதியில்  இலைகளின் காம்பு நீளமாகவும் மேலே செல்ல செல்ல  குறுகியும் காணப்படும்,

இலைகலையின் மேல்  மஞ்சரிகள் காணப்படும். ஒரே ஒரு விதை கொண்டவை. விதை முட்டை வடிவம்பெற்று நுனி நீண்டும் காணப்படும்.

மருத்துவ மூலிகைச் செடியான குப்பைமேனியின்  புனைபெயரான அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி என அழைக்கப்படுகிறது.

குப்பைமேனி :

சித்த மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான மூலிகைகளின்  பற்றிய குறிப்புக்கள் இருந்தாலும், அவற்றுள் பெரும்பாலானவை மனித சமூகம்  இல்லாத பகுதிகளில் வளரும் மூலிகைகள் தான் அதிகம்,  ஆனால் மனிதர்கள் வாழும் பல பகுதிகளில்  அவர்களுக்கு அருகாமையிலேயே பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகள் இயற்கையாகவே  இருக்கின்றன.

மருத்துவ பயன்கள்: 
  • எதிர்பாராத வீக்கம் உடலில் நமக்கு ஏற்படும்  சமயங்களில் குப்பைமேனி செடிகளின் இலைகளைசிறிதளவு  பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி  போன்றவை குறையும்.
  • குப்பைமேனி இலைச்சாற்றை  தினந்தோறும் காலை மாலை  குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும்.
  • சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளை அகற்ற மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.
  • இயற்க்கை வளம் மிகுந்துள்ள சுற்றுப்புற சூழலில் அதிகமான மரம், செடிகொடிகள், புள், பூண்டுகள் மற்றும் புதர்கள்  நிறைந்துள்ளதால்  அதிகமான விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளால் கடிபட்டவர்களுக்கு  குப்பைமேனி இலையை நன்றாக நீரில் கொதிக்க  வைத்து பருகினால் விஷம் உடலில் ஊடுருவதை தடுக்க  உதவுகிறது.
  • குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து நீண்ட நாட்களாக ஆறாத புண்களின் மீது பற்று போட்டு வந்தால்  உடனடியாக குணமடைய வழிவகை செய்யும், வயிற்று பகுதிகளில் ஏற்படும் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற பிரச்சனைகளை தீர்க்க தொண்டு புரிகிறது.
  • குப்பைமேனி இலைச்சாறு நீரிழிவு வியாதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை பெருமளவு குறைக்க உறுதுணையாக இருக்கிறது.
  • கொசுக்களால் பரவக்கூடிய மலேரியா போன்ற வியாதிகளை குணபடுத்த சிறந்த தீர்வை குப்பைமேனி  தருகிறது.
முடிவுரை: 

மருத்துவப் பயன்கள் கொண்ட குப்பைமேனியின் அணைத்து பாகங்களும் மருந்தாக பயன்பட்டு இயற்கையின் சிறப்பினை எடுத்துரைத்து மனித சமூகத்திற்கு பெரும் உதவிப்புரிந்து எலிக்கடி விஷம்,  யானைக்கால் சுரம், சுவாசக் கோளாறுகள்,பாதவெடிப்பு, மூட்டு வலி, மார்பு வலி, உடல் வலி, முடிநீக்கம், மலேரியா, சொறி, சிரங்கு நீங்க,  கோழைக்கட்டு, மலச்சிக்கல், பவுத்திரம், தோல் நோய் போன்ற எண்ணற்ற பலனை அள்ளித்தரும் குப்பை மேனி இலை! பாதுகாப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars