முகவுரை:
முருங்கை:
முள் முருங்கை:
முள் முருங்கையின் மற்றொரு பெயர் கல்யாண முருங்கை ஆகும். மிக உயரமாக வளரக்கூடிய தன்மை பெற்றது. இதன் அடிப்பகுதியில் முள்ளானது பரவிகாணப்படும். மாசி, பங்குனி மாதங்களில் சிவப்பு நிறதில் மலர்களானது நிறைந்து காணப்படும் தன்மையை பெற்றது.
இலை, பூ, விதை, பட்டை அனைத்தும் இயற்க்கை மருத்துவத்திற்கு மிகவும் பயனுள்ளதாய் அமைகின்றன. அவரை விதையை விட முள் முருங்கையின் விதைகள் வடிவில் சற்றுப் பெரியதாக காணப்படும்.
தவசி முருங்கை:
தவசி முருங்கையானது நம் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பெருமளவில் காணப்படுகிறது. இதற்க்கு நீர் வளம் அதிகமாக இருந்தால் இரண்டு அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. நீரின் வளம் இல்லாத இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். மேலும் இதன் பூக்களானது ஊதா வண்ணமாக திகழும் தன்மைகொண்டது.
புனல் முருங்கை:
முருங்கை ரகங்கள்:
- யாழ்ப்பாண முருங்கை
- சாவகச்சேரி முருங்கை
- பால் முருங்கை
- பூனை முருங்கை
முருங்கைப் பூ:
- நினைவாற்றலை தூண்டும் இயல்பான சக்தி இதற்குண்டு.
- நீரிழிவு வியாதிகளை எளிதில் தீர்க்கும் வல்லமை வாய்ந்தது.
- நாவால் உணரும் சுவையின்மையை போக்கும் தன்மை வாய்ந்தது.
- வைட்டமின் A, வைட்டமின் C, சுண்ணாம்புசத்து, புரோட்டின், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
- தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் குறைபாட்டை நீக்குவதற்கு பயன்படுகிறது.
- கருவுறுதலை ஊக்குவிக்க சிறந்த இயற்க்கை மருந்தாகும்.
- சிறுநீரக கற்களை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.
முருங்கை இலை:
- ஈரபதம், புரதம், கொழுப்பு, அயம், தாதுக்கள், இழைப்பண்டம், கார்போஹைட்ரேட்கள் தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி போன்ற சத்துக்கள் மிகுதியாக காணப்படுகின்றன.
- தாய்ப்பால் சுரப்பதற்கு தேங்காய் எண்ணெயில் வதக்கிச்பருகினால் அதிகரிக்கும்.
- வயிற்றுவலி மற்றும் மாதவிடாய் சிக்கல்களை எளிதில் தீர்க்கும் வல்லமை வாய்ந்தது.
முருங்கைக்காய்:
- இரும்புச்சத்து, புரதச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு, நார்சத்து, மாங்கனீசு, கார்போஹைட்ரேட், கால்சியம், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் மிகுதியாய் காணப்படுவதால் உடலி ஏற்படும் பல்வேறு வகையான நோயிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
- கண், வயிற்றுப் புண், மலச்சிக்கல், சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
- சிறுநீரகம் பலப்படுவதற்கும், தாது உற்பத்தி அதிகரிக்கவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாய் அமைகின்றது.
- ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மையும், விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை முதலிய பிரச்சனைகளை எளிதில் தீர்வுகாண முருங்கைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது .
- சளி மற்றும் தொண்டை புண் தொண்டை கரகரப்பு, தீர்க்க ஏதுவாய் அமைகிறது.
- கணைய வீக்கம், ஆஸ்துமா, கல்லீரல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
- தோல், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
- உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தையும், மனநிலை, நினைவாற்றல், மற்றும் புத்துணர்ச்சியை தூண்டுவதற்கு சிறந்து விளங்குகிறது.
முருங்கை பிசின்:
- முருங்கை மரத்திலிருந்து வெளியே வரும் கருஞ்சிவப்பு நிறமுடைய பிசினில் கால்சியம், சுண்ணாம்புசாது, நார்ச்சத்து அதிகமாய் காணப்படுகிறது.
- முருங்கை பிசினை ஊறவைத்து இளகிய நிலையில் உண்ணுவதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
- முகம் பொலிவு பெற சிறந்த தீர்வாகும்.
முருங்கை பட்டை:
- முள் முருங்கைப் பட்டை சாற்றின் மூலம் கொண்டு செய்யப்படும் "கல்யாணச்சாரம்" சிறுகுடல் புண்களைக் குணமாக்க பயன்படுகிறது.
- நரம்பு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு சிறந்த தீர்வாகும்.
- கண் நோய்களை தீர்க்கும் வலிமை வாய்ந்தது.
- முருங்கைப் பட்டையை நீர்விட்டு மைய அரைத்து கால்களில் ஏற்பட்ட வீக்கங்களில் மீது தடவினால் வீக்கமானது எளிதில் குறையும்.
முருங்கை விதை:
- விதையை சூரிய வெப்பத்தில் காயவைத்து மாவாக செய்த பின்னர் பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு பலத்தையும், ரத்த சோகை நீக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாய் அமைகிறது.
- முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் மிகுதியாய் காணப்படுகின்றன.
- முருங்கை விதையை கொண்டு சமையல்எண்ணெய் தயாரிக்க உதவுகிறது.
இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் மனித சமுகத்திற்கு முருங்கையின் பயனும் அதன் மருத்துவ குண நலனும் பயன்பெற்று நோய் வாய் பிணிகளை நீக்கி நல்வாழ்வு வாழ வழி வகுத்ததாகும்.
இன்றைய சமூகத்தில் தாவரங்களின் பண்பை அறியாமலும், அதன் மருத்துவ குணத்தை தெரியாமலும், வாழ்க்கையை செயற்கை முறையில் வழி நடத்துவதாலும் எண்ணற்ற வியாதிகளுக்கு உள்ளாகி மனித சமூகத்திற்கு தொற்றுகளை ஏற்படுத்துவதே ஆகும்.
முடிவுரை:
அதனால் பழம்பெரும் காலத்தில் நம் முன்னோர்கள் கூறிய நல்ல அறிவுரைகளையும், சிந்தனைகளையும் நாமும் பின்பற்றி சுகாதாரமான வாழ்வையும் நீண்ட ஆயுளையும் பெற்று நலமுடன் வாழ சிந்தனை செய்வோம்.
