இயற்கை மருத்துவம்
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
முகவுரை:
நோயாளியின் உடல் மாற்றங்களால் நோயின் காரணத்தை தெரிந்தும், தீர்க்கும் வழி
முறையை அறிந்தும் பிழையாமல் மருத்துவம் செய்வதே...
இந்த நல்லுலகத்தில் இயற்கை நமக்கு வழங்கிய ஆதாரமான மரங்கள்,செடி கொடிகள், புல் பூண்டுககளிலும் "மருத்துவம் அதன் மகத்துவம்" உள்ளடங்கி இருக்கிறது. இந்த மகத்துவத்தை நம்முடைய சித்தர்கள் மிகவும் திறம்பட அறிந்து அதனை நம் மூதாதையர்களுக்கு அருள் பாலித்து சென்றுள்ளனர். அவர்கள் கூறிய அறிவுரையை பின்பற்றி இயற்கை மருத்துவத்தை நாமும் அறிந்து அதன் மகத்துவத்தை பெறுவோம்.
விரிவுரை:
அருகம்புல்:
- உடல் அளவை குறைக்க நரம்பில் ஏற்படும் உறுதி குலைவு நோய்க்கு பயன்படுகிறது.
- இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து வலிமை பெற உதவுகிறது.
- தோல் வியாதிகளைகளை எளிதில் அகற்றும் ஆற்றல் கொண்டது.
வில்வம்:
- மூளையில் ஏற்படும் அழற்சியினால் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) உண்டாகும் காய்ச்சலோடு கூடிய பிணிக்காக அருந்தலாம்.
- இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் கண்களும் தோலும் மஞ்சள் நிறமடைந்து காணப்படும் நேரத்தில் வில்வ இலையை அரைத்து விழுங்குதல் மிகவும் நல்லது.
கல்யாண முருங்கை:
- பித்த நோய் மற்றும் உடல் நலம் பாதிப்பை போக்குகிறது.
- (மனித உடலிலிருந்து) ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு தன்மை தீர்க்கும் தன்மையுடையது.
- உதிரப்போக்கு ( மாத விடாய் ) தொல்லையை தீர்க்கும் இயற்கையான மருந்தாகும்.
- சுரநோய்க்கு ( காய்ச்சல் ) இளவெந்நீருடன் பருகலாம்.
கொத்தமல்லி:
- பித்தம் சம்பந்தமான நோய்களை போக்கி பசிமிகுதியை தூண்டுகிறது.
- சளி(கபம்) இருமலுக்கு சிறந்த மருந்தாகும்.
- மன அழுத்தத்தை குறைத்து மன வலிமை பெற சிறந்தது.
கருவேப்பிலை:
- உடல் உஷ்ணத்தை குறைத்து இயல்பான நிலையை அடைய வழி செய்கிறது.
- வாய்குமட்டலை எளிதில் போக்குகிறது.
- நரை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும்.
புதினா:
- (மனித) உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும் உப்புநீர் (சிறுநீர்) பிரச்சினைக்கு தீர்வாகிறது.
- இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின், நீர்ச்சத்து அடங்கியுள்ளன.
கற்பூர வல்லி:
- (இருமல்) தொண்டையில் இருந்து சத்தத்துடன் வெளிப்படும் காற்றுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
- நீர்க்கோள் அடைப்பு (மூக்கடைப்பு) போக்கும்.
- தொண்டை நீரற்றுப்போதல், உடலை மெலியச்செய்யும் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
வல்லாரை:
- நினைவிற் கொள்ளும் ஆற்றலை வளர்க்க உதவுகிறது
- மஞ்சள் காமாலைக்கு மருந்தாக வல்லாரையை கொடுக்கலாம்.
குப்பைமேனி:
- இலை மற்றும் உப்பு இரண்டையும் அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
பிரம்மதண்டு:
- பச்சை வேரைச் சிதைத்து தேள்கடித்த இடத்தில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
நறுவலி:
- நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறாக பிழிந்து, தேங்காய்ப் பாலில் சேர்த்து பருகினால் கடினமான வயிற்றுவலி போகும்.
கிராம்பு:
- நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்கு (நாசி) தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் (நீர்க்கோவை) குணமாகும்.
- பல் ஈறு, வலி வீக்கம் தீர்விற்கு கிராம்பு, கற்பூரம், ஓமத்தை மிதமாக இடித்து வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளி த்தல் வேண்டும்.
காட்டாமணக்கு:
- அடிபட்டதனால் இரத்தம் வெளிப்படும் இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச உதிரம் நிற்கும். காயமும் குணமடையையும்.
உப்பிலாங்கொடி:
- குழந்தைகளின் வயிறு ஊதிப் பெருத்தலாக இருந்தால் உப்பிலாங்கொடியை அரைத்து வயிற்றின் மேல்பகுதியில் கட்ட்டினாள் தீர்விர்க்கிற்கு வழியுண்டாக்கும்.
கரிசலாங்கண்ணி:
- கரிசலாங்கண்ணி இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம் இரண்டு துளியுடன், சிறிதளவு தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு நீரால் உண்டாகும் உடம்புவீக்கம் நீங்கும்.
கடலை இலை:
- கடலை அடித்தண்டுயையும், இலையையும் வேகவைத்து வீக்கம் மற்றும் மூட்டுப் பிசகல் பிரச்சினைகளுக்கு வைத்து கட்ட தீரும்.
ஏலக்காய்:
- பனைவெல்லத்தினையும் ஏலக்காய் சிறிதளவு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் பித்த மயக்கம் நீங்கும்.
புளியிலை, வேப்பிலை:
- இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து நீர்விட்டு காய்ச்சி உடலில் ஏற்பட்ட காயதின் மீது தடவி வர ஆறாத புண்கள் ஆறும்.
பாசிப்பயிறு:
- பால்கட்டு மற்றும் வீக்கமும் குறைய வெந்நீர் விட்டு பாசிப்பயிறு மாவை களியாக கிண்டிவிட்டு மார்பில் பற்றிட படிப்படியாக பிரச்சனை தீரும்.
மருதோன்றி இலை:
- மிருதுவாக இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடியசெய்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீர்க்கும்.
- மயிர் கருமை வண்ணமடைய மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூசுதல் நன்மை உண்டாகும்.
நெல்லிக்காய்:
- (வாந்தி)வாய் வழியாக வெளியேறும் ஜீரணிக்கப்படாத உணவுப்பொருட்களை தடைசெய்ய நெல்லி, கருவேம்பு, வேம்பு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சி கொடுத்தால் வாந்தி உடனே நிற்கும்.
அறுகம்புல்:
- அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூசி வந்தால் குறைந்த நாட்களில் பிரச்னை தீர வழிவகுக்கும்.
கடுக்காய்:
- கடுக்காய் சிறிதளவு சுக்கு சிறிதளவு போதுமான அளவு இடித்து நீரில் சேர்த்து காய்ச்சி இரவு தூங்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும்.
ஆகாசத் தாமரை:
- "மூலம்”பிணிக்காக இலையை மிருதுவாக அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் இயல்பான நிலையை அடையும்.
ரோஜா:
- தோலின் நிறம் பொலிவு பெற ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ வேண்டும்.
மிளகாய் தூள்:
- சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு மிளகாய் தூள், சுண்டைக்காய் பனைவெல்லம், சம அளவு கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்ணுதல் வேண்டும்.
தாம்பூலம் எருக்கம் பூ:
- நீரடைக்கும் ஒரு நோய்வகை (கல்லடைப்புக்கு) தாம்பூலம் எருக்கம் பூவின் பூமொட்டுயை சுண்ணாம்பு சேர்க்காமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும்.
கோவை இலை:
- கோவை இலை, வெள்ளைப் பூண்டை நெய்யில் இளம்சூட்டுடன் வதக்கி உணவு உன்னுதலால் தாய்ப்பால் சுரக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
எலுமிச்சம் வேர்:
- (பாலுறவுத் தொற்றின் காரணமாக)தொடை இடுக்குகளில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் புண்ணாக மாறும் புடைப்பு (அரையாப்பு) தீர எலுமிச்ச வேர், சத்திசாரணைவேர், கெச்சக்காய் சிறிதளவு இலகுதன்மையாக அரைத்து நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும்.
புதினா:
- உணவு உண்ணத் தூண்டும் உணர்வு உண்டாக புதினா சாறு ஒரு மடங்கு, எலுமிச்சம் பழச்சாறு மூன்று மடங்கு சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
தேன்:
- தேனை நன்றாக காய்ச்சி இளம்சூடாக இருக்கும்போது மிளகுத்தூள், படிகாரம், சேர்த்துக் கொடுக்கவும்.
புங்கன்:
- புங்கன் இளந்தளிரை அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுத்தால் வெள்ளை தீரும்.
மிளகு:
- (உணவு) செரிக்காத நிலை வயிற்றுப்போக்கிற்கு, மிளகை வறுத்துப் பொடி செய்து தேனில் சேர்த்து பருகவேண்டும்.
பூசனிவிதை:
- பூசனிவிதை பருப்பை, உடல் இளைத்தவருக்கு பொடியாக்கி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
மாங்கொட்டை:
- இரத்தகடுப்பு, சீதக்கடுப்பிற்கு மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டுவந்தால் குணமாகும்.
தொண்டைகம்முதல்:
- கற்கண்டுத் தூளை கற்பூர வள்ளிச் சாற்றில் ஒரு சிட்டிகை சேர்த்து சாப்பிட்டால் தொண்டைகம் முதல் நிவர்த்தியாகும்.
வெட்பாலை:
- வெட்பாலை இலை, கொடி, வேர் (சமூலம் ) சிறிதளவு எலுமிச்சைபழத்தை பிழிந்து பசுவின் பாலில் கலந்து சாப்பிட்டுவந்தால் வண்டுக்கடி உடனடியாக மறையும்.
அகத்திக்கீரை:
- நெருப்பு, சீதோஷ்ணம் போன்றவற்றின் வெப்பமானது உடலில் ஏற்பட்டால் நல்லெண்ணெயும், அகத்திக்கீரையும் சமமாக சேர்த்து வெந்தயத்தை சிறிதளவு சேர்த்து கொதிக்கவைத்து தலைமுழுகி வந்தால் தேகம் குளிர்ச்சியாகும்.
ஆவாரை:
- ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅள வோடு உலர்த்தி அரைத்தோ அல்லது பொடித்தோ இரண்டு வேலைகளிலும் நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
இம்பூரல் செடி:
- சமஅளவு இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் இடித்து குடிநீராக்கி உட்கொள்ள ஈளைநோய் குணமாகும்.
தூதுவளை:
- தூதுவளையை மிருதுவாக அரைத்து சிறிதளவு பசும்பாலில் சேர்த்து காலை மாலை உண்டு வந்தால் கைநடுக்கம் விரைவில் நலமடையும்.
இலவங்கப்பட்டை:
- இலவங்கப்பட்டை, வால்மிளகை தூளாக்கி தேவையனையளவு நெய் சேர்த்து தினமும் உண்டுவர இருமல் விட்டொழியும்
சுக்கு:
- காதிலிருந்து சீழ்வடியும் நோய்வகையை குணப்படுத்த இந்துப்பு, சுக்கு சம அளவுடன் அரைத்து, வெண்ணெயில்யிட்டு காய்ச்சி மூன்று முறை விட சீழ் வடிதலை உடனே கட்டுப்படுத்தும்.
நவாச்சாரத்தை:
- தொண்டை புண்ணிற்கு கோழிமுட்டை வெண்கருவில் நவாச்சாரத்தை சேர்த்து அரைத்து குரல்வளைக் குழியின் மேல் பகுதிகளில் வருடுதல் வேண்டும்.
அதிமதுரம்:
- தலைப் பகுதியில் ஏற்படும் மிகுந்தவலிக்கு அதிமதுரம், சோம்பு, சர்க்கரை சேர்த்து சூரணமாக செய்து சிறிதளவு தேனில் கலந்து உண்ண ஒற்றை தலைவலி எளிதாக குணப்படுத்தலாம்.
நாட்டுச் சர்க்கரை:
- நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து உண்டால் வயிற்றுளைச்சல் நோயை (சீதபேதி) எளிய முறையில் தீர்வு காணலாம்.
முருங்கைப்பட்டை:
- முழங்காலுக்குக் கீழ், காலைப் பெருமளவில் வீங்கிப் பருக்கச்செய்யும் வியாதியான (யானைக்கால்) வீக்கம் குறைய முருங்கைப் பட்டையுடன் சிறிதளவு கடுகு சேர்த்து அரைத்து கட்டு போட யானைக்கால் வீக்கம் சிறிது சிறிதாக குறையும்.
முடிவுரை:
"மருத்துவம் அதன் மகத்துவம்!"என்ற தலைப்பில் சில இயற்கை மருத்துவத்தை நான் இங்கு பதிவு செய்துள்ளேன்.
