உழவன் யார்? இந்த உலகம் அறியுமா?

உழவன்

உழவன்

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"

முகவுரை:

இந்த நிலவுலகத்தில் எவ்வளவு தொழில் செய்து வந்தாலும், உலகம் ஏரின் பின்புறம் தான் இயங்குகிறது. எனவேதான்  உழவுத் தொழிலே முதன்மையாக விளங்குகின்றது. உழவுத் தொழிலை நன்செய் அல்லது புன்செய் நிலத்தில்  செய்ய முடியாமலும் பிற தொழில் செய்வோருக்கும் பசிப்பிணியை போக்கும்  நம் “உழவன்” செய்யும் தொழிலே இன்றிமையானது.

உழவன்:

பழமைவாய்ந்த நம் தமிழ் மொழியில் சங்க இலக்கியங்கள் கூறும் உழவனின் வல்லமையை எடுத்துரைக்கும் நூல்கள் சில:

புறநானூறு:

"தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறு புல்லாளர் முகத்தளவை கூறி
வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை"

 பெரும்பாணாற்றுப் படை:

“களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலையாரச் சூடி”

மதுரைக் காஞ்சி:

‘‘நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர்
பாடு சிலம்பின் மிசை ஏற்றத்
தோடு விளங்கும் அகலாம்பியிற்
கயனகைய வயல் நிறைக்கும்
மென்றொடை வன்கிழார்”

பொருநராற்றுப்படை:

“கூனி குயத்தின் வாய் நெல்லரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவை இய குன்றாக் குப்பை"

பெரும்பாணாற்றுப்படை:

‘‘நீங்காயாணர் வாங்கு கதிர்க் கழனிக்
கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செய் நெல்லின்
தூம்புடைத்திரள் தாள் மிதுத்த விளைஞர்
பாம்புறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலிபெறு வியன்களமலிய வேற்றிக்
கணங் கொள் சுற்றமொடு கைபுணர்ந்தாடும்
துணங்கையம் பூதம் துகிலடுத்தவை போல்
குழுமுநிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத்துகள் தப
வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற்றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன்மலையின் சிறப்பத்தோன்றும்”

விரிவுரை:

இயற்கையோடு ஒன்றி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி வகுப்பவன் தான் இந்த உழவன். இயற்கை நமக்கு நிலம் நீர் காற்று ஆகியவற்றை தந்தாலும், அதனை முறையாக உபயோகப்படுத்தி  மண்ணின் வளத்தையும் மக்களின் உயர்வையும் உருவாக்கியவனே  நம் உழவன் தான்.

மண் வளத்தைப் பாதுகாக்க இயற்கை  முறைப்படி விளை நிலத்தை பருவக்காற்றினால்  மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு பொழியும் பருவமழையை  அடிப்படையாக    கொண்டு உழவு செய்வதால் பயிர் விளையும், பூமியானது  மழை நீரை உள்வாங்கி மண்வளத்தை பாதுகாத்து பயிர்கள் செழிப்புடன் வளர வழிவகுத்தவன்.

பயிர்களின் வளர்கிற முறையை மேம்படுத்த விளைநிலத்தை சமமாக செய்து மண் கட்டிகளை எளிமைப்படுத்தி  சீராக்குவதுடன், நீர்த்தன்மையானது  சீரான முறையில் நிலத்தில் பரவி பயிர்கள் வளர்வதற்கு உழைத்தவனே இவன்தான்.

தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலத்தில்  மக்கள் அனைவரும் நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்பு வகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, போன்றவைகளை இயற்கையோடு இணைந்து இயற்கை தழைகளின்  மூலம், காற்று மண்டலத்தில் கானப்படும் தழைச்சத்தை ஈர்த்து பயிர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றிக் கொடுக்கும் நுண்ணுயிரிகள் மூலம்  உலக மக்களுக்கு சத்தான உணவுகளை உற்பத்தியாக்கி  தந்தவனே உழவன் தான்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

நாம் உயிர் வாழ ஒன்றே ஒன்றுதான் “விவசாயம்” சங்க காலத்தில் வாழ்க்கையின் உயிரென பெரிதும் போற்றப்பட்டு இருந்தது இந்த "விவசாயம்" அதனால்தான் உழவன் இயற்கை சூழ்நிலைக்கேற்ப மண் வளத்தினை கண்டறிந்து பயிர்களை விளைநிலதில் விதைத்தவன் தான் இந்த உழவன்.

இயற்கை நமக்கு அருளிய மரங்களையும், மூலிகைச் செடிகளையும், இயற்கை வளங்களையும், பாதுகாத்து மண் வளத்தைப் செழுமையாக  மாற்றி மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.

உழவனின் உயர்ந்த எண்ணமே! நல்வாழ்வு வாழ  எதிர்காலத்தை நினைவில் வைத்து நிகழ்காலத்தை புலமையோடு செயல்பட்டு பிறர் காலப்பசிக்காக உழைத்துக்கொண்டே வாழும் உன்னதமானவன்.

தான் நிலையற்ற வாழ்க்கையில் வசித்தாலும்  தன்னலம் மறந்து பிறர் பசியாற்றுதலை  உயிர் நலமாக கருதி தன் இளம்பசியை மறைத்து தன்னிறைவோடு  வாழ்பவன் தான் இவன்.

இப்பூமியைப் புழுதியாக்கி, உழைப்பை உயிராக்கி, வியர்வையை நீராக்கி இம் மண்ணில் வாழும் ஓரறிவுயிர் முதலிய உயிரினம் வரை உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வை  ஊட்டியவனே.

முடிவுரை: 

இவ்வுலகில் இயற்கையின்  வண்மையும், காற்றின் இராகத்தையும், சேற்றின்  கூத்தாட்டத்தையும், எருதின் களைப்பையும், உழவனின் உழைப்பையும்,  (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) உயிர்களின் வாட்டத்தையும் போக்கியவனே!

Previous Post
First

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars