மண் வளம் நம் நாட்டின் இயற்கை நலம்!

மண் வளம்

மண் வளம்

"இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்"

முகவுரை:

இயற்கை படைப்பில் எண்ணற்றவைகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முதன்மையானது மண்வளமே  ஆகும்.  சங்க இலக்கியங்களில் ஐந்து  வகை நிலமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனவும், இதில் மருத நிலத்தையே விவசாயத்திற்கு ஏற்றது என குறிப்பிட்டுள்ளனர்.மண் வளத்தைக் கொண்டு நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என வகைப்படுத்தினர். இயற்கை சூழ்நிலைக்கேற்ப தட்பவெட்ப நிலையை அறிந்து மண்ணையையும், இயற்கையும் பாதுகாக்க விவசாயத்தை தன் தலையாய கடமையாக மேற்கொண்டு வந்தனர்.

மண் வளம்:

மண் உயிரூட்டமுள்ளதாக  இருப்பதால் தான், உலகில் எல்லா உயிர்களின் வாழ்க்கையும் மண்ணை சார்ந்தே அமைந்து, இயற்கையின் வளர்ச்சிக்கு இன்றியமையானதாக மண் வளம் நம் நாட்டின் இயற்கை நலமாக  விளங்குகிறது.

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மண்ணானது நீரினாலும், பாறைகள் உராய்வினால் சிதைந்து சிறுசிறு துகள்களாக உண்டாகி நிலப்பரப்பினை வந்தடைகிறது. மரம், தாவரங்கள் செடிகொடிகள் வளர்ச்சிக்கு கனிம தாதுக்களை  கொண்டு ஊட்டச்சத்துக்களை வழங்கி  கொண்டே இருக்கிறது. 

விரிவுரை:

மண்ணின் வகைகள் சில:

  1. கரிசல்மண்
  2. வண்டல்மண்
  3. செம்மண்
  4. களிமண்
  5. உவர்மண்
  6. சரளைமண்
  7. மலைமண்
  8. பாலைவனமண்

கரிசல் மண்


எரிமலையிலிருந்து வரும் குழம்பு மற்றும் தீப்பாறைகளின் மூலம் வரும் படிதலால் கரிசல் மண் ஏற்படுகிறது .

ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் பண்பு இயற்கையாகவே இதற்கு உண்டு. இதில் அலுமினியம், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், சுண்ணாம்பு கார்பனேட் முதலிய தாதுக்களை கொண்டுள்ளது.

இந்த கரிசல் மண்ணில் விளையக்கூடிய சூரியகாந்தி, பருத்தி, பழங்கள் காய்கறிகள், நெல், கடுகு, கோதுமை, சோளம், திணை வகைகள் வளம் பெற்று விளங்குவதற்கு ஏற்றதாக இந்த கரிசல்மண் விளங்குகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அதிகமாக இம்மண் காணப்படுகிறது.

வண்டல் மண்

வண்டல் மண்

மேகங்கள் உருவாகி மழையாகப் பொழிந்து நீர் நிலைகளாக  பூமியின் மீது தவழ்ந்து விழுவதினால் உண்டாகின்றது. இவ்வகையான வண்டல் மண் இரண்டு வகையாக உள்ளது. அவை வெளி நிறத்துடன் கூடிய வண்டல் மண் களிமண் கூடிய வண்டல் மண் ஆகும்.

கரும்பு, நெல், கோதுமை, பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதற்கு ஏற்றதாக விளங்குகிறது. இந்த வண்டல் மண்ணானது கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, ஆற்று பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது மேலும் பஞ்சாப், உத்தரகாண்ட், அரியானா  மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களில் சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றது. சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் பாஸ்பரிக் அமிலம், தாதுக்கள் அதிகமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், திருநெல்வேலி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு காணப்படுகிறது.

செம்மண்

செம்மண்

படிவுப் பாறைகளின் மூலம் செம்மண்ணானது  சிறிது சிறிதாக சிதைந்து மண்ணாக மாறியதே செம்மண் ஆகும்.  சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த செம்மண்ணில் நுண்துகள்கள் இருப்பதால் ஈரப்பதத்தை அதிக அளவு சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இருப்பினும் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது. சோளம், கம்பு, பருத்தி போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்,மதுரைவிருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமளவில் காணப்படுகின்றது.

களி மண்

களி மண்

கருமை நிறம் கொண்ட இம்மண்ணானது ஈரப்பதம் நிறைந்த காலநிலையை அதிக அளவு காணப்பட்டாலும், பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் குறைவாகவே உள்ளது. காரத்தன்மை கொண்ட இவ்வகையான மண், கேரளா, ஆலப்புழா மாவட்டங்களிலும் ஒரிசா, மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்திலும் மற்றும் தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் காணப்படுகிறது.

உவர்மண்

உவர்மண்

குளோரைடு, சல்பேட் உப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தாலும் மற்றும் நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால், உவர் நிலங்களில் பயிரிகளின் வேர்களால் நீரை ஈர்க்க முடியாத நிலை ஏற்பட்டு இந்நிலங்களில் விதைகள் முளைக்க தன்மையற்ற நிலை ஏற்படுகிறது. மேலும்  இவ்வகையான மண் கடற்கரை ஓரங்களிலும் மற்றும் மத்திய நிலப்பரப்பிலும் காணப்படுகிறது.

சரளை மண்

சரளை மண்

அதிகமனா வெப்பமும் மழையும் மற்றும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் சரளை மண் உண்டாகிறது. இரும்பு ஆக்சைடு அதிகமாக இருப்பதால் சிவப்பு நிறம் கொண்டதாகவும்  மேலும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை அற்றதாகவும், இதில் காபி, ரப்பர், முந்திரி மரவள்ளி, இஞ்சி, மிளகு, வாழை போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது இம்மன்னனது கர்நாடகா ஆந்திரா ஒரிசா கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இம்மண் வகைகள் காணப்படுகின்றது.

மலை மண்

மலை மண்

வெப்பநிலையின் மூலம் இயற்கை சீற்றத்தின் மூலமும் பாறைகள் சிதைந்து உருவானதுதான் இந்த மலை மண்.  இதில் பொட்டாசியம் பாஸ்பரஸ் சுண்ணாம்பு தாதுக்கள் குறைவாக காணப்படுகின்றது மேலும் காரத் தன்மை உடையதாகவும் இருக்கின்றது கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் மற்றும் இமாச்சல பிரதேசங்களிலும் காணப்படுகிறது இதில் தேயிலை காபி ரப்பர் மக்காச்சோளம் ஒரு லைக் பார்லி போன்றவை பயிரிட ஏதுவாக இருக்கிறது.

பாலைவன  மண்

பாலைவன  மண்

அதிக வெப்பம் மற்றும்  ஆவியாதல்  மூலமாக வறண்ட நிலப்பகுதியாக காணப்படுகின்றது. இப்பாலைவன மண்ணில்  இயற்கை தாவரங்கள் இல்லாததால் இரும்புச்சத்து மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. கால்சியம், கார்பனேட், உயிர்சத்துக்கள் மற்றும் நைட்ரஜன் சத்து குறைவாக காணப்படுவதால் ஈரப்பதத்தை உள்வாங்கி சேகரிக்கும் திறன் அற்றது.

ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற பகுதிகளில் பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.

முடிவுரை: 

மண் வளத்தை பாதுகாத்து, இயற்கை சூழ்நிலையும் காக்க அனைவரும் இயற்கை விவசாயத்தை செய்து இனிமையான வாழ்க்கை தரத்தை உயர்த்த மண் வளம் நம் நாட்டின் இயற்கை நலமாக உழவன் பின்னால் கைகோர்த்து உழைத்திடுவோம்.

இயற்கையோடு ஒன்றி தரமான விவசாயத்தை பெருக்கி இந்த மண்ணில் விவசாயத்தின் முதுகெலும்பாய் மண் வளமும் இயற்கை நலமும்  விளங்க நாம் பாடுபடுவோம்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars