முகவுரை:
இவ்வாறு சங்க இலக்கியங்களில் வாழையின் பெருமை எடுத்துரைத்து நம் பழந்தமிழ் மொழியில் சாசனமாக வகுக்கப்பட்டுள்ளது.
இயற்க்கை தாவரமாகவும், மக்களுக்கு மருந்து மற்றும் உணவாகவும், பயன்படப்படும் வாழையின் ஒவ்வொரு பகுக்கையிலும் இயற்க்கையான மருத்துவப் பலன்களை கொண்டிருக்கும் அற்புதமான தாவரம் தான் நம் வாழை மரம்.
விரிவுரை:
நம் தேசத்தில் (விவசாயம்) பயிரிடப்படும் பழப்பயிர்களில் வாழை மிக முக்கியமான பங்கு வகித்து, வளமான தேசமாக மாற்றி மனித ஆற்றலுக்கும் ஆரோக்கியத்திற்கும் இயற்க்கை மருத்துவமாக சிறந்தது விளங்குகின்றன.
விதை:
- அடர்நிறப் புள்ளிகள் போன்று காணப்படும்.
- சில வாழையின் இரகங்களில், விதைகள் இல்லாதது போன்று இருக்கும் பழத்தின் மையத்தில் மிகச்சிறிய கருப்பு நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்படும்.
- தரிசு நிலங்களில் விளையும் இரகங்களில், விதைகள் பெரியதாகவும், கடினத்தன்மையாகவும், அதிக எண்ணிக்கையில் காணப்படும்.
வேர்:
- வேர்கள் வாழை மரத்திலிருந்து ஐந்து மீட்டர் வரை பரவியிருந்தாலும், தண்டிலிருந்து அதிகமான வேர்கள் 60 செ.மீ. வரையிலும், மிக சிறிய வேர்கள் முதன்மை தண்டு வேர்களின் துணைகொண்டிருக்க உதவுகிறது.
- வேர் கிழங்கின் மையத்தில் நீளமனா உருளைப் பகுதியின் வெளிப்புறத்தில் தோன்றுகிறது.
- வேரில் இரண்டு வகைகளாக உள்ளன. கிழங்கிற்கு இணையாக வளரக்கூடிய வேர்கள், மற்றோன்று எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும் வேர்கள்.
- வேர் ஆரம்பத்தில் வெண்மை நிறமாக காணப்படும்.
தண்டு:
- நிலையான தண்டானது (வேர்க்கிழங்கு) பூமிக்கடியில் காணப்படும்.
- பூமியின் மேல்லிருக்கும் தண்டு பொய்த் தண்டாகும்.
- முதிர்ந்த இலை உறைகள், வளர்ந்து வரும் இளம் இலைகளால் அதனுள்ளே தள்ளப்படுவதால் வழவழப்பான பொய்த் தண்டு உருவாகிறது.
இலை:
- குலை தள்ளிய பின்பு இலைகள் வருவது நின்று விடும்.
- பருவ நிலைகள் மற்றம் காலங்களைப் பொருத்து இலைகள் உருவாகும்.
- பொதுவாக வாழை இலையானது பச்சை நிறத்தில் காணப்படும். ஆனால் நேந்திரன், ரஸ்தாளி, செவ்வாழை, பூவன், கேவண்டிஷ் (பச்சை வாழை), பச்சநாடன் மற்றும் பிற ரகங்களின் நடுநரம்பு மற்றும் இலைகளில் ஊதா நிறத்தில் பட்டைகள் காணப்படும்.
- இலைகள் சிறகு போன்ற இணைப்போக்கு நரம்பமைப்புடையது.
- ஒரு இலை வெளிவருவதற்கு 6 முதல் 8 நாட்கள் தேவைப்படுகிறது.
- வாழை ரகங்களைப் பொருத்து 30 முதல் 40 இலைகள் வரை இருக்கும் தன்மை வாய்ந்தது.
பூக்கள்:
- ஒரு கணுவிற்கு 12 முதல் 20 எண்ணிக்கையில் இருக்கும்.
- இந்த பூக்களின் தண்டானது, மையப்பகுதி வழியாக மேல்நோக்கி வளரும்.
- பூ மடல்களின் நுனியில் பூக்கள் இரு வரிசைகளில் அமைந்திருக்கும்.பூக்களின் அடிபகுதியில் பெண் பூவாகவும், நுனியில் உள்ள பூக்கள் ஆண் பூவாகவும் இருக்கும்.
- பூக்களானது ஒன்றுக்கு மேல் ஒன்றாக, இரண்டு வரிசைகளில் காணப்படும்.
மஞ்சரி:
- மஞ்சரியானது(பூங்கொத்து) பூக்களைக் கொண்டிருக்கும். இந்த பூக்களானது இரண்டு வரிசைகளில், பூக்காம்பு பகுதிகளில் அமைந்திருக்கும்.
- இந்த பூக்களை தடித்த மெழுகுத்தன்மையுள்ள பூ மடல்கள் மூடிய தன்மையில் இருக்கும்.
- தண்டின் மேல்பகுதியில் வாழை பூவானது இலைகள் வெளிவந்த பின்புதான் வளைந்து பூமியை நோக்கி தொங்கிகாணப்படுகிறது.
பூவின் புறவட்டம்:
- இதழ்கள் இரண்டு வட்டங்களில், தனித்தனியாக வரிசைக்கு மூன்றாக இணைந்து காணப்படும்.
- வெளி வட்டத்தில் 3 புல்லி இதழ்களும், உள் வட்டத்தில் 2 புல்லி இதழ்களும் ஒன்றாக இணைந்து, 5 சொர சொரப்பான குழரய் போன்ற அமைப்போடு காணப்படும்.
ஆண்பூ:
- சூல் முடி மூன்று அறைகளை உடையது.
- எண்ணற்ற சூல்கள்கொண்டிருக்கும் தன்மையினை கொண்டது.
- சூல் தண்டு தனித்து, நூல் வடிவத்தில் இருக்கும்.
மருத்துவ குணம் நிறைந்த வாழை:
வாழை இலை:
- நாம் உண்ணும் உணவில் இயற்கையாகவே சுவைகூடுவதற்கு வாழை இலையம் ஒன்று.
- இதில் மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
- வாழை இலையில் பச்சையம் நிறைந்து காணப்படுதால். வெப்பமான உணவை நாம் உண்ணும்போது பாலிபீனாலால் ஏற்படும் சத்துக்களும் புரதமும் நம் உடலில் ஊடுருகின்றன.
வாழைப்பூ:
- வைட்டமின் "எ" நிறைந்துள்ளத்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்கிறது.
- ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
- கடுமையான மூலநோயை தீர்க்கும் தன்மை கொண்டது.
- பெண்களின் மாதவிலக்கு சீர்குலைவு, கர்ப்பப்பை மற்றும் வெள்ளைப்படுத்தலுக்கு மிகச்சிறந்த மருந்தாக வாழைப்பூ உள்ளது.
- வயிற்றுப்புண், வாயு, செரிமான கோளாறுகளுக்கு எளிதில் குணமடைய உதவுகிறது
- வாய் வழியாக வெளியேறும் ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் (வாந்தி) மயக்கநிலை போன்ற பாதிப்புக்களை தீர்க்க வலிமை உடையது.
வாழைக் காய்:
- ஒன்றோடு ஒன்றாக இணைந்து காணப்பட்டு, இரண்டு வரிசைகளாக காய்கள் அமைந்திருக்கும்.
- காயானது சதைப்பற்றுள்ள பழ வகையைச் சேர்ந்தது.
- பெண் பூவில் சூல் பையும், சூல் முடியும் இருந்தாலும், அதில் கருத்தரிப்பது இல்லை. மகரந்த சேர்க்கை இல்லாமலேயே வாழைக்காய்கள் உற்பத்தியாகின்றன.
- வாழைக்காயானது, பூ வெளிவந்த 90 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடைகிறது.
- ஆண் பெண் பூக்கள் இரண்டுமே இருந்தாலும், இதில் சேர்க்கை நிகழ்வது இல்லை.
- வாழைக்காயில் மாவுச்சத்து மிகுதியாக காணப்படுகிறது.
வாழைப்பழம்:
- நுண்ணூட்டச் சத்துக்களான வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் நிறைந்தது காணப்படுவதால் உடல் சோர்வடையாமல் ஆரோக்கியத்தன்மை பெறுகிறது.
- இரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய செயல்பாடுகளை சமநிலையாக்கமிகவும் பயன்னுள்ளதாகிறது.
- இருதய நோய், பக்கவாதம் வராமல் தடுக்க துணைபுரிகிறது.
- மாதவிலக்கு, குணமடைய எளிய தீர்வாகும்.
- எலும்புகள் வலிமை பெறவும், உடல் சீரான நிலையில் தக்கவைத்துக்கொள்ளவும் பயன்படுகிறது.
வாழைத்தண்டு:
- உடலிலிருக்கும் உப்பு தன்மையை வெளியேற்ற உதவுகிறது.
- பொட்டாசியம் மற்றும் சிட்ரிக் அமிலமானது சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்க பயன்படுகிறது.
- மிகுந்த அளவில் நார்ச்சத்து இருப்பதால், வாழைத்தண்டை சாராக பிழிந்து பருகுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கவும், நச்சுக் கழிவுகள் வெளியேறும் மிகவும் பயனுள்ளதாய் அமைகிறது.
- இரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்க மற்றும் இரத்த சோகையை குணமாக்க உதவுகிறது.
- நீரிழிவு (சர்க்கரை) நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக வாழை மனித ஆற்றலுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
வாழைபழ வகைகள்:
- செவ்வாழைப்பழம், ரசுதாளி வாழைப்பழம், கற்பூரவல்லி வாழைப்பழம்,மலை வாழைப்பழம், பேயன் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கதலி வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம்,நேந்திர வாழைப்பழம், மட்டி வாழைப்பழம் ஆகும்.
இக்கட்டுரையின் வாயிலாக வாழை! மனித ஆற்றலுக்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்த இன்றிமையாத இயற்கை மருந்தாக வையகத்தில் நிலைத்து நிற்கிறது.
