பழந்தமிழ் மொழியில் வியக்கவைக்கும் அறிவியலின் சிந்தனை துளிகள்!


பழந்தமிழ் மொழி

பழந்தமிழ் மொழி

முகவுரை:

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்ற திருக்குறளின் வாயிலாக உலகம் உருண்டை என்பதை  உலகத்திற்கு முதன் முதலாக எடுத்துரைத்தவர்  திருவள்ளுவர் ஆவார். 

15 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை அயல் தேசத்தினர் உலகம் தட்டையானது என்று  எண்ணம் கொண்டிருந்தனர். போலந்து நாட்டைச் சோந்த நிக்கோலஸ் கிராப்ஸ் என்பவர் உலகம் உருண்டை என்றார். ஆனால் அந்த  கூற்றை ஒருவரும் ஏற்கவில்லை.

அறிவியல்:

நம் தாய் மொழியான தமிழ்மொழியில்  ஆதிகாலத்திலேயே  உலகம் உருண்டை என்ற உண்மையை உலகறிய செய்து, நம் தமிழ்மொழியின். சிறப்பையும் வியக்கவைக்கும் உலக அறிவியலையும் உணர்த்தியதே!

அறிவியல் தமிழ் மொழியின் அடையாளமாக கருதப்பட்டு, பழம்பெருமை வாய்ந்த தமிழ் இலக்கிய நூல்களில் சாசனமாக வகுக்கப்பட்டு, உலக மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

கல்வெட்டுக்கள் 

பழந்தமிழ் மொழி

விரிவுரை:


பழந்தமிழில் அறிவியலின் சிந்தனை துளிகள்:

தமிழ் இலக்கியங்களில் "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்ற ஔவையார் கூற்றுபடியும் “அண்டப் பகுதியில் உண்டைப் பிறக்கும் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழிய பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன" என்ற திருவாசகப் பாடல் மூலம் பழம் தமிழ் மொழியில் வியக்கவைக்கும் அறிவியலின் சிந்தனை துளிகளை  விளக்குகிறது.

  • "உலகு" என்ற அடிச்சொல்லிற்குச் சுற்றுதல் என்று பொருள் (உலா, உலாவுகின்றான்) இதன் அடியாகப் பிறந்தது தான் "உலகம்" என்ற தமிழ் சொல்லாகும்.
  • "ஞால்" என்ற அடிச் சொல்லுக்குத் “தொங்குதல்" என்று பொருள் இதன் அடியாகப் பிறந்தது தான் "ஞாலம்" என்ற தமிழ்ச்சொல்லாகும்.
  • "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்து மண்டிலமும்" என்ற குறள்  வடிவதித்தின் மூலம் அறியலாம்.
  • திங்கள் தானாகவே  ஒளி வீசுவது இல்லை. இந்த வானியல் உணமைகளை  திருக்குறளில் முன்னதாகவே சாசனமாகி உள்ளது.
  • கோள்களின் நிறம், வடிவம், அதன் இயல்பு போன்ற உண்மைகளையும் நம்  முன்னோர்கள் அறிந்து அதற்குத்தகப் பெயர் சூட்டினார்கள். செந்நிறம் கொண்ட கோள் "செவ்வாய்" ஆகும். தற்காலத்தில் செயற்கைக் கோள் அனுப்பி புகைப்படங்களின் மூலம் ஆராய்ந்து அறிஞர்கள் அதன் மண் செந்நிறமாக உள்ளது என்கின்றனர்.
  • புதியதாக அறிந்ததால் இதற்கு புதன் கோள் (அறிவன்) என்ற பெயரும் உண்டு.
  • "வியா" என்றால் "பெரிய" "நிறைந்த" என்று பொருள். "காரி" என்பது கந்தகத்தைக் குறிக்கும். இன்றைய அறிவியல் அறிஞர்கள் இக்கோளில் கந்தகம் நிறைந்திருப்பதாக ஆய்ந்து கண்டுள்ளனர்.
  • வெண்மை நிறம் உடைய கோள் "வெள்ளி" எனப்பட்டது. இன்று அதில் வெள்ளித்தாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக் கோள் ஞாயிறு தோன்றுவதற்கு முன்பே விடியற்காலையில் பிரகாசமாக தோன்றும் ஆதலால் அதற்கு "விடிவெள்ளி" என்ற பெயர் வைத்தனர்.
  • ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என வார நாட்களை ஏற்படுத்திக் உலகத்தைச் சுற்றியுள்ள பகுதியை 30 பாகை கொண்ட 12 பகுதிகளாகப் பிரித்தனர் (30 x 12 - 160) இப்பன்னிரண்டையும் மாதங்கள் என்று பெயரிடப்பெற்றன.
  • சிலப்பதிகாரம், மணிமேகலை இலக்கியங்களில் வான்வெளிப் பயணத்தை குறித்து செய்தி இடம் பெற்றுள்ளது. சீவக சிந்தாமணியில் மயிற்பொறி விமானத்தின் செயல்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது.
  • பெருங்கதையில் வானூர்தியின் வடிவமும் "தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்ற பதிற்றுப் பத்து வரிகள் கரும்டைப் பிழிவதற்கு எந்திரம் இருந்ததைக் கூறுகிறது.
  • "அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்" என்ற பெருங்கதை அடியில் வரும் "எந்திரக் கிணறு" என்பது ஆழ்துளைக் கிணற்றைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பெருங்காதையில் வரும் எந்திர யானை கிரேக்கத் தொன்மத்தில் வரும் டிராய் போருடன் இணைத்து கூறப்பட்டுள்ளது.
  • இயற்கை  மருத்துவ முறைய பதினெண் சித்தர்கள் நம் தமிழ் மொழியின் வாயிலாக பழம் தமிழ் மொழியில் வியக்கவைக்கும் அறிவியலின் சிந்தனைகளை பல நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

முடிவுரை: 

சூரியன் ஒவ்வொரு முப்பது பாகைக்குள் நுழையும் தோற்றத்தை மாதப்பிறப்பாகவும், சூரியன் மாதத்தின் நடுவில் தோன்றுவதை "நடுக்குத்து" எனவும், ஒளி சுற்று முடிந்து இரண்டாவது சுற்றுத் தோன்றுவதை வருடப்பிறப்பு என்றனர். ஆனால் சித்திரை மாதப் பிறப்பை  மட்டும் ஆண்டு பிறப்பாகக் இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

மேல் தேசங்களில்  மாத, ஆண்டுக் கணக்குகள் பற்பல மாற்றங்களைப் பெற்று இன்று நம் நாட்டிலுள்ள நிலையை அடைந்துள்ளனர். 

பழம் பெருமை வாய்ந்த நம் தமிழ் மொழியின் நூல்களில் அறிவியலின் வளர்ச்சிக்கு என்றும் ஆதாரமாய் விளங்கும் சங்க இலக்கிய நூல்களே ஆகும்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars