“அண்டத்தில் உள்ளது பிடி பிண்டத்திலும் உள்ளது”
முகவுரை:
பூமியானது சுழண்டு கொண்டே இருக்கும் தன்மை போல், சுழலும் சக்கரத்தின் மையத்தில் மனித ஆயுளை நீடிக்க மகத்தான களிமண்ணைக் கொண்டு மண்பானையாக பல பொருட்களை செய்து மனித வாழ்விற்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், நிலையான வாழ்க்கையும் தந்த மண் மகனே (குயவர்) ஆவான்.
விரிவுரை:
இந்த நிலவுலகில் இயற்கை சூழ்நிலை மாற்றங்களினாலும் வெப்பத்தினாலும் ஏற்படும் வியாதிகளைப கட்டுப்படுத்த பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் மண்ணில் இருக்கும் தாதுக்களைக் கண்டறிந்து களிமண்ணால் மண்பாண்டங்களை செய்து உணவு உட்கொள்ளும் முறையை மேற்கொண்டு நீண்ட ஆயுள் நிலையான வாழ்க்கை கொண்ட மண் மணம் வீசும் மண்பானை மூலம் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட நாள் வாழும் யுக்தியையும் நமக்கு வழிவகுத்து சென்றனர்.
மேலும் பழம்பெருமை வாய்ந்த இலக்கியங்களான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெருமாளை குறித்து நம் பண்பாடு மிக்க மண்பானையை பற்றி கூறப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் தரும் மண் மணம் வீசும் மண்பானை:
- மண்பானைகளில் இருக்கும் சிறிய நுண்மை துளைகளின் வழியே ஊடுருவி நீரானது ஆவியாகி கொண்டே இருக்கும். பானையின் வெப்பமும் நீரின் வெப்பமும் தொடர்ச்சியாக ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுவதால் நீரானது மண்பானைகளில் எப்பொழுதும் குளிர்மை தன்மை ஆகவே இருக்கிறது.
- இயற்கையான உலக சேர்மம் மிகுதியாய் காணப்படுவதால் மண்பானைகளில் செய்யும் உணவானது சத்துக்கள் நிறைந்ததாகவும் எளிதில் நஞ்சாக மாறாமல் நீண்ட நேரத்திற்கு பாதுகாக்கவும் உதவுகிறது.
- உடல் வலிமை, ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளையும் பெற வழிவகுக்கிறது
- ரத்த சோகை, இரும்புச் சத்து குறைபாடு முதலிய வியாதிகளை குணப்படுத்த எளிய தீர்வை உண்டாக்குகிறது.
- “உணவே மருந்தாகும்” தன்மைப்போல் மண்பாண்டத்தின் மூலம் உணவு செய்து உண்ணுவதால் ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கவும் பெண்களின் மாதவிடாய் நோய்களையும் சீராக்க உதவுகிறது.
- வயிற்றுப்புண், உடல் வெப்பத்தையும் தனித்து உணவை எளிதில் ஜீரணமாகும் தன்மை பெற்று மிகுந்த பசியையும், ஆழ்ந்த தூக்கத்தையும், கலப்பில்லாத உடல் மாற்றத்தையும் தருகிறது.
- மண் பானையில் தயிர் சேகரித்து வைத்தால் நீண்ட நாட்கள் புளியற்ற தன்மையாக இருக்க பயன்படுகிறது.
- நீரை மண்பானையில் வைத்து பருகுவதால் இயற்கையாகவே மண்ணில் காணப்படும் சத்துக்களும், பிராண சக்தியும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
- மாவினாற் சமைத்த உணவுவை மண்பானையில் செய்து உண்ணுவதால் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெற்று உடல் வலிமை பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் உறுதுணையாக அமைகிறது.
- நீண்டகாலம் தானியங்களை மண் பாண்டங்களில் வைத்து பாதுகாப்பதால் அதன் இயல்புத் தன்மை மாறாமல் இருக்க பயன்படுகிறது .
- சிற்பங்கள் மற்றும் அழகு வடிவமைப்பு பொருட்கள் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
இவ்வகையான மண்பானைகள் அயல் தேசங்களாக ஆசியா ஆப்பிரிக்கா ஆப்பிரிக்காவிலும் நிலவி வருகிறது.
எண்ணற்ற அறிவியலும் ஆற்றலும் நம்மிடையே வழக்கத்தில் இருந்தாலும் மண் பானைகள் மூலம் உணவு செய்து மனித சமூகத்தை காத்து, மண்வளம் இனிமையானது என்ற இயற்கையின் தத்துவத்தை உணர்ந்து, நாம் அனைவரும் மண் வளம் நம் நாட்டின் இயற்கை நலம் என கருதி நோயற்ற வாழ்வு வாழ வழிவகை செய்வோம்.
