முகவுரை:
உலக மொழிகளுக்குகெல்லாம் ஆதி மொழியாம் நம் தாய் மொழியான தமிழ் மொழியின் சிறப்பை பூவுலகத்திற்கு பிரதிபலிக்க, இயற்கையாகவே இப்புவியில் வளர்ந்து இன்பமயமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் இந்தப் பனை மரம், பழந்தமிழ் மக்களின் பாரம்பரியமானதாகவும், பண்பாட்டின் படைப்பாகவும், தமிழ்நாட்டின் உயிர்த் துடிப்பாகவும் விளங்குவதே!
பனை மரம்:
“தேசிய மரம்” நம் தமிழகத்தின் பனைமரம். புலவர்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் பழம்பெருமை வாய்ந்த சங்க இலக்கியம், புராணம், இதிகாசம், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய நூல்களை பனை ஓலைகளில் சாசனம் செய்து வருங்கால தலைமுறைக்கு பரிசளித்தனர்.
கூரை குடிசைகளின் கோபுரமாக திகழ்ந்த கற்பக விருட்சம் (பனைமரம்) பல தலைமுறைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது. 30 முதல் 60 அடிக்கு மேல் வளர்ச்சி அடைந்து பனை ஓலைகள் வட்டவடிவமாக பரந்து காணப்பபட்டு, பனை மரம் எங்கள் பாரதத்தின் உயிர் வரமாக இயற்கையின் புகழை உயர்த்தி தமிழ் பூமியின் பெருமையை நிலைநாட்டியது.
விரிவுரை:
ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை,கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை முதலியன.
- இளம் குருத்துக்களில் இருக்கும் இதழை உண்ணுவதால் உடலில் உள்ள உறுப்புகளின் உத்வேகம் வலிமை பெற தூண்டுதலாக அமைகிறது.
- வயிற்றுப் பகுதியில் ஏற்படும் உடல் செரிமான கோளாறுகள் உடலின் வெப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
- பனம் பழத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் கண்பார்வைக்கு மிகவும் அவசியமானதாகிறது.
- மண் சட்டியில் வேக வைத்து வெப்பம் உலர்ந்த பிறகு உண்ணுவதால் நார் மற்றும் புரதச் சத்துக்களும் உடலுக்கு இன்றியமையானதாக அமைகிறது.
- கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச் சத்து, மிகுதியாக காணப்படுகிறது பதநீர் அருந்துவதால் உடல் வெப்பம், வயிற்றுப்புண், குடல் போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது. எலும்புகள் வலுப்பெற இயற்கை மருந்தாகும்.
- சளி, இருமல், தொண்டைப்புண், வாத பித்தம் போன்ற பிரச்சினையை தீர்க்க வல்லமையுடையது.
தமிழ் மொழியை தாய்மொழியாக உலகிற்கு கூறும் பனை மரம் நம் பாரதத்தின் உயிர் வரமாக திகழ்ந்து வருகிறது.
விதை விதைப்பது நம் கடமையாகும், முளைத்தால் மரமாகட்டும் இல்லையெனில் மண்ணிற்கு உரமாகட்டும்.
