முகவுரை:
உயிரினங்கள் வாழும் இந்த பூமியில் நீரில்லாமல் உயிர் வாழமுடியாது. அத்தன்மைபோல் நீரை மழையில்லாமல் பெற முடியாது. நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருக்குறளில் “திரவத்தங்கம்” என்று அழைக்கப்படுகிறது. நீர் வளம் உயிர்களின் நலம் என நம் மனதில் எண்ணத்தை கொண்டு நீர் வளத்தை பாதுகாப்போம்.
நீரின் தோற்றம்:
பூமியானது மூன்று மடங்கு 75% நீரினாலும் ஒரு மடங்கு 25% நிலத்தாலும் உருவாகினாலும், நீரின் தேவையானது அணைத்து ஜீவராசிகளுக்கும் உடலோடு ஒன்றி அமைந்த உயிரின் மருவடிமே நீர் ஆகும்.
நம் பழம் பெருமை வாய்ந்த கங்கை, யமுனை, காவேரி, சரஸ்வதி, கோதாவரி போன்ற நீர் நிலைகள் இயற்கையால் படைக்கப்பெற்று இன்புற்று உயிர் வாழ வழி செய்தது.
நீர் ஆவியாகும் தன்மை பெற்று பின்பு படிவு நீர்வீழ்ச்சியாக ஓடும் நீராகி மீண்டும் நீர் நிலைகளாக வந்துதடைந்து மீண்டும் வெப்பத்தின் காரணமாக காற்றில் ஆவியாதால் செயற்பாட்டையும் ஒளி புகும் தன்மையும் கொண்டது.
நீர் இன்றியமையானது:
இயற்கையாக மேகத்திலிருந்து பொழியும் மழை மண் வளத்தையும் இயற்க்கை விவசாயத்தையும் சுற்றுப்புற சூழலையும் வளம்கொழிக்க நீர் இன்றியமையானதாக விளங்குகிறது.
நீரே அணைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரமாகும். மனித சமூகத்தின் அன்றாட பயன்பாடுகளை நிறைவு செய்து கொள்வதற்கும் நீரின் அவசியம் முக்கியமானதாகிறது.
பூமியில் நீரின் ஆற்றல்:
பூமியில் நீரின் ஆற்றலானது திண்மம், திரவும், வாயு என்ற மூன்று நிலைகளாக விளங்குகிறது.
நிலத்தின் அடியிலும் மேற்பரப்பிலும் இருக்கும் நீரையும், அந்த நீர் உள்ள இடத்தின் அமைப்பைப்பற்றியும் விவரிக்கும் அறிவியல் சிந்தனையாளர்கள் மகாசமுத்திரங்களில் 90% நீரும். வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பனிக்கட்டிகள் 1.5% நீரும் பூமிக்கு அடியில் 1.5% நீரும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
நீரானது அணைத்து உயிரினங்களுக்கும் உடல் உறுப்புக்களில் இயற்க்கையாகவே காணப்படுகிறது. இதில் 60% சதவீதம் மனித உடல் மேன்மையாக காணப்படுகிறது.
நீர் தான் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் உடலின் செயல்பாடுகளுக்கு உதவும் முக்கியமான திரவமாக திகழ்ந்து விளங்குகிறது.
நீர் பாதுகாப்பு முறை:
இயற்க்கை சூழலையும் மனித சமூகத்தையும் பாதுகாக்க நீரின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் சேரும் மாசுபாடுகளையும் நீர் தேவைக்கு குறைவாக உள்ள நிலையாலும் நீர் வளத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.
ஆதிகாலத்தில் மழைநீரை சேமிக்கும் முறையை தொலை நோக்கு பார்வையின் மூலம் கண்டறிந்து நீரை சேகரித்து வைத்தால் இயற்கை வளமும் உயிர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்று, மருத்துவ குணம் மிகுதியாக நிறைந்த செம்புரான் எனப்படும் பாறைக்கற்களால் குளங்களை அமைத்து நீரை தேக்கமடைய செய்தர்கள்.
தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய) குப்பைகூளம் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பின் சேரும் அல்லது வெளியேற்றப்படும் ரசாயனக் கலப்புடைய பொருள், அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு நிறைந்த கழிவுப்பொருள், தொழிற்சாலை, வீடு முதலியவற்றிலிருந்து வெளியாகிற அசுத்த நீர் போன்றவைகளை அகற்றுதலே முதல் பணியாக ஒவ்வொருவரும் செல்படவேண்டும்.
நீரை சார்ந்து வாழும் நீர்வாழ் உயிரினங்களை பாதுகாக்க நீர் பாதுகாப்பு முறை மிகவும் முக்கியமானதாகும்.
நீர் சேகரிக்கும் முறை:
உயிரினங்களில் வாழும் இவ்உலகில் மிக சிறந்த படைப்பாக திகழ்வது மாந்தன் (மனிதன்) ஆவான். ஆனால் இயற்கையாக மேகத்தினின்று பொழியும் மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற சிந்தனையை மேற்க்கொள்ளாமல். சிந்திக்கும் ஆற்றல் உடைய மனிதன் இயற்கை வளங்களை அழித்து மழை பொழிவில்லாமல் இவ்உலகத்தை மாற்றி வாழ வழியின்றி செய்வதே ஆகும்.
இயற்கை மீண்டும் பாதுக்காக்க வேண்டும் என்ற சிந்தனையை எல்லோரும் வளர்த்துக்கொள்ளவேண்டும். நீரின்றி விவசாயிகள் இயற்க்கையால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். பருவ மாற்றத்தினால் உழவனின் கண்களில் கண்ணீரோடு நிலைகுலைந்து வாடுகின்றனர்.
உயிரினம் வாழ நீர் மிக முக்கியமாக கருதப்படுவதால் நீரின்றி ஏற்படும் விளைவுகளை மாணவர்களுக்கு கற்பித்தல் முறையை மேற்கொள்ளவேண்டும். பள்ளி, கல்லுாரிகள் அணைத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இவ்உலக மக்கள் நல்வாழ்வு வாழ வழிவகை செய்வதே சாலச்சிறந்தது.
நீர் பாதுகாக்கப்படாததல் பூமிக்கடியில் நீர் மட்டத்தின் தன்மையானது குறைந்து கொண்டே பல நுாறு அடியில் பெற வேண்டிய சூழ்நிலையாக மாறிவிட்டது.
பல இடங்களிலில் ஆயிரக்கணக்கான அடி வரையிலும் நீரை பெற முடியாத நிலையும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. ஆதலால் ஒவ்வொரு தேசத்தின் முன்னேற்றம் தனி மனிதனை சார்ந்துள்ளது.
மழைநீர் சேகரிக்கும் முறைகள்:
இல்லம் தோறும் மழைநீர் சேமிப்பு நீர்தொட்டியை அமைக்க வேண்டும்.பருவகாலமழை காலங்களில் மழைநீரை சேமிக்க மக்கள் அனைவரும் நீர்நிலைகளை சீரமைக்க ஒற்றுமையாக பாடுபட வேண்டும்.மழைநீர் சேகரிப்பை அணைத்து இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.பூமியில் வாழும் ஒருவருக்கு கூட பாதுகாப்பான குடிநீராக இருப்பதில்லை என பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்
ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடியில் நீரின் அளவானது குறைந்து வருவதாக தவல்கள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. நீருக்காக உலகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.பழம்பெரும் காலத்தில் மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலங்களில் மனித சமூகம் பெரும்பாலும் இயற்கையிலிருந்து விடுபட்டு செயற்கையான படைப்புகளுக்கு அடிமைப்பட்டு இயற்கை வாழ்வாதார முறைகளை மறந்து இடர்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் கட்டிட காலை வல்லுநர்கள் கோவில்களில் மழை நீர் சேகரிப்பு நீர் தொட்டிகளை அமைத்து மழை நீரின் முக்கியத்தை திறம்பட செயல்படுத்தினார்கள்.வீடுகளின் மைய பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்து பாதுகாத்தனர்.
ஒண்றன்மேல் ஒன்றாகப் பல தளங்களைக் கொண்ட அமைப்பு மேல் தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேரும். நீரை உறிஞ்சும் தன்மையில்லாததால் நாட்டு ஓடுகளில் விழும் நீரானது முற்றத்துக்குள் வந்து நீர் கூடல்வாய்க்கு சென்றடையும்.
முடிவுரை:
நீர் வளம் உயிர்களின் நலம் என்று எண்ணி எல்லோரும் ஒற்றுமையாய் பாடுபடுவோம்.
