"அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து"
முகவுரை:
திருவள்ளுவரின் கூற்றுப்படி ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்வதின் மூலம், உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பதே இதற்க்கு சான்று.
கருங்கல்:
கருங்கல் என்பது ஒரு வகையான
கற்பாறை
ஆகும். உடையக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். மிகவும் அடர்த்தியான நிலையை
கொண்டது. அழுத்தம் தாங்கும் திறன் பெற்றிருக்கும். கரடுமுரடான மேற்பரப்புத்
தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி
காணப்படும். கருங்கற்கள் அவற்றின் வேதியியல் மற்றும் கனிம தன்மைகளைப்
பொறுத்து இளஞ்சிவப்பு முதல் சாம்பல் நிறமாகவும் அல்லது கறுப்பு நிறமாக
காணப்படும்.
தமிழர்களின் பண்பாடு:
நம் பண்பாடுமாறாத பழம்பெரும் காலத்தில் கருங்கல் பழம்பெரும் காலத்தின் வரங்களாக மனிதசமூகத்தை நோயின்றி வாழ பல நல்வழிப்பாதையை நமக்கு வழிகாட்டிய நம் முன்னோர்களின் அறிவுப்புலனை பின்பற்றி நாமும் இச்சமுதாயத்தை பேணிக்காக்க உறுதுணையாக செல்படுவோம்.
பண்டைய காளங்களில் தமிழர்களின் வாழ்க்கை முறையானது தனித்துவம் பெற்று விளங்கியது.உணவு முறை, சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இயற்க்கை வழிமுறைகளை கண்டறிந்து மக்களின் இன்றியமையாத வாழ்விற்கு வழிசெய்தனர்.
இப்பூவுலகில் நீர், மண், காற்று, தாவரம், மரங்கள், பாறைகள், கல் முதலிய அனைத்திலும் அதன் தன்மையை அறிந்து வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தவர்கள் நம் முன்னோர்கள்.
கருங்கல்லில் மூலம் அம்மி, ஆட்டுரல், குத்துரல், குந்தாணி, திருகல், உரல் போன்ற பலவகையான கல் பாண்டங்களாகவும், வேம்பு, பாலை, பூசன் புளியன் மரங்களின் மூலம் குத்துரல், உலக்கை, துடுப்பு, மத்து போன்ற மருத்துவம் நிறைந்த பல வகையான பொருட்களையும் உருவாக்கினார்கள்.
இவ்வகையான கல் பாண்டங்களை கொண்டு உணவை சுவையோடு உண்ணுவதற்கு மட்டுமல்லாமல், மெய்யோடு கூடிய உயிரையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணிகாப்பதற்காகவே!
அம்மி:
பழங்காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்துவரும், கருங்கல்லினால்
உருவாக்கப்பட்ட (கற்கருவி) அம்மியானது
மருந்து மற்றும் சமையளுக்கு தேவைப்படும் பொருட்களை அரைப்பதற்கு மேடுபள்ளம் இல்லாமல்
ஒரே சமமாக இருக்கும் கல்லாகும்.
உணவிற்கு ஓர் அங்கமாக விளங்கும் அம்மியானது தேங்காய், மஞ்சள், சீரகம், மிளகு உள்ளிட்ட அனைத்துவிதமான பொருட்களை அம்மிக் கல்லில் வைத்து அரைப்பதற்கு உருளை வடிவமாக குழவி என்று அழைக்கப்படும் கருங்கல் பயன்படுத்தப்பட்டது.மேலும் அம்மிக் கல்லில் நுண்ணிய சிறு புள்ளிகளை உருவாக்கி குழவியை கொண்டு இரு கைகளால் இடித்து அதன் பின்னர் இழுத்து உருட்டினால் பொருட்களானது மிதமாக மாவுத்தன்மைப்போல் அரைக்கப்படுவதால் குழம்பு வகைகளுக்கு சுவையை கூட்டுவதற்கு ஏதுவாக அமைந்தது.
அம்மிக்கல்லின் எடையானது (குழவி) சாதாரணமாக 20லிருந்து 40கிலோ வரை இருக்கும்
தன்மையுடையது.
ஆட்டுரல்:
இதன் மையப்பகுதில் குழியாக ஏற்படுத்தி அதில் அரைக்கவேண்டிய தானியங்களை
குழியினுள் உட்செலுத்தி குழவியைக் கொண்டு கையால் சுழற்றும்போது குழியில்
இருக்கும் தானியங்கள் விரைவாக அரைபடும் தன்மை ஏற்படுத்தி உணவுப்பொருட்களை
உற்பத்தி செய்ய பயனுள்ளதாய் அமைந்தது.
குத்துரல்:
சமஅளவு வட்ட வடிவமாக காணப்படும் குத்துரல், நடுப்பகுதி உடுக்கை போன்று சிறியதாக காணப்படும்.மேல் பகுதி மற்றும் அடிப்பகுதியும் வட்ட வடிவமாக இரண்டு சமஅளவுடைய கல்லாகும். அதன் மையத்தில் சுமார் அரை அடி அளவிற்கு குழியிருக்கும். இக்குழியின் வட்ட வடிவமான சுற்றளவு கீழே செல்லச் செல்ல சற்று குறைந்து அளவாக காணப்படும். மேலும் மரத்தால் ஆன உருளை வடிவமான உலக்கை கொண்டு தானியங்களை குத்தி நெல்லிலுருந்து வரும் உமியை நீக்குவதற்கு பயன்பட்டது.
உலக்கையால் தானியங்களை குத்தும்போது, அவை வெளியே சிதறாமல் பாதுகாப்பதற்கு
கற்கல்லினால் அடிப்பகுதி தட்டை வடிவமாகவும் மேற்பகுதி அகன்றும்
உரைப்பெட்டியாக செய்து உபயோகப்படுத்தினார்கள்.
“விதைத்தினை உரல் வாய்ப் பெய்து” என்று புறநானூற்றில் பாடல் வரிகளாக சங்க தமிழில் சாசனமாக வகுக்கப்பட்டுள்ளது.
திருகல்:
சுற்றக்கூடிய அமைப்பை உள்ள கற்கருவியே “திருகல்”ஆகும். அடிமட்டத்திலும் மேல்மட்டத்திலும் இருவட்ட வடிவக் கற்களால் ஆனது.
கீழ் கல்லின் மீது மேல் பகுதியில் உள்ள கல் அகலாமல் சுற்றும்படி மையத்தில்
முளைக்குச்சியை (பதித்து) வைத்திருப்பார்கள். மேலேயுள்ள கல்லின் நடுவில்
இம்முளைக்குச்சி சென்று சுலபமாகச் சுழலும்படி துளை அமைந்து இருக்கும்.
இந்தத் துளையின் மேல்பகுதியில்
தானியங்கள், பயறுகள் போன்றவற்றைப் உல் செலுத்துவதற்கு சற்று அகலமாக துளையாக
இருக்கும். இக்குச்சியை பிடித்துத்தான் திருகல்லை இழுத்து சுற்ற வேண்டும்.
உளுந்து, பாசிப்பயறு, தட்டாம்பயறு போன்ற பயறு வகைகளை இரண்டாக
உடைத்து, பருப்பு வகையாக மாற்ற பெரிதும் உதவிபுரிய காரணமாக
அமைந்தது.
உயிர்வாழ உணவு மிக முக்கியமானதாகும். ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்டு சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
கிளர் கிழை அரிவை நெய் துழந்து
அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த
நெற்றி சிறுநுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரெ”
என்று நற்றிணை கூறுகிறது.
ஏறிக திற்றி ஏற்றுமின் புழக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலந்
கள்ளை உண்பீராக, சோற்றைச் சமைப்பீராக, திண்ணப்படும் ஊண் கறியை அறுப்பீராக, கறி வகைகளை உலையில் ஏற்றுவீராக என்பதே சங்க கால மக்களின் முக்கிய உணவாக அமைந்தது.
கருங்கல் பழம்பெரும் காலத்தின் வரங்களாக நம் முன்னோர்கள் இயற்கையான முறையில் நோயற்ற வாழ்வு வாழ அம்மி, ஆட்டுக்கல், உரல், சுளவு போன்றவைகளை உற்பத்தி செய்து கற்களில் இருக்கும் தாது மற்றும் புரதசத்து, கனிமங்களின் மூலம் உடல் வலிமை பெறவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கைக்குத்தல், அரைத்தல், சுற்றுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவதால் அனைத்து நரம்புகளின் அசைவின் மூலம் உடல் ஆரோக்கியத் தன்மை பெற்று நீண்டநாள் வாழ உறுதுணையாய் விளங்கியவர்களே.
முடிவுரை:
ஆனால் இன்றைய சமுதாயத்தில் எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் இயற்கை முறையை மறந்து சேர்க்கையின் மூலம் உணவு உட்கொள்ளும் முறை மேற்கொண்டு உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதே ஆகும்.


