மஞ்சள்! பயன்படும் விதமும், மருந்தாக செயல்படும் முறையும்!


மஞ்சள்

மஞ்சள்

பொன்னிறமாம் மேனி புலானாற்ற மும்போகும்
 மன்னு புருட வசியமாம் பின்னியெழும்
 வாந்திபித்த தோடமையம் வாதம் போற் தீ பனமாங்
 கூர்ந்தமஞ்சளின்கிழங்குக்கு
 தலைவலிநீ ரேற்றஞ் சளையா மேகம்
 உலைவுதரும் பீநசத்தி னுமே வலிசுரப்பு
 விஞ்சு கடிவிட மும் வீறுவிர ணங்களும் போம்
 மஞ்சள் கிழங்குக்கு மால் 
மஞ்சட் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமொடு
 விஞ்சுமுக சாட்டியமும் விட்டகலுந் கொஞ்சலுறும்
 ஐய மொழியு மடர்வியர்வுங் காணாது
 வைய மதனில் வழுத்து
 நீர்க்கடுப்பு காசமொடு நீடு விடாசுரமுந்
 தீர்க்க நமைச்சல் வெப்புஞ் சேர்மலமும் பார்க்கு ண்மிக
 அஞ்சியே யேகுமஞ்ச ளாம்வத்தி ரம்புனைந்தால்
 வஞ்சியே நன்றாய் வழுத்து

- அகத்தியர்

முகவுரை:

அகத்தியர் அவர்களின் கூற்றுப்படி மஞ்சளின் மருத்துவத்தையும் உலக உயிரினங்களுக்கு ஆற்றும் மகத்துவத்தையும் இச்செயய்யுளின் வாயிலாக இந்த நல்லுலகிற்கு உணர்த்தி இருக்கிறார்.

மஞ்சள்:

தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் முதல் பழம் பெரும் வாய்ந்த நம் தாய் திருநாடன தமிழ்நாட்டில் மருத்துவத்திற்கு முதன்மையான மூலப்பொருளாக விளங்கியதே மஞ்சள் ஆகும். மஞ்சள்! பயன்படும் விதமும், மருந்தாக செயல்படும் முறையை சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் மஞ்சளின் ஆற்றலை கண்டறிந்து சித்த மருத்துவத்தில் உட்புகுத்தி உலக மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வழிவகுத்தார்கள்.

மஞ்சள் கிழங்கு வகையாக இருந்தாலும், தண்டில்லாத செடி வகையைச் சேர்ந்தது.  வெப்பம் மிகுந்த பிரதேசங்களில் விவசாயம் இன்றளவும் செய்யப்பட்டு வருகிறது.

விரிவுரை:

ஆசிய தேசத்திலே மஞ்சளின் தாய்நாடான இந்தியாவில் தான்  மிகுதியாக விவசாயம் செய்யப்பட்டு, உயிரினங்களுக்கு அருமருந்தாக திகழ்ந்து வருகிறது. அத்துடன் வேதியியல் பொருளான (பாலிபினாலிக்) மஞ்சளில் (Curcumin) அடங்கிருப்பதால், மஞ்சள் நிறத்தைத் தருவதுடன் ஆக்சிஜன் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தாய் விளங்குகிறது.

மஞ்சளின் வகைகள்:

  • முட்டா மஞ்சள்
  • கஸ்தூரி மஞ்சள்
  • விரலி மஞ்சள்
  • கரிமஞ்சள்
  • நாக மஞ்சள்
  • காஞ்சிரத்தின மஞ்சள்
  • குரங்கு மஞ்சள்
  • குடமஞ்சள்
  • காட்டு மஞ்சள்
  • பலா மஞ்சள்
  • மர மஞ்சள்
  • ஆலப்புழை மஞ்சள்

"ஆலப்புழை மஞ்சள்" மிகச் சிறந்த மஞ்சளாக உலக அறிவியல் வல்லுநர்கள் கருதுக்கின்றனர்.

மஞ்சள் பயன்படும் விதம்:

மஞ்சள் சமையலுக்கு தேவையான பொருள்களில்  மிக முக்கியமானது. பச்சை மஞ்சளை சமையலுக்கு அதிகமாக சேர்ப்பதில்லை. சூரிய வெப்பத்தில் மூலம் பக்குவபடுத்தப்பட்ட மஞ்சளை சமையலுக்கும், மருந்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளில் பலவகைகள் இருந்தாலும் அவைகளில் நீளமஞ்சள், குண்டுமஞ்சள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலம் முதல் பெண்கள் குண்டுமஞ்சளை கல்லில் உரசி, முகத்திற்கும், திருமாங்கல்யத்திர்க்கும் பூசுவது இன்றளவும் பழக்கமாக இருந்து வருகிறது.

குச்சி மஞ்சளை மருத்துவ முறையில் அதிக அளவில் பயன்படுத்தும் தன்மை வாய்ந்தாக திகழ்கிறது. மேலும் மஞ்சளுக்கு  ஒருவிதமான நறுமணம் உண்டு. 

நாம் செய்யும் சமையலில் (நஞ்சு) மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள் கலந்திருப்பதால்  விஷக்கிருமிகளை அழிப்பதற்காக மஞ்சளை உணவு வகைகளில் சேர்த்து உண்ணுவதை  நம் முன்னோர்கள் 
பாரம்பரியமாக கடைபிடித்துவந்தனர்.

மருத்துவகுணம் நிறைந்த மஞ்சள்:

  • காட்டு மஞ்சளானது ஆறாத காயங்களை (புண்) ஆற்றும் வல்லமை கொண்டது. 
  • தோல் வியாதிகளுக்கு (சொறிசிரங்கு) மிக சிறந்த மருந்தாகும். 
  • கரி மஞ்சள் நஞ்சு நீக்குவதற்கு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • நீரிழிவு வியாதியான (சர்க்கரை) விரலி மஞ்சளை தூளாக செய்து தினந்தோறும் பாலில் சேர்த்து பருகிவந்தால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க துணைபுரிகிறது.
  • அம்மை நோய் குணமாக மர மஞ்சள் மற்றும் வேப்பிலையுடன் சேர்த்து நன்றாக அரைத்துப் பூசினால் விரைவான தீர்வை உண்டாக்கும். 
  • சருமத்தை அழகுபடுத்த கஸ்தூரி மஞ்சள் உதவுகிறது. 
  • ஒரு மாதம் பசுவின் சிறுநீருடன் (கோமியம் ) மஞ்சள் தூளை தினந்தோறும் குடித்துவந்தால் குட்டம் தணிவதோடு அரிப்பு, சொறி நீங்க வழிவகை செய்கிறது.
  • தேன், சர்க்கரையும் சேர்த்து மஞ்சளுடன் கலந்து உட்கொண்டால் கபத்தினால் வரும் நாவறட்சி குறையும்.
  • வெல்லம், பசுவின் சிறுநீரும் சேர்த்து பருகிவந்தால் முழங்காலுக்குக் கீழ் காலைப் பெருமளவில் வீங்கிப் பருக்கச்செய்யும்  யானைக்கால் நோய் குணப்படுத்த ஏதுவாக அமையும்.
  • சர்ப்ப ( பாம்பு ) விஷத்தை முறியடிக்க மஞ்சள், மர மஞ்சளையும் போதுமான நீரில் கலந்து பருகினால் நஞ்சை குறைக்க வழிவகை செய்யும்.
  • புளியன்  இலை, மஞ்சளையும் சேர்த்து  அரைத்து குளிர்ந்த நீருடன் பருகிவந்தால்  வைசூரி என்னும் சின்னம்மை தட்டம்மை போன்ற நோய்களை தீர்க்க உதவி புரியும்.
  • வாதப் பிணியை தீர்க்க மிகவும் பயனுள்ளதாய் அமைகிறது.
  • நீரிழிவு வியாதிகளை குணப்படுத்த மஞ்சளின் விழுது அல்லது தூளை நெல்லிக் கனிச்சாறு மற்றும் தேனுடன் கலந்து உட்கொண்டால் விரைவான தீர்வு உண்டாகும்.
  • மர மஞ்சள் பட்டையின் விழுதை நன்றாக அரைத்து விரணங்கள் மீது பூசினால் எளிதில் குணமடைய உறுதுணையாக அமையும்.
  • நரம்புச் சிலந்தி, முகநோய்களை தீர்க்க  மரமஞ்சளை  கஷாயமாக காய்ச்சி இளம் சூட்டில் தேன் கலந்து பூசினால் எளிதில் குணமடையும்.
  • தேனுடன் மரமஞ்சள் தூளை கலந்து தினந்தோறும் காலையில் பருகி வந்தால் காமாலை நோய் தனிய வழி செய்யும்.
  • மர மஞ்சள் கஷாயத்துடன் அரிசி கழுவிய நீர் மற்றும் தேனும் கலந்து பருகினால் வெள்ளைபடுதல் நீங்கும்.
  • நீர் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கும், உடலில் பலவகையான தோளில் ஏற்படும் புண்கள் மற்றும் வெடிப்புகளுக்கு மஞ்சளானது சிறந்த தீர்வை அளிக்கிறது.
  • வெட்டுக் காயம் குணமாக வேப்பங்கொழுந்தை சேர்த்து அரைத்த பின்னர் காயமான இடத்தில் தடவி வந்தால் விரைவாக குணமடைய வழி செய்யும்.
  • நெருப்பு, வெந்நீர், கொதிக்கும் எண்ணெய் இவைகளால் ஏற்படும் பாதிப்புக்களை சரிசெய்ய தேங்காயெண்ணை வெந்தயிடத்தில் தடவிய பிறகு மஞ்சள் மற்றும் புளியமரத்தின் பட்டை அரைத்து மிதமாக தூவிவிட்டால் எளிதில் குணமடைய வழி வகை செய்யும்.
  • சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை தீர்க்க மஞ்சள் கஷாயம் நல்ல தீர்வை தரக்கூடியதாகவிளங்குகிறது.
  • இரத்தக் கட்டு, விக்கம், வலியாக மாறி  கருநிறமான தோற்றத்தை குணப்படுத்த மஞ்சள் மிகவும் பயனுள்ளதாய் அமைகிறது.
  • சுண்ணாம்பு மற்றும் மஞ்சள் இவ்விரண்டையும் சேர்த்து அரைத்து தடவினால் சேற்றுப் புண் விரைவில் குணமாகும்.
  • குடலில் ஏற்படும் வியாதிகளை குணபடுத்த போதுமான அளவு  மஞ்சள் மற்றும் உப்புடன் நீர் சேர்த்து பருகிவந்தால் நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினத்தை அழிக்க உதவுகிறது.
  • பல் சம்பந்தமான நோய்கள், நமைச்சல், படை, பொன்னுக்கு வீங்கி இருமல், மூக்கில் சதைவளர்ச்சி, வயிர்வை துர்நாற்றம் போக மிகவும் பயனுள்ளதாய் திகழ்கிறது.
  • மஞ்சளானது புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் புரிகிறது
  • இரத்தத்தை சுத்திகரிக்க இயல்பான ஆற்றலை அளிக்கிறது.
  • நல்லெண்ணெய் கொண்டு விரலி மஞ்சளை விளக்கில் நன்றாக சுட்டு அதில் வரும் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுத்தாள் மூக்கடைப்பு மற்றும் இரைப்பை கட்டுப்படுத்த பெரிதும் உதவி புரிகிறது.

மஞ்சளின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள்:

நிசாத்யதைலம் 
  • பௌத்ரதம் (உள்மூலம்) போன்ற வியாதிகளை குணப்படுத்த நிசாத்யதைலம் கொன்டு எண்ணெய்க் குளியல் செய்தால் சிறந்த தீர்வு பெற உதவும்.
ஹரித்ராதிகஷாயம்
  • உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை நீக்க பெரிதும் உதவுகின்றது.
ஹரித்ராதிதூமவர்த்தி
  • புகை பிடிப்பது போல் (புகையை) உள்ளே இழுத்தால் இழுப்பு, விக்கலுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
தார்வயாதி அஞ்சனம் 
  • கண்களில் மைபோல தடவினால் நீர் சுரத்தல், கண் வீக்கம் முதலியவை குணமடையும்.
தார்வயாதி தைலம் 
  • காது சம்பந்தப்பட்ட வலி, அரிப்பு, இரைச்சல், செவிட்டுத் தன்மை, சீழ் ஒழுகுதல், வீக்கம் போன்ற பிரட்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்துகிறது. 
ஹரியதராதி ஹரிதராகண்டம்
  • நரம்பின்மேல் உண்டான புண்கட்டி, மூலநோய், சீதபித்தம், செரியாமை, கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய், செரிப்பின்மை முதலிய நோய்களைத் தணிக்கும் வலிமை வாய்ந்தது.
முடிவுரை: 

மஞ்சள்! பயன்படும் விதமும், மருந்தாக செயல்படும் முறையை பற்றி பல நூல்களை படித்தும், என் மூதாதைகளிடம் கேட்டும் இப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars