நிலக்கடலை உண்டு.... நீடுழி வாழ விவசாயத்தை பெருக்கி விலை நிலமாக மாற்றுவோம்!

நிலக்கடலை

நிலக்கடலை

"செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்"

முகவுரை:

பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழியையும், புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை விவசாயத்தின் இயல்பை அனைவரும் அறிந்து அவற்றிற்கு ஏற்ப செயல்பட்டு மனித சமூகத்திற்கு நிலக்கடலை உண்டு.... நீடுழி வாழ விவசாயத்தை பெருக்கி விலை நிலமாக மாற்றி இன்றிமையாத வாழ்வை உருவாக்குவதே ஆகும்.

நம் தமிழகத்தில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பாரம்பரிய உணவுப்பொருலான நிலக்கடலை, கடலை, வேர்கடலை, மல்லாக்கொட்டை, மணிலா கொட்டையை உண்பதால் வாழ்நாள் முழுவதும் பிணிகளை அண்டவிடாமல் சுகாதாரமான வாழ்க்கை வாழ வழி வகுத்து மனித சமூகத்தை மேம்படுத்த பெரிதும் உறுதுணையாக இருந்தது. அத்துடன் நிலக்கடலையின் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பல விதமான வியாதிகளை குணப்படுத்தும் தன்மையும் இயற்கையான முறையில் தெக்கிட்டு அதில் கிடைக்கும் கடலை என்னையும் ஆடு மாடுகளுக்கு சத்தான புரதம் நிறைந்த புண்ணாக்கு களையும் வழங்குவதே.

நிலக்கடலை:

வேர்க்கடலையானது  பூமிக்குள் புதைந்து வெளியே இலை மற்றும் பூக்கள் விடும் தாவரம் ஆகும். மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட புரதம், வைட்டமீன்கள் வேர்க்கடலையில் அதிகமாக காணப்படுகிறது.

மக்கள் விருப்பமுடன் உண்ணப்படும் கொட்டைகளைத்தரும் பருப்பு வகை தாவரமே வேர்க்கடலை ஆகும், இதனை கச்சான் என்றும் அழைக்கப்படுதுண்டு. இந்த தாவரம் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. ஆனால் இன்று அனைத்து தேசங்களிலும் உண்ணும் உணவில் மிக முக்கியமான அம்சத்தை கொண்டுள்ளது.

ஏறத்தாழ பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென் ஆற்காட்டில் மத்தியில் இவ்வகையான பயிர் அதிகமாக விளைவிக்கப்பட்டதால் கிழக்கு கடற்கரை வழியாக பிலிப்பைன்ஸ் தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகைதந்ததாக கருதப்படுகிறது.

இன்று உலக தேசங்களிலேய வேர்க்கடலை உற்பத்தியில் முதன்மை நாடாக இந்தியா உருமாறியுள்ளது. 

ஏறத்தாழ பத்து மில்லியன் ஹெக்டேர்களில் நிலக்கடலை விவசாயம் செய்யப்படுகிறது.நிலக்கடலை உண்டு நீடுழி வாழ விவசாயத்தை பெருக்கி விலை நிலமாக மாற்ற இந்தியாவில் பல  மாநிலங்களில் வேர்க்கடலை பயிரிடப்படுவது அதிகமாக காணப்படுகிறது.

நிலக்கடலை

நிலக்கடலை பருவகாலம்:

நிலக்கடலை விதைப்புக்கு சிறந்த பருவகாலம் ஜுன், ஜுலை, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களே ஆகும்.

மண் வகைகள்:

பல வகையான மண் வகைகள் இருந்தாலும், நிலக்கடலை பயிரிடப்படுவதற்கு ஏற்ற மண்ணான வண்டல் மண், செம் மண் நிலங்கள் நிலக்கடலை விவசாயம் செய்வதற்கு தரமானதாகும்.

முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தாக்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அதைவிட பல மடங்கு நிலக்கடலையில்தான் அளவுக்கதிகமான சத்துக்கள், வைட்டமின்கள் புரதங்கள் காணப்படுகினறன என்று பல ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

நிலக்கடலை

நிலக்கடலை சத்துக்களின் வகைகள்:
  • கார்போஹைட்ரேட்
  • நார்சத்து
  • கரையும் கொழுப்பு
  • இரும்புச்சத்து
  • ட்ரிப்டோபான்
  • திரியோனின்
  • ஐசோலூசின்
  • லூசின்
  • லைசின்
  • குலுட்டாமிக்ஆசிட்
  • கிளைசின
  • விட்டமின்
  • கால்சியம் (சுண்ணாம்புச்சத்து)
  • துத்தநாகச்சத்து
  • தண்ணீர்ச்சத்து
  • காப்பர்
  • புரதம்
  • மெக்னீசியம்
  • மேங்கனீஸ்
  • பாஸ்பரஸ்
  • பொட்டாசியம்
  • சோடியம்
கடலை எண்ணெய்:

வேர்க்கடலை பருப்புகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் “கடலை எண்ணெய்”

மரச்செக்கு கடலை எண்ணெய் இதயம் சம்பந்தமான நோய்கள், புற்று நோய், ஞாபக மறதி, நரம்புகள் பாதிப்பு, முதியோர்களுக்கு ஏற்படும் மனசோர்வு பிரச்சனை, மூட்டு வலி, தலைமுடி, சரும நலம், போலிக் அமிலம், ரத்த அழுத்தம், வயிறு பிணிகள், முதலிய வியாதிகளை தீர்க்க மிகவும் பயனுள்ளதாய் அமைகிறது.

மருத்துவ பயன்கள்:
  • போலிக் ஆசிட் நிலக்கடலையில் அதிகம் காணப்படுவதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்க தூண்டுதலாய் அமைகிறது.
  • நிலக்கடலையை தினந்தோறும் போதுமான அளவு உண்டுவந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்பட ஆற்றல் புரிகிறது. மேலும் கர்ப்பப்பைக் கட்டிகளையும், நீர்க்கட்டிகளையும் ஏற்படாமல் தடுக்க உதவி புரிகிறது.
  • தினந்தோறும் நிலக்கடலையை 25 கிராம் அளவிற்கு சாப்பிட்டுவந்தால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க பெரிதும் உதவி புரிகிறது.
  • உடல் தோற்றத்தை சமநிலையில் வைத்திருக்கும் ஆற்றல் நிலக்கடலைக்கு உண்டு.   
  • இதயநோய் வருவதை எளிதில் தடுக்கும் சக்தியை பெற்றுள்ளது. அத்துடன் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துக்கள் நிலக்கடலையில் நிறைந்து காணப்படுவதால் இதய வால்வுகளை சீரான முறையில் செயல்பட உதவுகிறது.
  • இளமையை பேணிப்பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது.
  • நிலக்கடலை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் ஊன்றுகோலாய் திகழ்கிறது.
  • இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு ( உடல் இளைத்து)  மரணம்  நேரக் கூடிய  நோய்      ( புற்றுநோய் ) குணமாக நிலக்கடலை மருந்தாகவும் மனித ஆற்றலுக்கு துணையாகவும் விளங்குகிறது.
  • வேதிப்பொருளான சைட்டோஸ்டீரால் அடிவயிறு மற்றும் சிறுகுடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுத்து, குடற்புண் ஏற்பபடமால் பாதுகாக்க உதவிபுரிகிறது.
  • நிலக்கடலை உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான, மண்டையோட்டினுள் அமைந்திருக்கும் உறுப்பு ( மூளை ) செயல்பாடுகளை அதிகரிக்கும் ஆற்றல் உடையது.
  • உடல் குளிர்ச்சி, ஆஸ்துமா, நெஞ்சு சளி போன்ற வியாதிகள்,  நீக்கும் வல்லமை பெற்றது.
  • நினனைவாற்றலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
  • வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான அளவு தினந்தோறும் உண்டுவந்தால்  மூளை மற்றும் உடல் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க துணைபுரிகிறது.
  • மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோயான (ஆஸ்துமா) வியாதிகளை உருவாகாமல் தடுக்க உதவுகிறது.
  • வயதாகி உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் இழந்த கட்டத்தில் (முதுமை) தீவிர ஞாபக மறதியை ஏற்படாமல் பாதுகாக்க உறுதுணையாக செயல்படுகிறது.

உலகில் அணைத்து ஜீவராசிகளும் இயற்க்கை தாவரங்களில் இருந்தே தங்களின் அன்றாட உணவை பெற்று இல்வாழ்க்கையை வழிநடத்துகின்றன.

அதிலும் மனிதன் தன் வாழ்வையும், வளத்தையும் பெருக்க விவசாயம் செய்து  பயிர்கள், மரங்கள், செடிகளில் இருந்தே தனது பெரும்பாலான உணவு தேவைகளை சேகரித்து இயல்பான வாழ்க்கை வழிமுறைகளையும் இயற்கை உணவுகளையும் இச்சமுதாயத்தில் பிரதிபலிக்க எண்ணற்ற தொழில்நுட்பங்களை  பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க உலக மக்களுக்கு இன்றளவும் போராடி வருகிறார்கள்.

முடிவுரை: 

நிலக்கடலை உண்டு நீடுழி வாழ விவசாயத்தை பெருக்கி விலை நிலமாக மாற்ற இயற்கையால் உருவான தாவரங்களின் தன்மையும் அதன் சக்தியையும் இயல்பான மருத்துவ குணங்களையும் இன்றைய சமூகத்தினர் பெரிதாக மதிக்கப்படுவதில்லை அத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் செயற்கை மூலம் பேணிக்காத்து உடல் வலிமையையும் நீண்ட ஆயுளையும் குறைத்துக் கொள்கிறார்கள். இயற்கையுடன் ஒன்றி மரம், செடி கொடிகளுடன் இணைந்து இயற்கை மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்கள், இயற்கை மருந்துகளையும் நாம் இன்பமாய் பெற்று வாழ வழி வகுப்போம்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars