வாழ்வை வளம் கொழிக்கும் கேழ்வரகு!


கேழ்வரகு


"அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு"

முகவுரை:

சங்ககாலத்து மக்களின் நல்வாழ்வை ஆராய்ந்தோர் வியக்கும் வண்ணம் உணவுப் பொருட்களின்  வளர்ச்சியில் பாரம்பரியத்தின் பங்கு இன்றியமையாததாக இருந்துள்ளது. அக்கால மக்களின்  உணவு பழக்க வழக்கங்கள் அறிவியல் சார்ந்தவையாகும்.

கேழ்வரகு

பழங்காலத்தில் காட்டுபகுதியில் இருந்து பயிர் விளைவிக்கக்கூடியதாகவும்,  இந்தியாவிற்கு ஆரியர்கள் வரும் முன்னரே கேழ்வரகு தாவரத்தை  கண்டறிந்து வாழ்வை வளம் கொழிக்கும் கேழ்வரகை விவசாயத்தை மேற்கொண்டனர். கேழ்வரகு முதன் முதலில் இந்தியாவில் தோற்றம் கண்டு, பின்னர் மற்ற தேசங்களுக்கு சென்றடைந்தாகவும் முன்மொழி ஆற்றுகின்றனர்.

இந்தியாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி  கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு விவசாயத்தை செய்யும் முதன்மை மாநிலங்களாக விளங்குகிறது.

விரிவுரை:

தமிழ் எழுத்துக்களிலேய "" என்பது மிகவும் நேர்த்தியான ஒன்று. அதிலும் தாழ்வு, காழ்வு, கீழ் என்ற வாக்கியமானது கீழ் நோக்கி வளருதல் அல்லது வளைந்து கதிர் விடும் பயிர் மணிகளாக  கேழ்வரகு என்று பெயர் உருமாறியிருக்கலாம் என்று  நம் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக சிந்திக்கும் ஆற்றல் உடைய மனிதன் மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் மிக  முக்கிய உணவுகளில்  கேழ்வரகு முதன்மையான இடத்தை பெற்று இயற்க்கையான ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியதாகவும் ஊட்டச்சத்து மிகுந்தவையாகவும் காணப்படுகின்றன. வாழ்வை வளம் கொழிக்கும் கேழ்வரகு இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பீகார் சில முக்கயமான மாவட்டங்களில்  கேழ்வரகு தானிய பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

சத்துகளின் வகைகள்

கார்போஹைட்ரேட்டுகள், கலோரி,புரதம், கால்சியம்,  இரும்பு, பொட்டாசியம், நியாசின், ஃபோலிக் அமிலம், கொழுப்பு, சோடியம், நார்ச்சத்து முதலியவை மிகுதியாக கேழ்வரகில் காணப்படுகின்றது.

பழந்தமிழர்கள் ஆரோக்கியமாகவும் உடல் வலிமையாகவும் முதுமையிலும் இளமையாக வாழ்ந்ததற்கு உணவே மருந்து மிக முக்கியமக திகழ்ந்தது. இதற்கு  சங்க இலக்கியங்கங்கள் கூறும் பாடல் வரிகளே இதனை மெய்ப்பித்து காட்டியுள்ளது. நம் பழம்பெருமை வாய்ந்த முன்னோர்களின் உணவு பழக்க வழக்கங்களை  நாம் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வந்து இனிவரும் தலைமுறையினருக்கு படைசாற்றுவோம்.

கேழ்வரகின் பயன்கள் 

  • எலும்புக்கு பலம் சேர்க்கும் கால்சியம் சத்து கேழ்வரகில் மிகுதியாக நிறைந்துள்ளதால்முதியோர்களின் எலும்பு தேய்மானம் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் (மெனோபாஸ்) குறைகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.
  • உடல் பருமனை குறைக்க கேழ்வரகில் (ட்ரிப்டோபான்) அமினோ அமிலம் பசியை கட்டுப்படுத்தி குறைவான உணவை உள்செலுத்தி உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகளை  நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. 
  • நீரிழிவு நோயாளிகளுக்கு (சர்க்கரை) கேழ்வரககு  கூழ், களி, மற்றும் ரொட்டியாகவோ உண்டுவந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் நீரிழிவு வியாதிகளை குணப்படுத்த சிறந்த பயனளிக்கிறது.
  • மனித உடலின் உள்ள லெசித்தின், மெத்தியோனின், மற்றும் அமினோ அமிலங்களில் காணப்படும்  கொழுப்பைக் கரைக்கும் தன்மைகொண்டவை.
  • கேழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து மிகுந்து காணப்படுவதால், உடலுக்கு ஆற்றலை தருவதோடு ரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்க மிகச்சிறந்த தானிய மருந்தாக செயல்படுகிறது.
  • உடலுக்கு குளிர்ச்சியை தந்து உடல் உஷ்ணத்தை தீர்க்கும் வலிமை வாய்ந்தது.
  • கேழ்வரகில் தாதுச்சத்துகள் மிகுதியாக காணப்படுவதால் மனஅழுத்தத்தையும், உடல் கலைப்பையையும்  நீங்க உதவுகிறது.
  • உடலுக்கு வலிமை, ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பாக செயல்பட உறுதுணையாக அமைகிறது.
  • உணவு எளிதில் செரித்தல் தன்மையை ஏற்படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்க வழிவகுக்கிறது.
  • உடலின் இயற்கை செயல்பாட்டு பிரச்னைகளான தைராய்டு வியாதிகளுக்கு மிகவும் உகந்த உணவாக கேழ்வரகு பயன்படுகிறது.
  • ஆரோக்கியத்திற்கு சிறந்த தானியமான கேழ்வரகு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு தேவையான சத்துகளைத் தந்து தாய்ப்பால் அதிகரிக்க பெரிதும் உதவிபுரிகிறது.
  • குழந்தைபேறு மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்மாதவிலக்கு காலங்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் உணவுச் சத்து குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது.  
  • உடலில் செயலற்ற அல்லது இழப்படைந்த திசுக்களை சரி செய்து, நைட்ரஜன் அளவை நிலையானதாக  இருக்க உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தின் காரணமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம், வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற வியாதிகளை குணப்படுத்த சிறந்த மருந்தாக திகழ்கிறது.
  • ‘B’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல் சத்துகள் கேழ்வரகில் மிகுதியாய் இருப்பதால், உணவை எளிதில் செரிமானம் செய்ய  ஒரு மிகச்சிறந்த தானிய உணவாக திகழ்கிறது.
  • முளையில் ஏற்படும்  கட்டிகளை எளிதில் குணப்படுத்தும் தன்மை  கேழ்வரகில் கிடைக்கும் ஆற்றல் பெற்றது.

முடிவுரை: 

நாம் அனைவரும் இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, கூழ், காரா வகைகள், ரொட்டி, இனிப்பு உருண்டை என பல உணவு வகைகளை  தயார்செய்து வாழ்வை வளம் கொழிக்கும் கேழ்வரகின் மூலம்  சுகாதாரமான வாழ்க்கை வாழ நம் முன்னோர்களின் அறிவுரையை கேட்டு இயற்க்கையோடு ஒன்றி வாழ்வோம்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars