கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்
பசலை நிலவின் பனிபடு விடியல்,
பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ
உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது எனச்
சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத்
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்த மன்ன
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.
முகவுரை:
அவ்வையார் பாடிய பாடலில் சங்ககால மன்னனான அதியமான்
நெடுமான் தன் வளத்தை பெருக்க மூங்கில் போன்று நீண்டு வளர்ந்து இனிய சாறு
நிறைந்ததுமான ஒரு வகைத் தாவரமான கரும்புபைத் தன் அதி நாட்டு
குடிமக்களுக்காக விவசாயம் மேற்கொண்டு நாட்டை தேடி வருவோர்க்கும்
அமிழ்தென படைததாக இச்செய்யுள் விளக்குகிறது.
கரும்பு:
- தண்டுலிருந்து வெளியே வரும் வேர்கள், கனுவேர்கள் மற்றும் அடிப்பகுதியில் பல நார்களை போன்று இருக்கும் அடிவேர்களின் தொகுப்பு ஆகும்.
- தண்டு வேர்களானது துாரின் கீழ்க்கணுவின் அடிப்பகுதியிலிருந்து தோற்ற மளித்து நிலையான தன்மையை பெற்று வளர வழிவகுக்கிறது.
தண்டு பகுதி:
- இயற்கையாகவே கரும்பானது இனப்பெருக்க முறையை அதன் தண்டின் மூலமே இனபெருக்கம் செய்துகொண்டு இனவிருத்தியை மேன்மை படுத்துகிறது.
- ஒரு துண்டுப் பகுதியும் மற்றொரு துண்டுப் பகுதியும் இணைந்தது போல் காணப்படும் வரையுள்ள இடம் தான் (கணு ) ஆகும்.
- கணுவில் பக்க மொட்டுக்கள், அடிப்பகுதி வேர் மதலிவை ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்.
- மெழுகு போன்ற அமைப்பை பெற்று ஒவ்வொரு வட்டவடிவமான கணுவின் மேற்புறம் அமைந்திருக்கும்.
தளிர்:
- கரும்பின் மலர்க்காம்பு ‘மகரந்தக் குஞ்சம்’ அடர்த்தி குறைவாக அமைந்த தளிர் ஆகும்.
- மஞ்சரியானது பட்டுபோன்ற நீண்ட முடிகளை கொண்டு காணப்படும்.
- ‘ரெசிமோஸ் என்பது கதிர்க்கிளையினால் அமைந்த அமைப்பு ஆகும்.
புனை பெயர்கள்:
- கழை, இக்கு, கன்னல், வேழம், தும்பு, அங்காரிகை, வெகுரசம், வெண்டு, ஈன், ஆலை, இக்கலம் முதலியன.
ஊட்டச்சத்துக்கள்:
- கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன.
- புரதம், நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, இயற்கை சர்க்கரைகளும், மேலும் விட்டமின் சி, பி1(தயாமின்), பி3(நியாசின்) முதலியவை உள்ளடங்கியுள்ளன.
மருத்துவ பண்புகள்:
- அளவுக்கதிகமான சூரிய வெப்பத்தால் வியர்வை உருவாகி நம்முடைய இயல்பான சக்தியை இழப்பதுடன் நீர் இழப்பினை சரி செய்ய உடலுக்கு உடனடி ஆற்றலினை வழங்க உதவுகிறது.
- கிளைகோலிக் அமிலம் கரும்பில் மிகுதியாக காணப்படுவதால், தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி தோலில் ஆக்ஸினேற்ற நிகழ்வுகளினால் பாதிப்பு ஏற்படாமலும் சருமசுருக்கம், காயங்கள், வடுக்கள் போன்றவற்றை எளிதில் குணமடைய செய்கிறது.
- எலும்பு தேய்மானம் உண்டாகமல் எலும்புகளுக்கு ஆற்றல் சக்தியயை அதிகரிக்க உதவுகின்றன.
- குடல் வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படாமலும், உடலில் செரிமான கோளாறு எளிதில் தீர்க்கும் வண்ணம் செயல்படுகிறது.
- கரும்பில் தேவையற்ற கொழுப்பை நீக்கி மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் பாதுகாக்க சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்க உதவுகிறது.
- மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வை நீக்க உதவிபுரிகிறது.
- சிறுநீர்ப்பாதையில் சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் இருக்க பெரிதும் உறுதுணையாக அமைகிறது.
- பித்தம் அதிகரிப்பதால் கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் (மஞ்சள்காமாலை ) வியாதிகளை குணப்படுத்த சிறந்த தீர்வாகும்.
- வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பான கல்லீரலை நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
- பற்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் வலிமையை ஊக்குவிக்க உதவுகிறது.
- குழந்தைகளுக்கு ஏற்படும் ஃப்ரெயில் காய்ச்சலால் புரச்சத்து இழப்பு, நோயின் காரணமாகத் திடீரென்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெட்டிவெட்டி இழுக்கும் வலியுடன் கூடிய விறைப்புகள் தடுக்கிறது.
குறிப்பு:
- கரும்பை உண்ணவுடன் தண்ணீரை உடனடியாக பருகக்கூடாது காரத்தன்மையான தாதுஉப்புகள் கரும்பில் மிகுதியாய் காணப்படுவதால் கரும்பினை உண்ணும்போது வேதிவினையால் வாயில் எச்சிலை ஏற்படுத்துகிறது.
- தண்ணீரை பருகும்போது அதிகவெப்பத்தால் வாயில் புண்கள் ஏற்படும் தன்மையை உண்டாக்குகிறது. அதனால் கரும்பினைத் உண்ணவுடன் அரைமணி நேரம் கழித்து தண்ணீர் பருக வேண்டும்.
சங்க காலம் முதல் நம் பாரம்பரியமான இயற்கை முறையை கையாண்டு உணவு உற்பத்தியிலும் சுற்றுப்புற சூழலையும் பேணிக்காத்த நம் முன்னோர்களின் பாதைகளை தேர்ந்தெடுத்து நாமும் அவ்வழியை மேற்கொண்டு எதிர்கால சந்ததியினரை நலமுடன் வாழ இயற்கையை பாதுகாப்போம்.
