ஆயுளை நீடித்து... ஆயர்வேதமாய் திகழும் மாமரம்!


மாமரம்

மாமரம்!

 "வேத சத்திய மாக விளம்புவோந்தா
விர்த்திருக்குந் தம்பன மாங்கனி
போதம் மர்த்தனம் புன்காயி னால்வடு
வாத பித்த கபங்களை மாற்றுமே"

முகவுரை:

வேதத்தின் மீது ஆணையிட்டுக் கூறும் அகத்தியர் பாடல் வரிகளில் முக்கனி  பழத்தில் முதன்மையான மாம்பழத்தால் தாது விருத்தி உருவாகும். தம்பனம் நேரம் கூடும், உடலில் வன்மையும் ஏற்படுத்தி உறவில் நாட்டத்தையும் மேம்படுத்தும். வாத பித்த கபச்சீற்றம் உண்டாகும் என்று இப்பாடல்வரிகள் கூறுகிறது.

"தாதுநட்டம் வாதந் தனிக்கிரந்தி யாம்பசி
போங்காது முட்டப் பக்குவிடுங்காயமதில்
ஓதுகின்ற பாங்காறாப் புண்வளரும்  பற்கூசுஞ்
சொற்குளறும் மாங்காய்உண் பாரை மறு"

மாங்காய் அதிகமாக உண்ணுவதால்  ஒருவருடைய உடலின் அல்லது நெருப்பு, சீதோஷ்ணம் போன்றவற்றின்) வெப்பத்தை அதிகப்படுத்தி தாது நட்டத்தை உருவாக்கும். காற்றின் மூலம்  ஏற்படும்தோல் புண்ணை உருவாக்கும். உண்டு பசியைத் தணித்து விடும். கொப்புளங்கள் ஏற்படுத்தி ஆறாத புண்களைத் தோற்றுவிக்கும்.புளிப்பு மற்றும் கடினமான தன்மையாக  இருப்பதால் அதைக் கடித்து உண்ணும் பற்களின் மேற்புறரத்தில்  பூச்சு மூலம் பற்கூச்சம் ஏற்படுத்துமென ஆயுள் நீடித்து ஆயர்வேதமாய் திகழும் மாமரமகா  அகத்தியர் குணபாடம் மூலம் தெரிகிறது.

மாமரம்:

முக்கனியின் முதன்மையான பழமான மாமரத்தின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. பல மாநிலங்களில் மாமரங்கள் இருந்தாலும் தமிழ்நாடு முதன்மை மாவட்டமாக திகழ்கிறது.

30 - 50 மீ உயரம் வளரக்கூடிய சூரிய வெப்பம் மிகுந்த நாடுகளில், வெப்ப காலங்களில் பலன் தரும் "மா" மரமாகும். இலைகள் பச்சை பசுமையாகவும் கொழுந்து கருஞ்சிவப்பு நிறத்துடன் மேலும் பூக்களானது  கிளை நுனியில் கொத்து கொத்தாக உருவாகும் திறனை பெற்றது.

விரிவுரை:

புராதன மரமாகிய மாமரம் இலை, கொழுந்து, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின், கொட்டை அனைத்து பகுதியும் இயற்கை மருந்தாகவும் உணவாகவும் மனித சமூகத்திற்கு ஆற்றல் புரிகிறது.

இந்தியாவின் தேசிய பழமாக மாம்பழம்  குறிப்பிடப்படுகிறதுபழம்பெருமை வாய்ந்த வேதங்கள்புராணங்களில் மாம்பழம் பற்றி தகவல்களை பாடல்களின் மூலம் சாசனமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பல குணங்களை கொண்ட மாமரங்கள் ஆயர்வேதமாய் உலக மக்களுக்கு  படைசாற்றுகின்றனமாவிலை தோரணங்கள் மற்றும் திருவிழாக்கலங்களில்  உபயோகப்படுத்துவது காந்த சக்தியை ஈர்ப்பதற்கு மட்டுமல்லாமல்ஆரோக்கியமான அதிர்வலைகளை மாவிலை தோரணம் சுற்றுப்புறம் முழுவதும் பரவ செய்யுது சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பயன்படுகிறது.

"மாதா ஊட்டாத உணவை மாங்காய் ஊட்டும்"என்று பழமொழி கூறுவார்கள்.

புனை பெயர்கள்:

பிக்கவல்லபா, மதுதூத்,  அதிசுரபா,  ஆம்ரா, ஆம், ரசால், சஹாகார், மாகண்டா  என்று மாமரத்தை வடமொழிப் பெயர்களாக கருதப்படுகிறது.

மாமரத்தின் தமிழ் பெயர்களான கொக்கு, சூதம், குதிரை,மாழை, மாந்தி என்றழைக்கப்படுகிறது.

மாமரம்!

மாம்பழ வகைகள்:

  • செந்தூரா மாம்பழம்  
  • கறுத்த கொழும்பான் மாம்பழம்  
  • வெள்ளைக் கொழும்பான் மாம்பழம்  
  • பங்கனப்பள்ளி மாம்பழம்   
  • மல்கோவா மாம்பழம்   
  • ருமானி மாம்பழம்  
  • திருகுணி மாம்பழம்  
  • விலாட்டு மாம்பழம்  
  • அம்பலவி மாம்பழம்  
  • செம்பாட்டான் மாம்பழம்  
  • சேலம் மாம்பழம்  
  • பாண்டி மாம்பழம்  
  • களைகட்டி மாம்பழம்  
  • பச்சதின்னி மாம்பழம்  
  • கொடி மா மாம்பழம்  
  • மத்தள காய்ச்சி மாம்பழம்  
  • நடுசாலை மாம்பழம்  
  • சிந்து மாம்பழம்  
  • தேமா மாம்பழம்   
  • புளிமா மாம்பழம்   
  • கெத்தமார் மாம்பழம்  
  • சீமெண்ணெய் புட்டிக்காய் மாம்பழம்

ஊட்டச்சத்துக்கள்:

எரிசக்தி,கலோரி, மாவுச்சத்து, சர்க்கரை, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ஏ,பீட்டா கெரோட்டின், தயாமின்(பி1), ரிபோஃப்ளேவின், நியாசின்(பி3), பேண்டோதெனிக் அமிலம்(பி5), வைட்டமின் ‘பி6’, ஐட்டமின் போலேட்(பி9), கோலின், வைட்டமின் சி , வைட்டமின் ‘ஈ’ , வைட்டமின் ‘கே’, தாது உலோகங்கள்,  சுண்ணாம்பு (கால்சியம்), இரும்பு, மெக்னீசியம், மேங்கனீசு, பாஸ்பரஸ் , பொட்டாசியம், துத்தநாகம் போன்ற இயற்கையான  ஊட்டச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றது.

மாமரத்தின் பயன்கள்:

  • முதிர்ந்த மாங்காய் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தை உறைய வைக்கும் திறனை  கொண்டதால், இனிப்பான தோலுடன் இருக்கும் பழுத்த பழம் உடலுக்கு இயற்கையானஆற்றலை தருகிறது.
  • மேலும் கோடை காலத்தில் அளவோடு உண்ணுவதால் குளிர்ச்சியைத்  தரக்கூடியதாகவும் திகழ்கிறது.
  • மாமர இலைகள், நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய் வியாதிகளை வற்றச்செய்யும் வலிமை பெற்றது.
  • தீக்காயங்கள், தழும்புடைய  காயங்களுக்கு இலையை அரைத்து,  பூசுவதினால் விரைவில் குணமடையும்  தன்மை உடையது.
  • வீக்கத்தைக் கரைக்கவும், பூஞ்சைக்காளான்களை உருவாகாமல் தடுக்கவும், வயிற்றுப்புழுக்களை வெளியேற பயன்படுகிறது.
  • வயிற்று கடுப்பு, குடல் சம்பந்தமான வியாதிகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.
  • மாமரத்தின் பூக்களை சேகரித்து இளம் சூட்டில் வறுத்து வைத்துக்கொண்டு தினந்தோறும்  காலை, மாலை  சிறிதளவு அளவு உண்டுவர வியாதிகளுக்கு தீர்வை அளிக்கிறது.

  • இரத்தப்போக்கு, இரத்தக்கசிவு ஆகியனவற்றைக் கட்டுப்படுத்த  மாமரப் பட்டை பெரிதும் உதவுகிறது.  

  • துளிர் இலைகள் சிறிதளவு நாவல் மரத்துளிர் இலைகள் சிறிதளவு சேர்த்து நீரிவிட்டுக் மிதமான சூட்டினால் ஆவிப்புடைய செய்த பின்னர் சிறிதளவு தேன் சேர்த்து வடித்த நீருடன் பருகி வந்தால் வாய் வழியாக வெளியேறும் ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் வாந்தியை நிறுத்தும்.
  • மண்ணீரல் வீக்கம் குணமாக மாம்பழச்சாற்றோடு சிறிது தேன் கலந்து உண்டுவந்தால் வியாதிகள் குணமாகும்.
  • நீரிழிவு வியாதிகளுக்கு மாவிலைகளை சூரிய வெப்பம் இல்லாத நிழல் பகுதியில்  உலர்த்தி பொடியாக வைத்துக்கொண்டு தினந்தோறும் சிறிதளவு உண்டுவந்தால் தீரும்.
  • சளி, சீழ் வெளியாதல், வெள்ளைப்போக்கு, கருப்பை அழற்சி போன்ற வியாதிகளுக்கு  பச்சை மாம்பட்டையை இடித்து  வரை உள்ளுக்கு விழுங்கினாள் குணமாகும்.
  • ஈறு,. பல் உறுதி பெற மாம்பருப்பு தூள் மிகுந்த பயனளிக்கிறது.

முடிவுரை: 

ஆயுளை நீடித்து... ஆயர்வேதமாய் திகழும் மாமரம்! மனித குலத்திற்கும் சுற்றுப்பபுற பாதுகாப்பிற்கும் உகந்ததாய் திகழ்கிறது.

    Previous Post
    Next Post

    Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars