வினையை தீர்க்கும் வேம்பு மரம்! சுற்றுப்புறத்தை காக்கும் தூய மரம்...


வேம்பு மரம்


"காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்"
-அகத்தியர்

முகவுரை:

சங்க இலக்கியங்கள் கூறப்படும் கூற்றுகளில் உடலில் ஏற்படும் தீராத முற்றிய நோய்களை தீர்க்கவும்,வினையை தீர்க்கும் வேம்பு மரம்! சுற்றுப்புறத்தை காக்கும் தூய மரமாகவும், அகச்சான்று உள்ளத்திற்கு ஏற்படும் பாதிப்பை அறியவும் மூலிகையாக வேம்பு உதவி புரிகிறது.

"வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்"

வேம்பு, கடுகும் முதலில் கசப்பு தன்மையை இருந்தாலும் பின்னர் நலம் பயக்கும் என்ற அறிவுரையே வாயுறை வாழ்த்தில் வினையை தீர்க்கும் வேம்பு மரம், சுற்றுப்புறத்தை காக்கும் தூய மரத்தினை  தொல்காப்பிய செய்யுளில் கூறப்பட்டுள்ளது.

வேம்பு வளரியல்பு:

பாண்டிய அரசனுக்கு குடிப்பூவாக வழங்கி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தை நக்கீரர் சங்ககாலத்தில் உணர்த்தி நோய் நொடி தன்மையை இல்லாதவாறு உருவாக்கினார்.

வேம்பு மூலிகை மரம்  என்ற சிறப்பு பெயரும் பெற்றது. மூலிகையின்  முதன்மையான மரமாக பெரும் ஆற்றல் படைத்ததாகவிளங்குகிறது.

வேம்பின் தாயகம் இந்தியா என்று  கூறுவதில் ஐயமில்லை, ஆனால்  இன்று உலகம் முழுதும் பரவி இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தியது.

ஆலமரம், அரசமரத்தைப் போலவும் பல ஆண்டுகள் வளரக்கூடியது. 30 அடிமுதல் 40 அடிக்கு மேல் உயரம் வளரும் தன்மை கொண்டது . வேம்பு மரம் அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய இயற்கை ஆற்றலை பெற்றுள்ளது. குளிர் பிரதேசங்களில் வளரும் தன்மையற்றது. வேம்பு இலைகள்  உண்ணும்போது உணரப்படும்  கசப்புத்தன்மை உடையது வெண்மைநிறத்துடன் சிறு பூக்கள் கொண்டதாகவும்,  சதைபற்றுக்களையும், எண்ணெய் சத்துக்கள் நிறைந்துள்ள விதைகளையும் பெற்றுள்ள பெரிய மரமாகவும் இனப்பெருக்கத்தை விதைகள் மூலம் உற்பத்தி செய்கிறது.

வேம்பு வகைகள்:

கறிவேம்பு, நீர்வேம்பு, கருவேம்பு, சிவனார் வேம்பு,மதகிரி வேம்பு, மலை வேம்பு, சர்க்கரை வேம்பு, சிறு வேம்பு, நிலவேம்பு, துருக்க வேம்பு, வடிவேம்பு, சந்தன வேம்பு, பெரு வேம்பு என்று பல்வேறு இனங்களாக இயற்க்கை குணங்களாய் இப்புவியில் மதுரமாய் விளங்குகிறது.

வேம்பு தமிழ் பெயர்கள்: 

அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், வாதாளி என்றும் அழைப்பதுண்டு.

"தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்"
மருத்துவப்பயன்கள்:

  • உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேறும் உப்புநீர் உடலுறுப்பு வீங்குதல், கட்டிகளை  கரையச்செய்தல், உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு, இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் கண்களும் தோலும் மஞ்சள் நிறமடைந்து காணப்படும் ஒரு நோய், சுரம், ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகையான பித்தம் என்னும் பிணிக்கூறு, கோழை, சிலேட்டுமம், சளி, மார்ச்சளி, நீரிழிவு, தோல் சார்ந்த வியாதிகளுக்கு பயன் படுகிறது.
  • வேப்பஇளந்தளிர் மற்றும் அதிமதுரதூளையும் சேர்த்து நீர் விட்டு மென்மையாக அரைத்துப் சிறு மாத்திரை செய்து சூரிய வெப்பம் இல்லாமல் காயவைத்து தினந்தோறும் உண்ணுவந்தால் சின்னம்மை தட்டம்மை போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும்.
  • வேம்ப மரத்து  இலையை மென்மையாக அரைத்து  இரத்தக் கசிவு உள்ள புண் இடத்தில் தடவிவந்தால் உடனே தீர்விற்கு வழிவகை செய்யும்.
  • வேப்பஇளந்தளிர் சிறிதளவு, கரும் பழுப்பு நிற ஓடும், துவர்ப்புச் சுவையும் கொண்ட (மருந்தாகப் பயன்படுத்தும்) சிறிய காய் (கடுக்காய்) (சித்த வைத்தியத்தில் பயன்படும்) தடித்த சிறு கிளைகளையும் கணுக்களுடன் கூடிய செவ்வக வடிவத் தண்டையும் உடைய ஒரு வகைக் கொடி பிரண்டை பிழிந்து எடுக்கப்படும் திரவத்தை சேர்த்தரைத்து சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து கொடுத்தால் வயிற்றில் இருக்கும் குடல்  பூச்சிகள் வெளியாகும்.
  • வேம்பு இலையுடன் சிறிது மஞ்சளை சேர்த்து மென்மையாக அரைத்து பொன்னுக்கு வீங்கி, உடலில் ஏற்படுகிற வேதியியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கும்  வெடிப்பு, உடலில் தோன்றும் கெட்டியான புடைப்பு (கட்டி ) முகத்தில் உண்டாகும் சிறு கட்டிவகை பருவு, சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாக வழிவகை செய்கிறது. 
  • மண் பானையில் சிறிதளவு உலர்ந்த வேம்பு இளந்தளிர் நீர் விட்டு மூடி வைத்தபிறகு திரவத்தை மட்டும் செல்ல விடுவதற்கு ஏற்ற வகையில் வலை அமைத்துச் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு  நீரை மட்டும்உண்டுவந்தால் உணவுவேட்கை, உடல் (கட்டுப்பாடு இல்லாமல் உடல் உறுப்புகள் ஆடுகிற வகையில்) நரம்பில் ஏற்படும் உறுதிக் குலைவு, நீங்கும். வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு கல்லீரலை நன்றாக  இயக்க உந்துதவுகிறது.
  • வேப்ப எண்ணெய்யை  உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் ஒரு நோய்வகையான சன்னி, புறங்கழுத்து, உடல் உறுப்புகளை முடமாக்கும் வாத நோய்கள் தீரும்.
  • வேப்ப இலையை மென்மையாக அரைத்து முகத்தில் தோன்றும் சினைப்பு முகப்பரு உள்ள இடத்தில்தடவினால் விரைவகை மறைந்து விடும்.
  • வேப்பம்கொட்டையில் இருக்கும் பருப்பை தனியாக எடுத்து மென்மையாக அரைத்து புண்கள் மீது தடவி வந்தால் ஆறாத புண்ணும் ஆற்றும் தன்மை கொண்டது, 
  • தொழுநோய்களை குணப்படுத்தும் குள மருந்தாக விளங்குகிறது.
  • வேப்பிலை கசாயம் உடலில், உணவில் வாழும் நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினங்களைஅகற்றும் தன்மை கொண்டதாகும்.
  • வேப்பங்காய் ஆசனத் துவாரத்திலிருந்து இரத்தம் வடியும் நோய், சிறுநீரகவியாதிகளை போக்கும் வலிமை கொண்டது.

முடிவுரை: 

நிலவளமும் நீர்வளமும் மட்டுமல்லாமல் பொருள் வளமும் அருள் வளமும் நிறைந்த இந்தியாவில் தமிழிலக்கிய இலக்கணத்திலும் புகழ்பெற்று தமிழ் மருத்துவத்தின் முதன்மையான வினையை தீர்க்கும் வேம்பு மரம் சுற்றுப்புறத்தைக் காக்கும் தூயமரமாக உலகத்திற்கு படைசாற்றுகின்றது.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars