இயற்கை வரமே! என்றும் கொய்யா மரமே!


கொய்யாமரம்

கொய்யா மரம்

"உண்டிமுதற்றே உணவின்பிண்டம்
 உணவெனப்படுவது நிலத்தொடு நீரே"
 - புறநானூறு

முகவுரை:

நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது உடலில் உள்ளிருக்கும் உயிரை பேணிக்காக்கும் அருமருந்தாகும். ஒவ்வொருவரும் காயத்திற்கு பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உணவை எடுத்துக்கொள்வதினால் பிணிகள் உற்பத்தியாகின்றன என்ற தத்துவத்தை இயற்கை வரமே! என்றும் கொய்யா மரமாக சங்க இலக்கிய புறநானூறு பாடல்களின் மூலம் தெளிவுபெறுகிறது.

இயற்கை உணவுகளை அதிகமாக உண்ணும் அனைத்து ஜீவராசிகளும் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

கொய்யாமரம்:

மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா தேசங்களில் தாயகமாக கொண்ட சிறு மரவகையை சேர்ந்தவையாகும்.

இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள காடுகளில் வளர்வதுண்டு. ஏறக்குறைய முப்பது அடி உயரம் வளரும் தன்மை கொண்டதாகவும், வெப்பமான பிரதேசங்கள், களிமண் மற்றும் மணல் போன்ற தட்பவெப்பம் நிறைந்த பூமியில் விருத்தியாகும்.

பூக்கள் பூத்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து (கொத்து கொத்தாக )காய்கள் விடக்கூடியது. காயானது பசுமை நிறமாகவும், பழமானது மஞ்சள் கலந்த செந்நிறமாக இருக்கும். மேலும் பழத்தினுள் வெண்ணிறமான சதைப்பற்றுடன் விதைகள் நிறைந்திருக்கும். அதிலும் ஒரு சில வகை கொய்யா பழத்தில் சதைப்பற்று இளம் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.

இனிய மணத்தை கொண்டிருக்கும் கொய்யாப்பழத்தில் சில வகைகள் உள்ளன. கீழ்ப்பகுதி பெருத்தும் அதன் நுனியானது கூம்பு வடிவிலும் மற்றொரு வகை கோள அல்லது குண்டு வடிவத்தில் இருக்கும்.

எதிர் எதிர் கோணத்தில் இலைகளையும் வெள்ளை நிறங்களையுடைய மலர்களையும், உராய்வு இல்லாமல் வழுக்குவதாக அமையும் தன்மையான பட்டையையும் உடைய மரமாகும்.

நன்மை தரும் பாகங்கள்:

  • இலை
  • பூ
  • காய்
  • பழம்
  • வேர்
கொய்யா மரம்

ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கலோரி, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், ஃபோலேட், பீட்டா கரோட்டீன் முதலியவை.

மருத்துவ பயன்கள்: 

  • நான்கு அல்லது ஐந்து கொய்யா இலையை அரிந்து ஒரு காய்ந்த மிளகாயுடன் இளம்சூட்டில் வதக்கி போதுமான அளவிற்கு நீரில் கொதிக்கவைத்து பிறகு வேறு எதுவும் கலந்திராத வண்ணம் உண்டுவர கக்கல், சோர்வு, வாய்ப்பொருமல், உடலை மெலியச்செய்யும் நோய், நீர்வேட்கை போன்ற வியாதிகளை தீர்க்கும்.
  • இலையை மெய்ம்மையில் போட்டு மென்று பின் பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான பற்சொத்தை மற்றும் துர்நாற்றம் நீங்கும்.
  • மேல்தோலில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை குணப்படுத்த கொய்யா இலைகளை அரைத்து காயம் ஏற்பட்ட பகுதியின் மேல் தடவினால் விரைவில் குணமடையும்.
  • கொய்யாமர வேர்ப்பட்டையானது உலர்ச்சியை போக்குவதுடன், குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை சரி செய்ய உதவுகிறது.
  • கொய்யாப்பழத்தை இரண்டாக வெட்டி உண்ணுவதை விட பழத்தை சுத்தமான நீரில் கழுவி பின்பு பற்களால் கடித்து நன்றாக மென்று உண்ணுவதால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலப்படும் ஆற்றலை உருவாக்குகிறது.
  • கொய்யா மரத்தின் மெல்லிய வேர்களை சிறு சிறு துண்டுகளாக தண்ணீர் நிரப்பப்பட்ட மண் பானையில் சேர்த்து விடியற் காலையில் அருந்திவந்தால் வயிற்றுப் போக்கு குணமடையும்.
  • தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப் பகுதிபலம் பெற கொய்யா பழம் உதவிபுரிகிறது.
  • செம்பு சத்து அளவிற்கு அதிகமாக கொய்யா பழத்தில் இருப்பதால் "தைரொய்ட்" தொண்டை புண்களை சீரான தன்மையை ஏர்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்கிறது.
  • இரத்த ஓட்டம் குறைவதால் சருமம் வெளிறிப்போதல், உடல் சில்லிடும் அளவுக்கு மிகுந்த பயம் ஏற்படுதல் இரத்தத்தின் நீர்ம தன்மையை தடுக்கும் சக்தி கொய்யா பழத்திற்கு உண்டு.
  • வைட்டமின் சி மிகுந்த அளவு கொய்யா பழத்தில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்குகிறது.
  • புற்று நோய்வியாதிகளுக்கு கொய்யா பழம் மிக சிறந்த தீர்வாகுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • நீரிழவு நோயாளிகளுக்கு கொய்யா பழம் உண்ணுவது மிகவும் நல்லது.
  • கொய்யா நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளித்து, செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
  • எல்.டி.எல் ஆக்ஸைடுஎன்னும் தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
  • ஊட்டச்சத்து, இரத்தச்சோகை, ஹார்மோன் குறைபாடுகளால் வரும் ( இளநரை ) முடி வளர்ச்சியையும், கரு நிறத்தைபராமரிக்கவும் கொய்யா இல்லை உதவிபுரிகிறது.
  • ஆன்டி ஆக்சிடன்ட்கள் மூளையின் உற்பத்தியான நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் அதிகரிக்க செய்து, நினைவின்மை ஏற்படாமல் தடுக்கிறது.
  • நாம் நாசின் மூலம் சுவாசிக்கும் போது மாசடைந்த காற்றால் உடலுக்குள் செல்லும் நச்சுத்தன்மையை வெளியேற பயனுள்ளதாய் அமைகிறது.
முடிவுரை: 

இயற்கை வரமே! என்றும் கொய்யா மரமாக நோய் எதிர்ப்பு சக்தியை மேன்மைப்படுத்த கொய்யா மரங்களை ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் வீட்டிலும் வளர்பது மிக முக்கியம்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars