புளிச்ச கீரை
முகவுரை:
சித்த பாடல்களில் மூலம் புளிச்சிறு கீரை மனித குலத்திற்கு மறுமலர்ச்சியாக திகழ்ந்து வருகிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதன் மற்றொரு புனை பெயரான காச்ச கீரையென்றும் இதனை அழைப்பர்.
புளிச்சிறு கீரை:
சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களின் அதிகப்படியான அறிவுரை காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுவது போன்று பல வகை கீரையையும் அடிக்கடி சாப்பிடுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.நமது பாரத நாட்டில் எத்தனையோ வகையான கீரைகள் இயற்கையாகவே இந்த பூமியில் முளைக்கின்றன,அதிலும் அதிகம் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சில கீரை வகைகளே உள்ளன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஒன்று தான் புளிச்ச கீரை ஆகும். இந்த உணவில் சேர்த்துக்கொள்ளும்போது ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ பயன்கள்:
- புற்றுநோய்: உடலில் செல்களிநால் ஏற்படும் சில பல மாற்றங்களால் புற்று நோய் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகயளவு இப்பொது நடைமுறையில் நிலவுகிறது. பல வகையான இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய நோய் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. இவ்வகையான வியாதிகளை பூரணமாக முறியடிக்க புளிச்ச கீரையை அதிகளவில் உணவில் உட்கொள்ளபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை எளிதில் குறைக்கிறது.
- வயிற்று புண்கள்: காலை வேளையில் உணவு உண்ணும் பழக்கத்தை தவிர்ப்பதாலும், காலை உணவை மதியம் சாப்பிடுவதாலும், அதிகமான காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு உணவை செரிமாணம் செய்வதில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.குழம்பு, கூட்டுவகைகளில் சேர்த்து புளிச்ச கீரையை உண்ணுவதால் குடல் புண்களை ஆற்றி, மலச்சிக்கல் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.
- மாதவிடாய்: காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், மாதவிலக்கு தள்ளிப்போதால் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளால் இடுப்பு, அடிவயிறு வலி ஏற்பட்டு துன்புறுகின்றனர், இத்தகைய இயற்கை சூழலிலுருந்து விடுபட புளிச்ச கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீர்வை உண்டாக்கிறது.
- தோல் வியாதிகள்: சிறந்த இயற்கை நிவாரணமாக இருக்கும் புளிச்ச கீரையை நன்றாக அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் தடவிவந்தால் விரைவில் தோல் வியாதிகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது. அத்துடன் இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடண்டுகள் தலைமுடி, தோல் போன்றவற்றின் நலத்தை மேம்படுத்தி பாதுகாக்கின்றது.
- ரத்தசோகை: நமது உடலில் காணப்படும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியானது மிகவும் குறைவால் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. வைட்டமின் சத்துக்கள் புளிச்ச கீரையில் அதிகளவு நிறைந்துள்ளதால் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, ரத்த சோகை குறைபாட்டை போக்க நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது.
- நுண்கிருமி: (உடலில், உணவில் வாழும்) நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினம் நிறைந்த அமிலங்கள் கொண்ட ஒரு உணவு பொருளாகும். இதில் காணப்படும் காரத்தன்மை மிகுந்த வேதிபொருள் அனைத்துவகையான கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. புளிச்ச கீரையை வாரம் இருமுறை உணவில் உட்கொள்ளுபவர்களுக்கு அவர்களின் ரத்தம், செரிமான உறுப்புகள் போன்றவற்றில் தங்கியிருக்கும் தீமை விளைவிக்கும் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் (திட அல்லது திரவ வடிவில் இருக்கும்) மருந்தின் மூலம் அழித்து அவர்களின் உடலை வியாதிகளின் தாக்கத்தில் இருந்து காக்கிறது.
முடிவுரை:
பழங்கால முன்னோர்களின் கூற்றுகளை பின்பற்றி இயற்க்கை வளங்களை பாதுகாத்து இயற்க்கையோடு ஒன்றி சமுதாயத்தை பேணிக்காக்க அனைவரும் ஒற்றுமையாக திகழ பாடுபடுவோம்.
