எலுமிச்சை! சுவையே இன்பமானது...


எலுமிச்சை

“பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம்”

முகவுரை:

அதிகமான மரணத்தை ஏற்படுத்தும் நஞ்சு உடையாதாயிருக்கும், பித்தனாகிய சிவன் திருமுடியில் சூட்டும் ,காற்றை உட்கொள்ளும், அதனால் உடல் உப்பியும் காணப்பட்டுதலை மேலாக தூக்கி அசைந்தாடும், கோபமுடைய அனுகூலத்தினை பெற்றிருக்கும் என காளமேகப் புலவர் பாடும் பாடல்களில் பாம்பின் இராஜசம் பற்றி தேம்பொழியும் சோலைத் திருமலைராயன்(அரசன்) வரையில் பாம்பு எழுமிச்சம் பழம்!! என்றும்...

பெரியவர்களிடம் சேர்ந்து இருக்கும், பித்தனின் (சித்த ப்ரம்மை பிடித்தவர்களின்) சிரத்தின் மேல் தேய்க்கப்படும், ஊறுகாய் தயார் செய்ய எழுமிச்ச பழத்தை குறுக்கே அரியப்பட்டு உப்பை மேலே தூவப்பட்டிருக்கும், பிழிந்து எடுக்கப்படும் சாறு மெல்லிய பகுதியான தோல் மீது சிந்தினால் எரிச்சல் கூடிய தன்மை கொண்டது என காளமேகப் புலவர் பாம்பிறக்கும், எழுமிச்சபழத்திற்கும் உள்ள ஒற்றுமையின் வேற்றுமையை தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில் பாம்பு எழுமிச்சம் பழம்!! என்று பாடல்வரிகளின் மூலம் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

எலுமிச்சை:

எலுமிச்சை வெளிர் மஞ்சள் நிறத்தில் புறத் தோலையும் புளிப்புச் சுவையையும் உடைய, உருண்டை வடிவப் பழத்தைத் தரும் தாவரமாகும்.ஆசியாவை இதன் அடைக்கலமாக கொண்டு பூக்கும் தாவர இனத்தின் தன்மையாக (Citrus limon) சிட்ரஸ் லிமன் என்னும் அறிவியல் நாமத்தை கொண்டிருக்கிறது.

வெப்ப மற்றும் மிதவெப்ப நாட்டுப்பகுதிகளில் வளரும் இயல்பை கொண்டு, சிறிய வகை தாவர செடியான   எலுமிச்சை இந்தியாவில்  அசாம் மாநிலம், வடக்கு பகுதிகளில் பல தேசங்களில் தோன்றியிருக்கலாம் என பல கருத்துக்கள் நிலவியிருந்தாலும், பண்டைய காலத்தில் புலவர்கள் பாடிய பாடல்களிளும், வேளாண்மை தொடர்பான நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

எலுமிச்சை மரம், காய், பழம், பூ, இலைபழத்தின் தோல்  அனைத்துமே உபயோகமாகவும், மருத்துவத்திற்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்து நம் இந்திய நாட்டின் தேசிய காயாக எலுமிச்சை திகழ்ந்த வண்ணமாய் உருமாறியிருக்கிறது.

சத்துக்களின் வகைகள்:

  • கொழுப்பு
  • சுண்ணாம்புச் சத்து
  • நார்ச்சத்து
  • நீர்ச்சத்து
  • பொட்டாசியம்  
  • புரதம்
  • மாவுப்பொருள்
  • தாதுப்பொருள்
  • இரும்புச் சத்து
  • கரோட்டின்
  • தையாமின்
  • நியாசின்
  • பாஸ்பரஸ்
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் பி
  • வைட்டமின் சி
  • ரிபோஃப்ளோவின்

இயற்கை குணங்கள்:

  • இரத்த வெண்மைபெற உதவுகிறது. வாந்திபேதி முதலிய ஊழிக்காய்ச்சலின் போது நோய் தொற்றின் தாக்கத்தை தீர்க்க உதவுகிறது.
  • பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடலில் இருக்கும் நச்சுகைகளையும் வெளியேற்றம் செய்ய பயன்படுகிறது.
  • உடலின் அகலம், கொழுப்பு, நீரிழிவு போன்ற  பெருவியாதிகளுக்கு எலுமிச்சைச்சாறு ஏற்றது.
  • இரத்தத்தின் சுத்தத் தன்மைக்குக் காரணமான உயிரணுக்களை உற்பத்திசெய்யும் மண்ணீரலின்  வீக்கத்திலிருந்து விடுபடலாம்.
  • உடல் சோர்வினை அகற்ற எலுமிச்சம் பழ ரசத்தில் சிறிதளவு தேனை கலந்து உண்டுவரவேண்டும்.
  • உப்பின் மூலம் உடல் பருமையாதலை சீரான நிலைபெற எலுமிச்சை சாறு உதவுகிறது.
  • வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு கல்லீரலை வலுவடைய சிறந்தது.
  • கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுக் கொழுப்பு பொருளை செரிக்க உதவும் திரவமான பித்தநீர் சுரத்தலை சீரான நிலையை உருவாக்குகிறது.
  • நீர் சேர்வதற்காக கல்லீரலோடு இணைந்து அமைந்திருக்கும் பித்தப்பையில் கற்களை கரையச்செய்ய உதவுகிறது.
  • சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்திருப்பதுமான தசையால் ஆன உள் உறுப்புக்களின் குறைபாடுகளை தீர்க்க உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தின் காரணமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம், தலைசுற்றி மயக்கம் வரும் உணர்வு, வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதிகளின் வியாதிகளை நீக்கும் தன்மை வாய்ந்தது.
  • விரகநோய், பெரும்பாலும் நீரின் மூலமாகப் பரவுவதும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான வயிற்றுப்போக்கையும் வாந்தியையும் ஏற்படுத்துவதுமான நோய், வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றை புரட்டல், கண் சம்மந்தப்பட்ட நோய், காது வன்மை முதலியவற்றை குணப்படுத்தும் இயல்புடையது.
  • நீரில் எலுமிச்சம்பழத்தின் விதைகளை கொண்டு நன்றாக கொதிக்கவைத்த அதில் இருந்து வரும் ஆவியை முகத்தில் சுவாசம் செய்ய நீர்பினிசம் தீரும்.
  • நகக்கண்ணில வரும் ஒரு புண்வகையை தீர்க்க எலுமிச்சை பழத்தை துளையிட்டு விரலை அதனுள் உட்செலுத்தி வைத்தால் சூள் குறையும்.
  • தேள்கடித்த இடத்தில் எலுமிச்சை பழத்தை பாதியாக அறிந்து நன்றாக தேய்த்தால் விஷமானது குறையும்.
  • முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் சுருக்கங்கள் மறைய பாலேட்டில் எலுமிச்சை சாற்றை கலந்து தடவிவந்தால் நிவாரணம் அளிக்கும்.

முடிவுரை: 

நேர்மறையான கருத்துகளைத் தூண்டக்கூடியதாகவும், ஐந்து சதவீதம்  எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் புளிப்புசுவையை உண்டாக்குகிறது.  மேலும் ஹைட்ரஜன் திறன் PH அளவானது 2 முதல் 3 வரை இயற்கையாகவே இயல்பு தன்மையை பெற்று மனிதன்,விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும் ஆதாரமாய் இருக்கும் ஜீவனை பாதுகாக்க சக்தியை பெற்றிருக்கிறது.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars