தேவாரத்தில் "எள்ளை" பற்றி சுந்தரர் பாடலை "திருப்பாட்டு" என்று அழைக்கின்றனர்
முகவுரை:
"இகழ்தல் எண்டிசையோரும் எள்க" சீவக சிந்தாமணியிலும், "அஞ்சுதல் ஓர் பாலகன் வந்து என் மகளை எள்கி" நாலயிரதிவ்யப்பிரபந்தமும், "பழிவந்து மூடுமென்று எள்குதும்" திருச்சிற்றம்பலக்கோவையார் நூல்களிலும், "செங்களம் பற்றி நின்று எள்கு" திவ்யார்த்த தீபிகை பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியத்தில் “கௌவை அஞ்சிற் காம மெய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே,
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய சிதட்டுக்காய் எண்ணின் சில் பெயல்
கடைநாள்”குறுந்தொகை பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
செந்தமிழ் மொழியான தொல்காப்பியம் முதலாகச் சங்க இலக்கியம் வரையிலான அனைத்துத் தமிழ் இலக்கியங்களிலும் எள் குறித்த செய்திகளைத் விளக்கம் அளித்திருப்பது தமிழின்பம் படைத்ததாகும். எள் உற்பத்தி அதன் பயன்பாடு, உணவுப் பொருளாக அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை அனைத்தையும் கோர்வையாக படிப்பவர்களுக்கு மிக்க பயனுடைய வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கும்.
எள்:
எள்' என்பது எண்ணெய் வித்துப் பயிர், இதனை எள்ளுச்செடி என்பர். செடியில் காய்க்கும் காய்களினுள் பல வித்துக்கள்
இருக்கும். எள் தமிழ்நாட்டின் பழம்பெரும்பயிராகும். எண்ணெய் வித்துப்
பயிர்கலிலே முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. ஒன்பது வகைக்கூலங்களில்
எள்
தலையானது.
எள்ளை இருள், புள், வள், மக்கள் என்னும் என்னும் பெயர்க்குத்
சொற்களுக்கு புணர்ச்சிவிதி கூறுபவர். எள்ளிர்க்கு தொல்காப்பியர்
“புணர்ச்சி விதி” கூறவில்லை.
எள் வகைகள்:
- கார் எள்
- சிவப்பு எள்
- வெள்ளை எள்
- காட்டு எள்
- மயில் என்
- பேய் எள்
- காட்டுமயில் என்
- முலை எள்
- சிறு எள்
என எள் ஒன்பது வகைப்படும்.
எள் என்பது அளவில் சிறுமையின் அடையாளமாக கருதப் பெற்றது. கடுகினும் எள்
நுட்பமுடையது, கடுகில் பெருங் கடுகு உண்டு. எள்ளில் சிறியதே உண்டு. கடுகளவு
என்பதினும் எள்ளளவு என்பது மேலும் சிறுமையைக் குறிக்கும். இம்மி, தேர்த்துகள்
என்பன. எள்ளினும் சிறிய பரிமாணங்கள், "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்தகுறள்" எனக் கடுகு சிற்றெல்லைக்குக் கூறப்பட்டது.
"செந்தமிழ் என்பன சிறுமைக்குப் பேரெல்லை
கடல் என்பது பெருமைக்குப் பேரெல்லை"
எள் - எள்ளல், இகழ்தல், சிறியதெனக் கருதுதல் காள்ளல் - இகழ்ச்சி (தொழிற்பெயர்) எள்- எளிமை (பெருமையாகக் கருதாமை) எளியோர் - சிறியோர் திடப்பொருள்களில் மலை பெருமையை கூறுவார்கள். ஆனால் எள் எண்ணெய்வித்து பொருளாக இருந்தாலும் சிறுமையின் திரவப் (நீர்மை) பொருள்களாகும்.
தமிழ் பெயர்கள்:
- எள்ளின் பழம் பெயர் எண் ஆகும்
- எள் கார்ப் பருவப் பயிர்
- மழை மிகுதியாயின் எள்ளுக்காய் உள்ளீடு அற்றதாகும்.
வளரியல்பு:
நிலைத்திணை என்பதைத் தாவரம் என்பர். எள் தமிழக நன்செய்ப் பயிராகவும் கொல்லைப் பயிராகவும்
அமைந்திருந்தது. எள்ளுச் செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது.
வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
எள்ளுச்செடி 40 முதல் 120 செ.மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகள்
எதிரிடை அடுக்கில் அமைந்திருக்கும். தும்பை இலையை போன்று பெரிதாக
இருக்கும்.மேலும் வெண்மை நிறமான பூக்களை பூக்கும் தாவரமாகவும், மகரந்தச்
சேர்க்கையை பூக்களின் மூலமாகவே ஏற்படுத்திகொண்டு காயாக உருவாகும்.
காய்கள் ஆகாயத்தை பார்த்த வண்ணம் மேல் நோக்கி இருக்கும். ஒரு காயில்
சுமார் 50 லிருந்து 150 விதைகள் செடியின் தன்மைக்கேற்ற வகையில் இருக்கும் . காய்கள் முற்றியவுடன் அறுவடை
செய்து களத்தில் காய்கள் மேல் நோக்கி இருக்கும்படி வைத்து வெயிலில் உலரவைப்பார்கள். காய்கள்
நன்கு காய்ந்துமேல் முனையிலிருந்து வெடிக்கத் தொடங்கும். அச்செடிகளைத்
தலை கீழாக உலர்த்தி இலேசாகத் தட்டினால் எள் களத்தில் விழத் தொடங்கும் எள்
மென்மையாகவும் கருப்பாகவும் இருக்கும்.
எள் ஒரு வெப்பமண்டலப் பயிர். இந்தியாவில் வெப்பமான பகுதிகளில் விளைகிறது.
மற்ற அயல் தேசங்களிலும் எள் பயிரிடப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவும்
சீனாவும், என் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முதலிடம் பெறுகின்றன.
தமிழில் எள், எள்கு என வழங்கப்பெறும் இத்தவசம்,
தெலுங்கில் நுவளுவு என்றும் மலையாளத்தில்
கருத்தெள்ளு எனவும், சமற்கிருதத்தில் தில் எனவும்
ஆங்கிலத்தில் (Gingeli Sesamum) என்றும் வழங்கப்பெறுகின்றது.
எள், எள்ள, எள்ளப்படு, எள்ளல், எள்ளலன், எள்ளலான், எள்ளார், எள்ளி, எள்ளிய
எள்ளிலும், எள்ளுள், எள்ளு, எள்ளுக, எள்ளுதல் எள்நர், எள்ளுபு, எள்ளும்,
எள்ளுமார் எள்ளுவாய், எள்ளுற்று என்ற பல வினைச் சொற்களும்
இதற்குண்டு...
தமிழ் மொழியில் சங்ககாலம் தொட்டே எள் பற்றிய குறிப்புகள் உண்டு, எள் குறித்த வினைச்சொற்கள் பெயர்ச்சொற்கள் பழமொழிகள் மொழியில் மிகுந்து காணப்படுகின்றன.
பழமொழி:
மூலிகை தரும் எள்:
- எள், இலை, பூ, காய், விதை, என அனைத்தும் தமிழர் வாழ்வியலில் எள் மூலிகையாகவும், உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- எள்ளினது நெய்யினால் இயற்கையுணர்வு தெளிவு, விழிக்குக் குளிர்ச்சி, மனமகிழ்ச்சி, தேகபுஷ்டி பலம், வாலிபத் தன்மை ஆகிய குணங்கள் உண்டாகும்.
- உடல் நலம் பாதிப்பு ஏற்படுத்தும் நோய், கபால வெப்பம், காசம், இரணம், நீங்கும்.
- தாவரங்களிலிருந்து எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய் ( தைலம்) மூலிகையை இணைத்து எண்ணெயைச் சேர்ப்பதால், மூலிகையின் முழுப் பயனையும் தரும் ஆற்றல் உடையது.
- தாமிரம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் இ, மக்னீசியம், இரும்புச்சத்து, துத்த நாகம், வைட்டமின் பி முதலிய ஆரோக்கியமான புரதம் நார்ப்பொருள் அமினோ அமிலங்களும் எள்ளில் அதிகமாகக் காணப் படுகின்றன.
- எள்ளு இலைகளை நன்றாக அரைத்து (உடலில் தோன்றும்) கெட்டியான புடைப்பு ஏற்பட்ட இடத்தில் மேல் தடவி வந்தால் மறையும் ஆற்றலை உண்டாக்கும்.
- இலை மற்றும் வேர் இரண்டையும் அரைத்துத் தலையில் மேல் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
- கண், காதுகளில் நல்ல எண்ணெய் விடுவதின் தூய்மை செய்ய பெரிதும் பயன்படுகிறது.
- எள்ளு பூவானது கண்நோய்களை தீர்க்கும் வலிமை வாய்ந்தது.
எள்ளின் குணத்தையும் அதன் ஆற்றலையும் சங்க தமிழ் நூல்களில் பயன்படும் விதத்தையும் செந்தமிழ் மொழியின் மூலம் விளக்கி இயற்கை படைத்த உயிர்களுக்கு ஆற்றும் அளவில்லாத பயன்களே ஆகும்.

