முகவுரை:
வியப்பைத் தரும் வகையில் சிறப்பை பெற்றிருக்கும் அரிவாள்மனை பூண்டு! அல்லது அரிவாள் மூக்கு பச்சையிலை (சித்தா) பூக்கும் தாவர வகையான மால்வேசியே இனத்தை சேர்ந்தவையாகும்.
பூமியில் முளைத்து நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்ந்து எல்லா சூழல்களிலும் வாழக்கூடிய சிறு வகை ( சிடாஅக்யூட்டா ) தாவரமாக இருந்தாலும் அணைத்து பகுதிகளிலும் பயிருடன் வளரும் புல் பூண்டுகளாகவும் வளர்ந்து விவசாயம் செய்ய (பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படும் )ஊட்டச்சத்து (உடல்) வலிமை, பலம் பெறவும் அறிவியலின் விதிகளால் விளக்கப்பட முடியாத நிகழ்ச்சி ஏற்படுத்தி உழவனுக்கு ஊக்கத்தை தந்து பயிர்கள் இயற்க்கை வளம்பெற்று வளர ஊன்றுகோலாய் திகழும் வண்ணமாய் இன்றளவும் உள்ளது.
தோற்றம்:
அனைத்து விதமான மண் வகைகளிலும் செழித்து வளரும் ஆற்றல் உடையது. அதிலும் செம்மன் நிலங்களில் உடனடியாக தன் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆற்றலை பெற்றது. கூரிய வடிவில் இலைகளை உடையதாகவும், மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர் காலத்தில் காடுகள், மலைகள், நிலங்கள், சாலையோரங்களிலும் இயற்கையாகவே முளைக்கும் சிறு செடி இனத்தை சேர்ந்தவையாகும்.
அரிவாள்மனைப் பூண்டு விதைகள் மூலமாகவே தன் இனத்தின் பெருக்கத்தை அபிவிருத்தி செய்துகொள்ளும் திறனை உடையது.
இந்தியா, இலங்கை மற்றும் பிற தேச பகுதிகளிலும் புல் பூண்டுகளாக முளைத்து 30 செ.மீ. வரை வளரும் தன்மை கொண்டது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மிகுதியாக இருந்தாலும் ஆண்டு முழுவதும் ஈரப்பதம் இருக்கும் இடங்களில் காணப்பட்டு வருகின்றன.
சிறுகாஞ்சொறிச்செடி என்று அழைக்கப்படும் அரிவாள்மனைப் பூண்டு மஞ்சள் நிறப் பூக்களுடன் கூறிய சிறு சிறு இலைகளைக் கொண்டும், தண்டும் இதன் வேர்பகுதியும் மிக உறுதி தன்மை வாய்ந்ததாக உள்ளது.
பயன்பாடு:
பல தலைமுறைகளாக மருத்துவ துறைகளிலும் அரிவாள் மூக்கு பச்சையிலை தாவரத்தின் இலை, தண்டுகள், வேர்கள் இந்தியாவிலும், ஆப்ரிக்காவிலும் மிக முக்கிய பங்கு ஆற்றிவருகிறது.
நைஜீரியாவின் தொன்மை மரபு வைத்தியத்தில் மலேரியா, (கர்ப்பப்பையில் அல்லது முட்டையில் வளர்ச்சியின்) ஆரம்ப நிலையில் இருக்கும் உயிர் (கருக்கலைதல்) குறைகளைத் தீர்க்கிற இயற்கை மருந்தாக உதவி செய்கிறது.
மேலாண்மை செய்யும் மாவட்டங்கள்:
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மருந்துக்காக பயன்படுத்தப்படும் அரிவாள்மனைப் பூண்டு செடிகள், இலைகள்,வேர், தண்டு இவைகளை பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம் நிலங்களிலும், விவசாய நிலங்களிலிருந்தும் ஒன்றுசேர்த்து இலைகளை உலரவைத்து பலவிடத்திருந்து ஓரிடத்தில் கொள்ளல் விற்றற்கு கூடுமிடத்தில் ( அங்காடி ) வியாபாரிகளிடம் விற்பனை செய்யது வருகின்றனர்.
அற்புதத்தை அள்ளித்தரும்... அரிவாள்மனை பூண்டை தமிழ்நாடு மாவட்டங்களான வேலூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும், மேலும் ஆந்திரா மாவட்டமான அனந்தப்பூரிலும் மிகுதியான அளவில் சேகரிக்கப்பட்டு (நோய், காயம் முதலியவற்றை) குணப்படுத்தும் மருந்துபொருள்களுக்கு பயன்படுகிறது.
மூலிகை பயன்கள்:
- அரிவாள்மனைப் பூண்டின் வேர் பொடி (கட்டுப்பாடு இல்லாமல் உடல் உறுப்புகள் ஆடுகிற வகையில்) நரம்பில் ஏற்படும் உறுதிக் குலைவு தீர்க்க வல்லது.
- (பொடி) நினைவிற் கொள்ளும் ( ஞாபகம் ) சக்தியை அதிகரிக்க நன்மை வாய்ந்தது.
- உடலிலிருந்து ஆண்,பெண் இருபாலருக்கும் பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேறும் உப்புநீர் தூய்மை படுத்த ஆற்றலை அதிகரிக்கிறது.
- முறையற்ற உடல் உறுகையால் விளைவிக்கும் பாதிப்புக்களை குணப்படுத்த( அரிவாள்மனைப் இலை பொடி ) உதவிபுரிகிறது.
- செயல்படுவதற்குத் தேவையான வலு இல்லாத நிலை ( பலவீனம் ) சரிசெய்ய சிறிதளவு பொடியை தினந்தோறும் உணவிற்கு பிறகு உண்ணுவந்தால் சீரான நிலையடைய வழியை பிறப்பிக்கும்.
- குரல்வளையில் ஏற்படும் நாவரட்ச்சி, குரலடைப்பு ( கம்மல் ) போன்ற பாதிப்புக்களை சரிசெய்ய தேனுடன் அரிவாள்மனைப் பூண்டின் தூளை கலந்து பருகிவந்தால் இயற்கையான நிலையடையும்.
- வேர், விதைகளை மென்மையாக அரைத்து நாட்டு சர்கரையுடன் கலைந்து தினந்தோறும் காலை, மாலை, இரவு வேலைகளிலும் உண்டுவந்தால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு ( எரிச்சல் )குணமாகும்.
- வேலம்பட்டை, சர்க்கரை, படிகாரம் முதலியவற்றைப் போட்டுத் தயாரிக்கும் நாட்டுச் சாராயதின் மூலம் ஏற்படும் தொண்டை எரிச்சலை குணப்படுத்த அரிவாள்மனைப் பூண்டின் வேரை சிறு துண்டுகளாக வெட்டி தேவையான அளவு நீரில் கொதிக்க வைத்து வற்றிய தருவாயில் நீரை முழுமையாக வடிகட்டி அருந்தினால் குணமடையும்.
- பொழுது விடியும் நேரத்தில் குடித்து வர சுவாசிப்பதற்கும் வாசனையை அறிவதற்கும் பயன்படுகிற உடல் உறுப்பு (மூக்கு), வாய் மற்றும் உடலில் சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவத்தைக் கட்டுப் படுத்தும் பணியை செய்ய உதவிபுரிகிறது.
- இரத்தப் பெருக்கு தடுக்க அரிவாள்மனைப் பூண்டின் இலையை வெட்டுக் காயத்தின் மீது கசக்கிப்பிழிந்தால் உடனடியாக தடுக்கும் ஆற்றலை பெற்றது.
- இரும்பு, கல், மரத்தால் ஆன கருவிகளால் ஏற்படுகின்ற பெருங்காயத்தை குணப்படுத்த அரிவாள் மூக்குப் பச்சிலை வலிமை வாய்ந்தது.
- கடுமையான மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருளான (நஞ்சு) தலை வலியை தீர்க்க அரிவாள் மூக்குப் பச்சிலை, குப்பை மேனி இலை சிறிது மிளகு பூண்டு சேர்த்து மைய அரைத்து (மருந்துக்காகவோ உடல்நிலையைப் பொறுத்தோ எதை விலக்க வேண்டும், எதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற) உணவுக் கட்டுப்பாடு அல்லது விதிமுறைகளை (பத்தியம்) மேற்கொண்டால் உடனடியான தீர்வை உண்டாக்கும்.
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற பழமொழியின் தத்துவத்திற்கேற்ப அணைத்து இடங்களில் வளரும் அற்பமானதாக நாம் நினைக்கும் எண்ணத்தை முறியடித்து தக்க தருணத்தில் அணைத்து உயிரினங்களுக்கும் உதவும் ஆற்றல் பெற்றதை பேணிகாக்க இயற்கை வழியை பின்பற்றி சுற்றுப்புற சூழலையும் பாதுகாப்போம்.
